ஜெயிலர் மற்றும் கூலி படங்களில் நடித்த டாப் நடிகர்கள் இணைந்து நடித்துள்ள ’45’ இந்த மாதம் ரிலீஸ்!

பெங்களூர்: ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்தில் நடித்த கருநாட சக்கரவர்த்தி மற்றும் கூலி படத்தில் நடித்த கன்னட நடிகர் உபேந்திரா இருவரும் இணைந்து நடித்துள்ள கன்னட திரைப்படம் இந்த மாதம் கிறிஸ்துமஸ் வெளியீடாக திரைக்கு வருகிறது.

சிறையில் இருக்கும் பிரபல கன்னட நடிகர் தர்ஷனின் 'டெவில்' திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியான நிலையில், இந்த மாதம் சிவராஜ்குமார், உபேந்திராவின் தரமான சம்பவத்தை காண கன்னட ரசிகர்கள் காத்துக்கிடக்கின்றனர்.

Shiva Rajkumar and Upendra starrer 45 the movie will release on this Christmas

சுரஜ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், சிவராஜ்குமார், உபேந்திரா, ராஜ் பி. ஷெட்டி ஆகியோர் நடித்துள்ள "45: த மூவி" டிரைலர் டிசம்பர் 15 வெளியாகிறது. அர்ஜுன் ஜன்யா இயக்கி இசையமைத்துள்ள இத்திரைப்படம், டிசம்பர் 25 அன்று பிரம்மாண்டமாக திரைக்கு வர உள்ளது. ஏற்கனவே வெளியான போஸ்டர்கள், டீசர்கள் ஆகியவை ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளன.

கன்னடத் திரையுலகின் துணிச்சல் மிகுந்த, புதுமையான படைப்பான '45: த மூவி'யின் தனித்துவமான கதையையும், புதுமையான திரைக்கதையையும் டிரைலர் முழுமையாக வெளிப்படுத்தும். டிசம்பர் 15 அன்று வெளியாகும் இந்த டிரைலர் தேசிய அளவில் கூட பெரும் ஆவலை ஏற்படுத்தியுள்ளது.

Shiva Rajkumar and Upendra starrer 45 the movie will release on this Christmas

சமீபத்திய போஸ்டர்கள், நட்சத்திரங்களின் புதுமையானத் தோற்றங்களை வெளிப்படுத்தி, படத்தின் மர்மத்தையும், ஆர்வத்தையும் அதிகரித்தன. கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி டிசம்பர் 25 அன்று மெகா வெளியீட்டிற்கான பணிகள் வேகமாக நடைபெறுகின்றன.

டாக்டர் கே. ரவி வெர்மா மற்றும் குழுவின் சண்டைக் காட்சிகள், சத்யா ஹெக்டேவின் ஒளிப்பதிவு, கே.எம். பிரகாஷின் படத்தொகுப்பு, அனில் குமாரின் வசனங்கள், ஜானி பாஷாவின் நடன அமைப்புகள் ஆகியவை '45: த மூவி'யின் தரத்தை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்கின்றன.

அடுத்த ஆண்டு நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் 2 படத்திலும் சிவராஜ்குமார் மீண்டும் அதிரடி கிளப்ப காத்திருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X