»   »  ஜோதிடர் சொன்னார்-ரஜினி செய்தார்

ஜோதிடர் சொன்னார்-ரஜினி செய்தார்

Subscribe to Oneindia Tamil

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் சிவாஜி, ஏப்ரல் 12ம் தேதி திரையிடப்படும் என படத்தின் தயா>ப்பாளர் ஏவி.எம்.சரவணன் தெரிவித்துள்ளார்.

ஏவி.எம். இதுவரை இல்லாத அளவுக்கு மிகப் பெரும் பொருட் செலவில் தயாரித்துள்ள படம் சிவாஜி. படப்பிடிப்பு முடிந்து தற்போது டப்பிங்உள்ளிட்ட நகாசு வேலைகள் படு வேகமாக நடந்து வருகின்றன.

படம் தமிழ்ப் புத்தாண்டுக்கு வெளியாகும் என முன்பு கூறப்பட்டிருந்தது ஆனால் பிளஸ்டூ, பத்தாம் வகுப்பு பஙுட்சைகள், உலகக் கோப்பைக்கிரிக்கெட் போட்டி ஆகியவை குறுக்கிடுவதால் படம் தள்ளிப் போகும் என செய்தி கிளம்பியது.

ஆனால் தற்போது அதற்கு சரவணன் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். ஏப்ரல் 12ம் தேதி படம் ரிலீஸாகும் என தெ>வித்துள்ளார் சரவணன்.புத்தாண்டுக்கு 2 நாட்களுக்கு முன்பே படம் தியேட்டர்களுக்கு வருவது குறிப்பிடத்தக்ககது.

உண்மையில் இந்தத் தேதியை குறித்துக் கொடுத்தது ரஜினியாம். அவரது ஆஸ்தான ஜோதிடர்தான் 12ம் தேதி ரிலீஸ் செய்யலாம், நல்ல நாள் என்றுஅட்வைஸ் கொடுத்தாராம்.

மேலும், படம் வெளியாகும் ஏப்ரல் 12ம் தேதி வியாழக்கிழமையாகும். இது ராகவந்ேதிர சுவாமிகளுக்கு உகந்த தினம். ரஜினிக்கும் ராகவேந்திரர் மீதுபக்தி அதிகம். இதனால்தான் 12ம் தேதியை தேர்வு செய்தாராம் ரஜினி.

அன்றைய தினம் உலகம் முழுவதும் சிவாஜி திரைக்கு வருகிறதாம். இப்படத்துக்காக இந்தியாவில் மட்டும் 600 பிரிண்டுகளைப் போடவுள்ளனராம்.

சிவாஜி படத்தின் தெலுங்கு ரைட்ஸ், சிரஞ்சீவி படத்தை விட அதிக விலைக்கு விற்றுள்ளதாம். கேரளாவில் நேரடியாக படத்தை தமிழிலேயேவெளியிடுகிறார்கள்.

இந்தப் படத்தில் ரஜினிக்கு என்ன பங்கு கிடைக்கும் என்பது குறித்து இதுவரை யாரும் வாய் திறக்கவில்லை.

சிவாஜி பட டிவிடி வெளியாகி விட்டதாக வதந்தி கிளம்புகிறதே என்று சரவணனிடம் கேட்டபோது, வாய் விட்டு பலமாக சிரித்த சரவணன்,இதுபோன்ற வதந்திகளையெல்லாம் சீரியஸாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என்றார்.

ஆனால், இன்னும் சிவாஜி டிவிடி வேணுமோ என்று கேட்டபடி ஒரு கும்பல் சுற்றிக்கொண்டுதான் உள்ளது!

Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil