ரஜினிகாந்த்தின் ஜெயிலர் 2.. சூப்பர் அப்டேட் சொன்ன சிவராஜ்குமார்.. 2வது பாகத்தில் மிரட்டுவாரோ

சென்னை: ரஜினிகாந்த்தை வைத்து ஜெயிலர் 2 படத்தை இயக்கிவருகிறார் நெல்சன் திலீப்குமார். இந்தப் படத்தின் முதல் பாகம் சூப்பர் ஹிட்டடித்திருப்பதால் இந்த பாகத்தின் மீதும் எதிர்பார்ப்பு இருக்கத்தான் செய்கிறது. படத்தின் ஷூட்டிங் கோவை, கேரளா உள்ளிட்ட பகுதிகளில் நடந்தது. இந்நிலையில் ஜெயிலர் 2 படம் பற்றி கன்னட நடிகர் சிவராஜ்குமார் பேசியிருக்கும் விஷயம் சோஷியல் மீடியாவில் சென்சேஷனல் ஆகியிருக்கிறது.

ரஜினி நடித்த கூலி படத்தின் ரிசல்ட்டை சொல்லவே வேண்டாம். லோகேஷின் கரியரிலேயே மிகப்பெரிய கரும்புள்ளியை அவருக்கு இப்படம் எடுத்து கொடுத்துவிட்டது. ரஜினியும் இந்த ரிசல்ட்டை எதிர்பார்க்கவில்லைதான். எது எப்படியோ அடுத்த படத்தில் இன்னமும் வீரியமாக வெற்றியை கொடுக்க வேண்டும் என்ற முனைப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் 2வில் நடிக்க சென்றுவிட்டார் அவர்.

பெரிய எதிர்பார்ப்பு: இப்படத்தின் முதல் பாகம் அதிரிபுதிரி ஹிட். ரஜினி, நெல்சன் ஆகியோரின் கரியருக்கே அந்தப் படம்தான் ஆக்சிஜனை கொடுத்தது. ஏனெனில் அதற்கு முன்னர் அவர்களின் படங்களான பீஸ்ட், அண்ணாத்த, தர்பார் ஆகிய படங்கள் படுதோல்வியை சந்தித்திருந்தன. அதுமட்டுமின்றி இரண்டு பேரின் கரியரும் இனி அவ்வளவுதான்; வீட்டுக்கு போக வேண்டியதுதான் என்றெல்லாம் பேசினார்கள்.

Shiva Rajkumar Talks about Rajinikanth s Jailer 2
Photo Credit:

அந்த சீன்லாம் இல்ல: ஆனால் அப்படி பேசியவர்களின் வாயை படத்தின் மூலம் அடைத்தார்கள் இரண்டு பேரும். மேக்கிங், மாஸ், சென்ட்டிமென்ட் என அத்தனை ஏரியாக்களிலும் படம் புகுந்து விளையாடியதால் மிகப்பெரிய ஹிட்டை பெற்றது. உலகம் முழுவதும் 700 கோடி ரூபாய் வசூலித்தது. அதே உற்சாகத்தோடு இப்போது ஜெயிலர் 2 படத்தில் இணைந்திருக்கிறது இந்தக் கூட்டணி. படத்தின் ஷூட்டிங் கோவை, கேரளா உள்ளிட்ட பகுதிகளில் நடந்தது.

இதிலும் பான் இந்தியா ஸ்டார்கள்: முதல் பாகத்தில் மோகன் லால், சிவராஜ்குமார் என பான் இந்தியா ஸ்டார்கள் நடித்திருந்தார்கள். இதிலும், தெலுங்கு நடிகர் பாலைய்யா நடித்துவருகிறார் என்றும் வில்லனாக மலையாள நடிகர் சுராஜ் வெஞ்சரமுடு நடிக்கிறார் என்றும் சொல்லப்படுகிறது. இந்நிலையில் ஜெயிலர் 2 பற்றி சிவராஜ்குமார் பேசியிருக்கும் விஷயம் ரசிகர்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

சிவராஜ்குமார் சொன்னது: அவர் பேசுகையில், "ஜெயிலர் 2 படத்தில் ஒரு நாள் ஷூட்டிங் முடித்துவிட்டேன். ஜனவரியில் மூன்று நாட்கள் ஷூட்டிங் இருக்கிறது. இது ஜெயிலர் முதல் பாகத்தின் தொடர்ச்சியாகத்தான் இருக்கும்.முதல் பாகத்துடன் ஒப்பிடுகையில் இதில் எனது கேரக்டரின் நீளம் அதிகமாக இருக்கும். கன்னடம் மற்றும் தமிழ் திரையுலகங்களுக்கு நட்பை வலுப்படுத்தும் விதமாகத்தான் இப்படி கேமியோ ரோலில் நடிக்கிறேன்" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X