»   »  கிரிக்கெட்: தள்ளி போகும் சிவாஜி!

கிரிக்கெட்: தள்ளி போகும் சிவாஜி!

Subscribe to Oneindia Tamil

சிவாஜி பட ஆடியோ கேசட் மார்ச் 2வது வாரத்தில் வெளியிடப்படுகிறது.

ஏவி.எம். தயாரிப்பில், ஷங்கர் இயக்கத்தில், ரஜினி, ஷ்ரியா நடிப்பில் பிரமாண்டமாக உருவாகியுள்ளது சிவாஜி. ஏவி.எம். நிறுவனம் மிகப் பெரியபட்ஜெட்டில் தயாரித்துள்ள படம் சிவாஜிதான்.

கடந்த 2005ம் ஆண்டு டிசம்பர் 13ம் தேதி தொடங்கிய படப்பிடிப்பு தொடர்ந்து நடந்து வருகிறது. படு விறுவிறுப்பாக நடந்து வந்த படப்பிடிப்புஅமெரிக்காவில் படமாக்கப்பட்ட காட்சிகளுடன் முடிவடைந்தது.

தற்போது டப்பிங் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. படத்தை ஏப்ரல் 14ம் தேதி ரிலீஸ் செய்ய முதலில் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால்உலகக் கோப்பை கிரிக்கெட், பொதுத் தேர்வுகள் உள்ளிட்டவை குறுக்கிடுவதால் படத்தை ரிலீஸ் செய்வது தள்ளிப் போகும் எனத் தெரிகிறது.

அதற்கு முன்பாக மார்ச் 2வது வாரத்தில் சிவாஜி பாடல் கேசட்டுகளை வெளியிடவுள்ளனர். பாடல் கேசட் விழாவையே பிரமாண்டமாக நடத்தஷங்கர் திட்டமிட்டுள்ளாராம்.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடல்கள் படு ரிச்சாக வந்துள்ளதாம்.

சிவாஜி படம் ஒரே சமயத்தில் தமிழ், தெலுங்கில் வெளியாகிறது. மொத்தம் 500 பிரிண்டுகள் போடப்படுகின்றன.

கேரளாவில் இப்படத்தை ரூ. 3.10 கோடிக்கு விற்றுள்ளனர். இந்த அளவுக்கு ஒரு படம் கேரளாவில் விற்பனையாகியுள்ளது இதுவே முதல்முறையாகுமாம். மம்மூட்டி, மோகன்லால் படத்துக்குக் கூட இவ்வளவு பெரிய விலை கொடுக்கப்படுவதில்லையாம் (அவங்க சம்பளமேலட்சங்களில்தானே!).

சிவாஜி படத்தை தமிழ்நாட்டில் திரையிடும்போது இங்கேயும் வெளியிட்டால் மலையாளப் படங்களின் வசூல் கடுமையாக பாதிக்கப்படும். எனவேசிவாஜி படத்தை சில வாரங்கள் கழித்தே திரையிட வேண்டும் என மலையாளை தயாரிப்பாளர்கள், சூப்பர் ஸ்டார் நடிகர்கள் உள்ளிட்டோர்வினியோகஸ்தரை வலியுறுத்தி வருகிறார்களாம்.

கர்நாடகத்தில் கங்காதரன் என்பவர் படத்தின் விநியோக உரிமையை வாங்கியுள்ளார்.

மலேசியா: சிவாஜியை விற்று நன்கொடை

இந் நிலையில் மலேசியாவில் உள்ள ரஜினி ரசிகர்கள் சிவாஜி பட பனியனை விற்று நிதி திரட்டி அனாதை ஆசிரமத்திற்கு வழங்கியுள்ளனர்.

உள்ளூரில் மட்டுமல்லாது வெளிநாடுகளிலும் ரஜினிக்கு ரசிகர் கூட்டம் ஜாஸ்தி. முத்து படத்தைத் தொடர்ந்து ஜப்பானிலும் ரஜினிக்கு ஒரு கூட்டம்சேர்ந்தது. தொடர்ந்து சந்திரமுகிக்கும் செம வரவேற்பு.

இதையடுத்து ஜப்பான் ரசிகர்கள் ரஜினி பட ரிலீஸை, தமிழக ரசிகர்களைப் போல கொடி,தோரணம், பாலாபிஷேகம் என கலக்கஆரம்பித்துள்ளனர். ரஜினி மன்றத்திற்கு அலுவலகம் திறந்துள்ளனர், பஸ்ஸையும் வாங்கி ரஜினி பெயரில் உலாவ விட்டுள்ளனர். அந்தப் பஸ்ஸில்ஊர் ஊராக போய் உறுப்பினர்களையும் சேர்த்து வருகின்றனர்.

இதேபோல மலேசியாவிலும் ரசிகர் மன்றம் ஆரம்பிக்கப்பட்டு, அதன் மூலம் சமூக சேவை செய்யப்பட்டு வருகிறது. சிவாஜி பட ரஜினிகெட்டப்பில் உருவாக்கப்பட்டுள்ள பனியன்களைத் தயாரித்துள்ளனர்.

பனியன் முன்பகுதியில் ஹூஸ் த பாஸ் என்றும் பின்பகுதியில் ரஜினியின் சிவாஜி படமும் அச்சிடப்பட்டுள்ளது. இந்த பனியனுக்கு இங்கு நல்லவரவேற்பு உள்ளது. ரசிகர்கள் இந்த பனியனை அணிந்து வீதியில் வலம் வந்துகொண்டிருக்கிறார்கள்.

பனியன் விற்பனை மூலம் கிடைத்த பணத்தை மலேசியாவிலுள்ள ஸ்ரீசெண்பகவல்லி அனாதை ஆசிரமத்திற்கு வழங்கியதோடு ஆசிரமத்திற்குநேரில் சென்று குழந்தைகளுடன் சில மணிநேரம் இருந்திருக்கின்றனர். பல முதியோர் இல்லங்களுக்கும் உதவி செய்துள்ளனர்.

நல்ல விஷயம்தான்!

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil