யாருக்கும் இந்த நிலைமை வரக்கூடாது.. புற்றுநோயுடன் போராடும் மனைவி.. ‘தி பேமிலி மேன்‘ நடிகர் உருக்கம்!

சென்னை: பிரபல இந்தி நடிகரும், வெப் சீரிஸ் உலகில் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ள ஷாரிப் ஹாஷ்மி, தனது மனைவி நஸ்ரீன் ஹாஷ்மி புற்றுநோயுடன் போராடி வருவது குறித்து உருக்கமான பதிவு ஒன்றை பகிர்ந்து ரசிகர்களை கண்கலங்க வைத்துள்ளார். இதுவும் கடந்து போகும் என்று நம்பிக்கையுடன் அவர் கூறியிருப்பது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது

அவர் அண்மையில் அளித்த பேட்டியில், தனது மனைவி நஸ்ரீன் கடந்த 2018ஆம் ஆண்டு வாய்ப்புற்றுநோயால் பாதிக்கப்பட்டதாக ஷாரிப் ஹாஷ்மி தெரிவித்துள்ளார். அதன்பிறகு பலமுறை நோய் மீண்டும் தாக்கியதாகவும், தற்போது ஆறாவது முறையாக புற்றுநோய் பரவி இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். இந்த தகவல் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மனைவியின் உடல்நிலை குறித்து பேசும்போது உணர்ச்சிவசப்பட்ட ஷாரிப் ஹாஷ்மி, "அவர் தான் என் மிகப்பெரிய தைரியம். கடினமான காலங்களில் கூட என்னை நம்பிக்கையுடன் நிற்க வைத்தவர் நஸ்ரீன் என கூறியுள்ளார். பல சிகிச்சைகள், அறுவை சிகிச்சைகள் மற்றும் மருத்துவமனையில் அவர் இருந்த நாட்கள் இருவரும் சேர்ந்து எதிர்கொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Bollywood Actor cancer
Photo Credit:

நடிகர் ஷாரிப் ஹாஷ்மி: திரை உலகில் பெரிய வாய்ப்புகள் கிடைக்காமல் தவித்த காலத்திலும், தனது கனவுக்காக மனைவி நகைகளை கூட விற்று உதவியதாக ஷாரிப் ஹாஷ்மி உருக்கமாக நினைவுகூர்ந்துள்ளார். தற்போது அவர் தனது இன்ஸ்டாகிராமில் புற்றுநோயால் போராடி வரும் மனைவியின் போட்டோவை ஷேர் செய்து இதுவும் கடந்து போகும் என பதிவிட்டுள்ளார். இந்த போட்டோவை நடிகை குஷ்பு சுந்தர் லைக் செய்துள்ளார்.

'தி பேமிலி மேன்: ஷாரிப் ஹாஷ்மி வாழ்க்கையில் The Family Man தொடர் மிகப்பெரிய திருப்பு முனையை ஏற்படுத்தியது. அமேசான் பிரைம் வீடியோவில் வெளியான The Family Man இந்தியாவின் மிகவும் பிரபலமான வெப் தொடர்களில் ஒன்றாகும். ராஜ் & டிகே இயக்கிய இந்த தொடரில் மனோஜ் பாஜ்பாய் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஒரு சாதாரண குடும்ப மனிதராக தோன்றும் நாயகன், ரகசிய புலனாய்வு அமைப்பில் பணிபுரியும் அதிகாரியாக இரட்டை வாழ்க்கை வாழ்வதே கதை மையமாக கொண்டு இருந்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X