திரைத்துறையில் புதிய விவாகரத்து?.. திருமணமாகி 3 வருடங்களில் எங்கேயும் எப்போதும் ஷர்வானந்த் டைவர்ஸ்?

ஹைதராபாத்: தமிழில் எங்கேயும் எப்போதும் படத்தில் நடித்து பிரபலமானவர் நடிகர் ஷர்வானந்த். அதில் அனன்யாவுக்கு ஜோடியாக நடித்திருப்பார். தமிழில் அவர் இந்தப் படமும், நாளை நமதே என்ற படத்தையும் மட்டும்தான் செய்திருக்கிறார். அதேசமயம் தெலுங்கில் அவர் எக்கச்சக்க படங்களை செய்திருக்கிறார். இந்நிலையில் அவர் தன் மனைவி ரக்ஷிதா ஷெட்டியின் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமிலிருந்து நீக்கியிருக்கிறார். எனவே அவர் விவாகரத்து செய்யவிருப்பதாக கூறப்படுகிறது.

தெலுங்கில் விளம்பரங்களில் நடித்து பிரபலமானவர் ஷர்வானந்த். இவர், ராம்சரண், ராணா டகுபதி ஆகியோர் வகுப்பு தோழர்கள் ஆவர். அந்த விளம்பரத்துக்கு பிறகு சங்கர் தாதா எம்பிபிஎஸ் படத்தில் சிரஞ்சீவியுடன் ஒரு ரோலை செய்திருந்தார். அதனையடுத்து ஹீரோவாகவும் வளர் ஆரம்பித்தார். அதன்படி வெண்ணிலா, சங்கராந்தி, லட்சுமி, க்ளாஸ் மேட்ஸ் உள்ளிட்ட படங்களில் நடித்தார். வரிசையாக அவருக்கு படங்கள் வந்தாலும் பெரிய பிரேக் எதுவும் கிடைக்காமல் சுமார் ஹிட்டுகளே வந்தன.

Sharwanand Deletes Wife Rakshita Shetty s Photos Divorce Rumours Resurface
Photo Credit:

பிஸியான நடிகர்: அதனையடுத்து அவர் நடித்த ரன் ராஜா ரன் திரைப்படம் சூப்பர் வரவேற்பை பெற்றது. அந்தப் படத்தின் வெற்றி அவருக்கென்று இருந்த மார்க்கெட்டை மேற்கொண்டு உயர்த்தியது. மேலும் வேற்று மொழிகளிலும் நடிக்க ஆரம்பித்தார். அதன்படி தமிழில் நாளை நமதே திரைப்படத்தில் நடித்தார். அது சரியாக போகவில்லை. அதை முடித்துவிட்டு எங்கேயும் எப்போதும் படத்தில் நடித்தார். படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. அந்த வெற்றி தொடர்ந்து கோலிவுட்டில் அவரை கவனம் செலுத்த வைக்கும் என்று பலரும் நினைத்தார்கள். ஆனால் அவரோ டோலிவுட்டிலேயே இருந்துவிட்டார்.

Also Read
விஜய்யை எதிர்க்கும் பிக்பாஸ் ஜூலி.. வனிதா விஜயகுமார் இப்படி சொல்லிட்டாங்களே ப்பா
விஜய்யை எதிர்க்கும் பிக்பாஸ் ஜூலி.. வனிதா விஜயகுமார் இப்படி சொல்லிட்டாங்களே ப்பா

96 ரீமேக்: தமிழில் வெளியாகி பட்டையை கிளப்பிய 96 திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக்கான ஜானு படத்தில் இவர்தான் நடித்திருந்தார். தமிழில் அந்தக் கதைக்கு விஜய் சேதுபதி தன் நடிப்பால் எவ்வளவு நியாயம் செய்திருந்தாரோ அதே அளவுக்கான நடிப்பை ஷர்வானந்த்தும் அந்தப் படத்தில் கொடுத்திருந்தார். விரைவில் அவர் தமிழில் மீண்டும் நடிக்கலாம் என்றும்; சரியான கதைக்காக காத்திருக்கிறார் என்றும் கூறப்படுகிறது. இதற்கிடையே அவர் கடந்த 2023ஆம் ஆண்டு ரக்ஷிதா ஷெட்டி என்பவரை திருமணம் செய்துகொண்டார்.

பிரமாண்டமாக நடந்த திருமணம்: அவர்களது திருமணம் ஜெய்பூரில் இருக்கும் லீலா பேலஸ் ஹோட்டலில் நடந்தது. ரக்ஷிதா ஷெட்டி ஆந்திர உயர் நீதிமன்றத்தில் பெரிய வழக்கறிஞரின் மகள் ஆவார். திருமணத்துக்கு பிறகு அவர்களுக்கு ஒரு மகளும் பிறந்தாள். சூழல் இப்படி இருக்க அவர்கள் இரண்டு பேருக்கும் விவாகரத்து நடக்கவிருக்கிறது என்று கடந்த வருடத்தில் பேச்சுக்கள் கிளம்பின. ஆனால் அதனை இரண்டு பேருமே திட்டவட்டமாக மறுத்துவிட்டார்கள். இந்நிலையில் ஷர்வானந்த் செய்திருக்கும் செயல் ஒன்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விவாகரத்து உறுதியா?: அதாவது திருமணமாகி இத்தனை வருடங்களில் தனது மனைவியின் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமிலிருந்து நீக்காமல் இருந்தார். இப்போதோ அவர் அவற்றை நீக்கிவிட்டார். எனவே அவர்கள் இரண்டு பேருக்கும் விவாகரத்து உறுதியாகிவிட்டது என்று ரசிகர்கள் பேச தொடங்கிவிட்டார்கள். ஏனெனில், பொதுவாக திரைத்துறையில் விவாகரத்து செய்பவர்கள் எல்லாம் தங்கள் துணையின் புகைப்படங்களை இன்ஸ்டாவிலிருந்து முதலில் நீக்குவார்கள். பிறகு அறிவிப்பார்கள். அப்படித்தான் ஆர்த்தி ரவி, ஹன்சிகா மோத்வானி, சமந்தா உள்ளிட்டோர் செய்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X