Captain Miller - சிவராஜ்குமாரை இப்படி பண்ணிட்டீங்களே தனுஷ்.. கேப்டன் மில்லருக்கு சிக்கல்

சென்னை: அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடித்திருக்கும் திரைப்படம் கேப்டன் மில்லர். கடைசியாக அவரது நடிப்பில் வெளியான வாத்தி திரைப்படம் தோல்வியடைந்ததால் இந்தப் படம் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் தனுஷும் அவரது ரசிகர்களும் இருந்தார்கள். படமானது பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த ஜனவரி 12ஆம் தேதி வெளியானது.

தனுஷ் நடிப்பில் கடைசியாக வெளியான வாத்தி திரைப்படம் படுதோல்வியை சந்தித்தது. திருச்சிற்றம்பலம் படம் கொடுத்த வெற்றி வைபை தனுஷ் தவறவிட்டுவிட்டாரே என்று சோகத்தில் இருந்தனர் அவரது ரசிகர்கள். இந்த சூழலில் ராக்கி, சாணிக்காயிதம் ஆகிய படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் படத்தில் நடிக்க கமிட்டானார் தனுஷ். சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்க பிரியங்கா மோகன், சிவராஜ்குமார், சந்தீப் உள்ளிட்டோர் நடிக்க ஜிவி பிரகாஷ் இசையமைத்திருக்கிறார்.

Shivarajkumar Fans Upset on Dhanush for Captain Miller Movie

பெரும் எதிர்பார்ப்பு: தியாகராஜ குமாரராஜாவிடம் உதவி இயக்குநராக இருந்தவர் அருண் மாதேஸ்வரன். அவர் இதற்கு முன்னதாக இயக்கிய ராக்கி, சாணிக்காயிதம் ஆகிய படங்கள் வணிக ரீதியாக சரியாக போகாவிட்டாலும் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பையே பெற்றன. குறிப்பாக அவரது மேக்கிங்கில் தனித்துவம் தெரிந்ததாக ரசிகர்கள் கூறினர். இதனால் கேப்டன் மில்லர் படத்தின் மீதும் பெரும் எதிர்பார்ப்பு எழுந்திருந்தது.

பொங்கல் ரிலீஸ்: அந்த எதிர்பார்ப்போடு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கேப்டன் மில்லர் திரைப்படம் கடந்த 12ஆம் தேதி வெளியானது. ஏற்கனவே ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றிருந்ததாலும்; ஆடியோ லான்ச்சில் படத்தில் பணியாற்றியவர்களின் பேச்சு எதிர்பார்ப்பை அதிகரித்திருந்ததாலும் ஆவலோடு படம் பார்க்க ரசிகர்கள் தியேட்டருக்கு சென்றனர்.

கலவையான விமர்சனம்: படத்தை பார்த்த ரசிகர்கள் தங்களது கலவையான விமர்சனத்தையே கொடுத்தனர். முக்கியமாக கோயில் நுழைவு போராட்டத்தை அடிப்படையாக வைத்து படம் உருவாக்கப்பட்டிருந்தாலும் ஏதோ ஒன்று மிஸ் ஆகிவிட்டதாகவே கூறினார்கள். அதேசமயம் தனுஷின் நடிப்புக்கு ரசிகர்கள் வழக்கம்போல் தங்களது பாராட்டை தெரிவித்தனர்.

கேப்டன் மில்லர் வசூல்: இந்தப் பொங்கலுக்கு கேப்டன் மில்லர் படத்துக்கு போட்டியாக சிவகார்த்திகேயன் நடித்த அயலான் திரைப்படம் வெளியானது. எனவே இந்தப் பொங்கல் ரேஸ் தனுஷுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டது. ஆனால் யாரும் எதிர்பார்க்காத விதமாக முதல் நாள் நன்றாக இருந்த கேப்டன் மில்லர் வசூல் போகப்போக டல்லடித்தது. இதுவரை படமானது மொத்தமாக 75 கோடி ரூபாய்வரை கலெக்‌ஷன் செய்ததாக கூறப்படுகிறது. ஆனால் இதைவிடவும் அயலான் வசூல் அதிகம் என்று சொல்லப்படுகிறது.

என்ன காரணம்: கேப்டன் மில்லரில் சிவராஜ்குமாரும் நடித்திருந்தார். அவரை நடிக்க வைப்பதன் மூலம் கர்நாடக மாநிலத்தில் நல்ல வசூலை பார்க்கலாம் என கணக்கு போட்டிருந்தார் தனுஷ். ஆனால் படத்தில் சிவராஜ்குமாரின் போர்ஷன் கொஞ்சம் மட்டுமே இருந்தது என்பது அவரது ரசிகர்களின் குற்றச்சாட்டாக இருக்கிறது.

இதன் காரணமாக கர்நாடகாவில் சரியாக படம் போகவில்லையாம். முக்கியமாக படத்தின் வியாபாரம் கர்நாடகத்தில் 3.5 கோடி ரூபாய்வரை சென்றாலும் ரிலீஸுக்கு பிறகு சரியாக போகாததால் படத்தை வாங்கிய விநியோகஸ்தர் 2 கோடி ரூபாய்வரை எல்லாம் பணம் தர முடியாது என்று போர்க்கொடி தூக்கியிருப்பதாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாகவும் கேப்டன் மில்லர் பிஸ்னெஸில் அடி விழுந்திருக்கிறது என்று கூறுகிறார்கள் திரைத்துறையினர். முக்கியமாக சிவராஜ்குமாரை ஊறுகாய் போல் தனுஷ் பயன்படுத்திக்கொண்டார் என்ற பேச்சும் கன்னட திரையுலகில் எழுந்திருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X