கொஞ்சம் மரியாதை கொடுங்க.. விஜய் சேதுபதிக்காக களத்தில் குதித்த பாக்யராஜ் மகன்.. அப்படி என்ன ஆச்சு?

சென்னை: விஜய் சேதுபதி நடிப்பில் கடைசியாக விடுதலை 2 திரைப்படம் வெளியானது. அந்தப் படம் ஓரளவுக்கு வரவேற்பை பெற்றது. அதேசமயம் அந்தப் படத்துக்கு முன்னதாக அவர் நடித்திருந்த மகாராஜா திரைப்படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. இந்தியா மட்டுமின்றி சீனாவிலும் அந்தப் படத்துக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. தற்போது ட்ரெய்ன் படத்தில் நடித்துவரும் அவர்; அடுத்ததாக பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார்.

தமிழ் சினிமாவில் நல்ல நடிகர் என்று பெயர் எடுத்தவர் விஜய் சேதுபதி. ஆரம்பத்தில் ஏகப்பட்ட கஷ்டங்களை சந்தித்த அவர் தென்மேற்கு பருவக்காற்று படத்தில் ஹீரோவாக அறிமுகமானார். அந்தப் படம் நல்ல வரவேற்பை பெற்றது. அதனையடுத்து அவர் நடித்த படங்கள் வரிசையாக ஹிட்டடிக்க ஆரம்பித்தன. இதன் காரணமாக கோலிவுட்டின் தவிர்க்க முடியாத ஹீரோவாக மாறினார் அவர். ஒரே மாதிரியான கேரக்டர்களை தேர்ந்தெடுக்காமல் வித்தியாசமாக தேர்ந்தெடுத்து நடிக்க ஆரம்பித்தார். எனவே இந்திய அளவிலும் ஃபேமஸ் ஆனார்.

ஹிந்தியில் சேதுபதி: தமிழ், தெலுங்கு மொழிகளில் மட்டும் நடித்துவந்த அவர் ஹிந்தியில் ஃபர்ஸி வெப் சீரிஸில் அறிமுகமானார். அது நல்ல வரவேற்பை பெற்றது. அந்த வெப் சீரிஸின் வெற்றிக்கு பிறகு ஜவான் படத்தில் வில்லனாகவும், மெரி கிறிஸ்துமஸ் படத்தில் லீட் ரோலிலும் நடித்தார். அந்த இரண்டு படங்களுமே மிகப்பெரிய வரவேற்பை பெற்றன. இதற்கிடையே தமிழிலும் வில்லனாக நடித்த அவர் மீண்டும் ஹீரோவாகத்தான் தொடர வேண்டும் என்று அவரது ரசிகர்கள் கோரிக்கை வைக்க ஆரம்பித்தார்கள்.

மீண்டும் ஹீரோ: ரசிகர்களின் கோரிக்கைக்கேற்ப மீண்டும் கதாநாயகனாக நடிக்க ஆரம்பித்த சேது, தனது 50ஆவது படமாக மகாராஜா படத்தில் நடித்தார். படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. நித்திலன் சுவாமிநாதன் இயக்கியிருந்த அந்தப் படம் இந்தியா மட்டுமின்றி சீனாவிலும் பிரமாண்ட வரவேற்பை பெற்றது. இதன் காரணமாக இன்னொரு நாட்டு மக்களிடையேயும் விஜய் சேதுபதி ஃபேமஸ் ஆகிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல் தொடர்ந்து ஹீரோவாக நடித்து அவர் வெற்றி பெற வேண்டுமென்பதுதான் ரசிகர்களின் ஆவலாக இருக்கிறது.

Shanthanu Supports Vijay Sethupathi Here are Full Details

மிஷ்கினுடன் கூட்டணி: இப்போது அவர் மிஷ்கின் இயக்கத்தில் ட்ரெய்ன் படத்தில் நடித்துவருகிறார். கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துவரும் அந்தப் படத்தின் மீதும் பலரது கவனம் இருக்கிறது. ஏனெனில் நடிப்பில் கவனம் செலுத்திய மிஷ்கின் நீண்ட நாட்கள் கழித்து இயக்கத்துக்கு வந்திருக்கிறார். அதேபோல் சேதுபதியும் முதன்முறையாக மிஷ்கினுடன் இணைந்திருப்பதும் எதிர்பார்ப்பு எழுவதற்கு வழிவகுத்தது. அடுத்ததாக அவர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார். அதுகுறித்த அறிவிப்பு நேற்று வெளியானது.

அமுத பாரதியின் கருத்து: இந்நிலையில் திரை விமர்சகர் அமுத பாரதி என்பவர் இந்தக் கூட்டணி தொடர்பாக தனது எக்ஸ் தளத்தில், "மகாராஜா திரைப்படம் வெற்றி பெற்ற பிறகு விஜய் சேதுபதி தன்னை இயக்கப்போகும் இயக்குநர்களை புத்திசாலித்தனமாக தேர்ந்தெடுப்பார் என்றுதான் நினைத்தேன். ஆனால் அவர் அவுட்டேட்டட் இயக்குநர் பூரி ஜெகன்நாத்துடன் இணைகிறார்" என்று குறிப்பிட்டிருந்தார். இந்த ட்வீட் சமூக வலைதளங்களில் ட்ரெண்டான சூழலில் நடிகரும், பாக்யராஜின் மகனுமான சாந்தனு பதிலடி கொடுத்திருக்கிறார்.

சாந்தனு பாக்யராஜின் கருத்து: அவர் தனது எக்ஸ் பதிவில், "யாரை பற்றியும் அப்படி சொல்லாதீர்கள். பொதுவெளியில் வார்த்தைகளை புத்திசாலித்தனமாக பயன்படுத்த வேண்டும். அவர் ஒரு புகழ்பெற்ற புகழ்பெற்ற படைப்பாளி. அடுத்தவருக்கு நாம் கொஞ்சம் மரியாதை கொடுக்க வேண்டும். உங்களிடமிருந்து இதை நான் எதிர்பார்க்கவில்லை" என்று குறிப்பிட்டிருந்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X