ஜெயிலர் 2 படத்தில் பாலகிருஷ்ணா நடிக்கிறாரா?.. சிவராஜ்குமார் சொன்ன பதில்.. செம மாஸா இருக்குமே!

சென்னை: புற்றுநோய் பாதிப்பில் இருந்து மீண்டு நடிகர் சிவராஜ்குமார் அடுத்ததாக தற்போது நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ஜெயிலர் 2 படத்தில் நடிக்கவுள்ளார். சமீபத்தில் அந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டதாக நடிகை ரம்யா கிருஷ்ணன் அறிவித்திருந்தார். இந்நிலையில், அந்தப் படம் கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார் சிவ ராஜ்குமார்.

கன்னட திரை உலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சிவராஜ் குமாருக்கு 62 வயதாகிறது. கடந்த 2023 ஆம் ஆண்டு தமிழில் ரஜினிகாந்த் உடன் இணைந்து ஜெயிலர் படத்தில் நடித்திருந்தார். சிறப்பு கேமியோ தோற்றத்தில் சிவராஜ்குமார் வந்த காட்சிகள் தியேட்டர்களில் விசில் பறந்தன.

Shivarajkumar opens up about Balakrishna casting in Jailer 2

ஜெயிலர் 2 படத்திலும் சிவராஜ்குமார் நடிக்க போவதை உறுதி செய்துள்ளார். கடந்த ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான கேப்டன் மில்லர் படத்திலும் தனுஷின் அண்ணனாக இவர் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

சிறு வயதிலிருந்து: சந்தன கடத்தல் வீரப்பன் பழம்பெரும் நடிகர் ராஜ்குமாரை கடத்தியது அனைவரும் அறிந்த ஒன்றுதான். ராஜ்குமாரின் மகன்களான சிவராஜ்குமார் மற்றும் புனித் ராஜ்குமார் இருவரும் சினிமாவில் முன்னணி நடிகர்களாக மாறினர். சிறுவயதிலேயே 1974 ஆம் ஆண்டு வெளியான ஸ்ரீ சீனிவாச கல்யாணம் படத்தில் குழந்தை நட்சத்திரமாக சிவராஜ் குமார் நடித்துள்ளார். இவரது தம்பி புனித் ராஜ்குமார் உயிரிழந்தது ஒட்டுமொத்த கன்னட திரையுலகையும் கண்ணீர் கடலில் ஆழ்த்தியது.

புற்றுநோய் பாதிப்பு: நடிகர் சிவராஜ்குமார் ஜெயிலர் மற்றும் கேப்டன் மில்லர் என தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து பிஸியாகி வந்த நிலையில், கன்னடத்தில் அவர் நடித்த பைரதி ரணங்கள் (மப்டி 2) படமும் கடந்த ஆண்டு வெளியானது. மேலும் அவர் நடிப்பில் பல படங்கள் உருவாகி வரும் நிலையில், திடீரென அவருக்கு புற்றுநோய் பாதிப்பு இருப்பது தெரியவந்தது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. உடனடியாக அதற்கான தீவிர மருத்துவ சிகிச்சைகளை பெற்றுக் கொண்டு புற்றுநோய் பாதிப்பில் இருந்து தற்போது மீண்டு வந்து நடித்து வருகிறார் சிவராஜ் குமார்.

Shivarajkumar opens up about Balakrishna casting in Jailer 2

ஜெயிலர் 2வில் பாலகிருஷ்ணா?: சமீபத்தில் நடைபெற்ற சினிமா நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட சிவராஜ்குமாரிடம் ஜெயிலர் 2 படத்தில் நீங்களும் பாலகிருஷ்ணாவும் இணைந்து நடிக்கிறீர்களா என்கிற கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது அதைக் கேட்ட அவர், பாலய்யா நடிக்கிறாரா? நெல்சன் என்னிடம் நான் நடிக்கிறேன் என்பதை கூறினார். இந்த விஷயத்தை சொல்லவில்லை. அவர் நடித்தால் இன்னும் மாஸாக இருக்கும். சிறு வயதிலிருந்து நாங்கள் இருவரும் நல்ல நண்பர்களாகவே பழகி வருகிறோம். அவருடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்தால் ரொம்பவே சந்தோஷம் எனக் கூறியுள்ளார். முதல் பாகத்திலேயே போலீஸ் அதிகாரியாக பாலகிருஷ்ணாவை நடிக்க வைக்க திட்டமிடடேன். ஆனால், அவரது கேரக்டர் ஆர்க் சரியாக உட்காராத நிலையில், அதை கைவிட்டு விட்டேன் என நெல்சன் பேட்டி ஒன்றில் கூறிய நிலையில், ஜெயிலர் 2வில் ரசிகர்கள் பாலகிருஷ்ணாவை பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

ராம்சரண் படத்தில்: நடிகர் சிவராஜ் குமார் கன்னடத்தில் உத்தரகாண்டா, பைரவ கோனா பாட்டே உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். மேலும், ராம்சரண், ஜான்வி கபூர் நடிப்பில் தெலுங்கில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் பெட்டி படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் இவர் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X