பொண்ணா இருந்தா கமலை கல்யாணம் பண்ணியிருப்பேன்.. அவரை கட்டிப்புடிச்சுட்டு 3 நாள் குளிக்கல - சிவராஜ்குமார்!

சென்னை: இயக்குநர் அருண் ஜன்யா இயக்கத்தில் சிவராஜ்குமார், உபேந்திரா நடிப்பில் உருவாகியுள்ள '45' படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவை சென்னையில் படக்குழு நடத்திய நிலையில், சிவராஜ்குமார் மற்றும் உபேந்திரா கலந்துக் கொண்டு ஜெயிலர் 2 மற்றும் கூலி படங்கள் தொடர்பான அறிவிப்புகளை அள்ளி தெளித்து தமிழ் சினிமா ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தினர்.

ரஜினிகாந்த் குறித்தும் கமல்ஹாசன் குறித்தும் சிவராஜ்குமார் வெளிப்படையாக பல விஷயங்களை பேசினார். இளைய நிலா பொழிகிறதே பாடலை அவர் மேடையில் பாடியும் ரசிகர்களை கவர்ந்தார்.

Shiva Rajkumar says he might mary Kamal Haasan if his gender is female

தான் பெண்ணாக பிறந்திருந்தால் கமல்ஹாசனையே கல்யாணம் பண்ணியிருப்பேன் என அவர் பேசியது ஒட்டுமொத்த அரங்கத்தையே சிரிப்பலையில் ஆழ்த்தியது. அந்தளவுக்கு கமல்ஹாசனின் தீவிர ரசிகன் எனக்கூறியுள்ளார்.

ஜெயிலர் 2வில் சிவராஜ்குமார்: நெல்சன் இயகக்த்தில் கடந்த 2023ம் ஆண்டு வெளியாகி 600 கோடி வரை வசூல் வேட்டை நடத்திய ஜெயிலர் படத்தில் சிவராஜ்குமார் சிங்கம் போல டிஷ்யூ பேப்பருடன் நடந்த வந்த காட்சிகளுக்கே தியேட்டர்களில் சில்லறைகள் பறந்தன. ஜெயிலர் படத்தில் நீங்க அப்படி என்ன பண்ணிட்டீங்க இப்படி உங்களை கொண்டாடுறாங்க, சும்மா நடந்து தானே வந்தீங்க என என் மனைவியே கிண்டல் செய்தார். ஆனால், அது சூப்பர் ஸ்டார் படம், அந்த சீனை நெல்சன் அப்படி படமாக்கினார். அனிருத்தின் பின்னணி இசை என அனைத்தும் கலந்து அது ஒரு மாஸ் காட்சியானது. தமிழ்நாட்டு ரசிகர்கள் எனக்கு கொடுத்த அன்பை என்றுமே மறக்கமாட்டேன் என்றார்.

கமலை கட்டிப்பிடிச்சிட்டு: சின்ன வயசுல இருந்து கமல் சார் படங்களை அதிகம் பார்த்து வளர்ந்திருக்கிறேன். ஒருமுறை அவர் வீட்டுக்கு வந்திருந்தபோது அவரையே பார்த்துக் கொண்டிருந்தேன். அப்போது என் அப்பாவிடம் யாரு அந்த பையன்னு கேட்டார். என் மகன் தான் என சொன்னதும் என்னை அருகே அழைத்தார். நான் அவரிடம் உங்களை ஒருமுறை கட்டிப் பிடித்துக் கொள்ளவா என்றேன். அவர் உடனடியாக கட்டிப் பிடித்துக் கொண்டார். அதன் பின்னர் 3 நாட்கள் அந்த ஸ்மெல் மற்றும் அவுரா என்னை விட்டுப் போயிடக் கூடாது என குளிக்கவே இல்லை.

கமலை கல்யாணம் பண்ணியிருப்பேன்: நான் மட்டும் பொண்ணா இருந்தா நிச்சயம் கமலை திருமணம் செய்திருப்பேன் அந்தளவுக்கு அவருடைய ரசிகன் நான் என சிவராஜ்குமார் பேசியுள்ளார். இந்தியளவில் ஏகப்பட்ட பெண்கள் மட்டும் இல்லை ஆண்களும் கமல்ஹாசன் மீது பித்துக் கொண்டிருந்ததை சிவராஜ்குமார் ஓபனாகவே பேசிவிட்டார் என கோலிவுட்டில் ஏகப்பட்ட விவாதங்களே ஓடிக் கொண்டிருக்கின்றன.

முதல் ஆளாக போன் பண்ணார்: புற்றுநோய் பாதிப்பு காரணமாக அவதிப்பட்டுக் கொண்டிருந்த போது, முதல் ஆளாக எனக்கு போன் செய்து என்னுடைய நலத்தை விசாரித்ததும் கமல் சார். அவர் போன்ற ஒரு லெஜண்டை எல்லாம் வாழ்நாளில் நாம் பார்ப்பதற்கே கொடுத்து வச்சிருக்க வேண்டும் என்றார். கடைசியாக நடைபெற்ற கமல்ஹாசனின் பிறந்தநாள் பார்ட்டியில் கூட சிவராஜ்குமார் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது. சிவராஜ் குமார் ஜெயிலர் 2 படத்திலும் நடிப்பதை உறுதி செய்துள்ள நிலையில், சீக்கிரமே கமலுடன் இணைந்தும் நடிப்பார் என தெரிகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X