ஷில்பா, ஷில்பான்னு கிடக்கும் சோஷியல் மீடியா: யாருப்பா அந்த ஷில்பா?
சென்னை: ட்விட்டர் பக்கம் சென்றால் ஷில்பா தான் வைரலாகிக் கொண்டுருக்கிறார்.
சமூக வலைதளங்களில் டிரெண்டாகியுள்ள ஷில்பா வேறு யாரும் அல்ல நம்ம விஜய் சேதுபதி தான். ஆரண்ய காண்டம் படம் புகழ் தியாகராஜன் குமாரராஜா இயக்கி வரும் படம் சூப்பர் டீலக்ஸ்.
இந்த படத்தில் விஜய் சேதுபதி திருநங்கை ஷில்பாக நடிக்கிறார்.
புகைப்படம்
விஜய் சேதுபதி திருநங்கை கெட்டப்பில் இருக்கும் புகைப்படம் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. முன்னதாக கடந்த ஆண்டும் கூட ஒரு புகைப்படம் வெளியாகி பார்ப்பவர்களை எல்லாம் வியக்க வைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய் சேதுபதி
தமிழ் திரையுலக நடிகர்கள் பெண் வேடம் அணிவது புதிது அல்ல. இந்நிலையில் தான் விஜய் சேதுபதியும் திருநங்கையாக நடித்து வருகிறார். சீதக்காதி படத்தில் அடையாளமே தெரியாத அளவுக்கு வயதான கெட்டப், சூப்பர் டீலக்ஸில் திருநங்கை என்று வர வர கெட்டுப்புகளிலும் வித்தியாசம் காட்டி வருகிறார் விஜய் சேதுபதி.

ஃபஹத் பாசில்
சூப்பர் டீலக்ஸ் படத்தில் நடிப்புக்கு பெயர் போன ரம்யா கிருஷ்ணன், ஃபஹத் பாசில் ஆகியோரும் உள்ளனர். படம் குறித்து எந்த தகவலும் கசியாமல் படக்குழு பார்த்துக் கொண்டு வருகிறது. விஜய் சேதுபதி படம் முழுக்க ஷில்பாவாகத் தான் வருகிறாரா, அவருடைய கதாபாத்திரம் எத்தகையது என்பது குறித்து தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.

சூப்பர் டீலக்ஸ்
சூப்பர் டீலக்ஸ் படத்தை இந்த ஆண்டு இறுதியில் வெளியிட திட்டமிட்டுள்ளார்களாம். அப்படி என்றால் இந்த கிறிஸ்துமஸ் விஜய் சேதுபதி கிறிஸ்துமஸா?. மணிரத்னம் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள செக்கச் சிவந்த வானம் படம் வரும் 28ம் தேதி வெளியாக உள்ளது. சூப்பர் டீலக்ஸ் படம் மூலம் முதன்முதலாக சமந்தா விஜய் சேதுபதியுடன் சேர்ந்து நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











