கேரக்டர் ரொம்ப முக்கியம் விஜய்.. தளபதிக்கு அட்வைஸ் செய்த அம்மா ஷோபா, அப்பா எஸ்.ஏ.சி
சென்னை: விஜய்யும், சங்கீதாவும் விவாகரத்து செய்து பிரியவிருக்கிறார்கள். இத்தனை வருடங்கள் சேர்ந்து வாழ்ந்து ஃபேவரைட் ஜோடியாக திகழ்ந்தவர்கள் தற்போது இப்படி ஒரு முடிவை எடுத்திருப்பது விஜய்யின் ரசிகர்களுக்கு மட்டுமின்றி அனைவருக்குமே அதிர்ச்சிதான். அதைவிடவும், சங்கீதா வைத்த குற்றச்சாட்டுக்களும் பூகம்பத்தை கிளப்பின. ஜூன் 15ஆம் தேதி இந்த வழக்கானது விசாரணைக்கு வரவிருப்பது குறிப்பிடத்தக்கது.
விஜய் மற்றும் சங்கீதா கடந்த 1999ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்கள். அரேஞ்சுடு மேரேஜாக இருந்தாலும் இரண்டு பேரும் மேட் ஃபார் ஈச் அதர் மாதிரிதான் வாழ்ந்துவந்தார்கள். விஜய்யின் பல படங்களுக்கு சங்கீதாதான் காஸ்ட்யூம் டிசைனர். தனது கணவரை எவ்வளவு அழகாக காண்பிக்க முடியுமோ அந்த அளவுக்கு காண்பித்தார். அதேபோல் விஜய்யின் எந்தப் பட விழாவாக இருந்தாலும் தவறாமல் சங்கீதாவும் ஆஜராகிவிடுவார். ஆனால் கடந்த சில வருடங்களாகவே அவரை அப்படி பார்க்க முடியவில்லை.

உண்மையான பிரிவு: அவருக்கும், விஜய்க்கும் பிரச்னை அதன் காரணமாகத்தான் சங்கீதா வருவதில்லை என்ற தகவல்கள் வட்டமடித்தன. அவரும் ஷங்கர் மகள் திருமணம், ஸ்டாலின் வீட்டில் நிகழ்ந்த மரணத்துக்கு தனியாக கலந்துகொண்டார். அப்போதே அந்த தகவல்கள் மேற்கொண்டு வலுவடைந்தன. இப்படிப்பட்ட நிலைமையில்தான் கடந்த பிப்ரவரி மாதத்தில் விவாகரத்து மனுவை தாக்கல் செய்தார். அதுமட்டுமின்றி நடிகையுடன் தன் கணவர் தொடர்பில் இருப்பதாகவும் ஒரு குண்டை தூக்கி போட்டார்.
சுமூகமான பிரிவு: தேர்தல் நெருங்கிய நேரத்தில் சங்கீதாவின் மனு வெளியே வந்தது; திமுக மீது குற்றம் சுமத்த தவெகவினருக்கு வழி வகுத்தது. ஆனால் இதை விஜய் தரப்பே வெளியிட்டிருக்கலாம் என்றும் சிலர் ஒரு தியரியை கூறுகிறார்கள். ஆகமொத்தம் இந்த மனுவில் இருந்த விஷயங்கள் வெளியே வந்ததற்கு அரசியல் தான் காரணம் என்பது அவர்கள் நிலைப்பாடு. எஸ்.ஏ.சியும் ஒரு பேட்டியில் அதையே கூறியிருந்தார். அவர்கள் எப்போதோ பிரிவு தொடர்பாக பேச்சுவாரத்தை நடத்தி கையெழுத்து போட்டு பிரிந்துவிட்டார்கள் என்று கூறினார்.
விஜய்யின் அடுத்த மூவ்: விவாகரத்துக்கு பிறகு குழந்தைகளுக்கான செலவை ஏற்றுக்கொள்வதென அந்த பஞ்சாயத்தில் விஜய் முடிவு செய்து உறுதி கொடுத்திருக்கிறாராம். அதேசமயம் பிள்ளைகளை பொறுத்தவரை சங்கீதாவுடன்தான் இருப்பார்கள் என்பது பரவலான எண்ணம். விஜய்யை பொறுத்தவரை தேர்தல் முடிவுகளை பொறுத்து அரசியலில் இயங்கலாமா இல்லை சினிமாவுக்கு மீண்டும் நடிக்க சென்றுவிடலாமா என்பதை முடிவு செய்வார். இந்நிலையில் விஜய்யின் அம்மா ஷோபா கொடுத்திருக்கும் பேட்டி ஒன்று சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகியுள்ளது.
ஷோபா பேட்டி: அவர் அளித்திருந்த பேட்டியில், "நாளைய தீர்ப்பு பட சமயத்திலேயே விஜய்க்கு நாங்கள் அட்வைஸ் செய்தோம். எந்தத் தொழில் செய்தாலும் அந்தத் தொழிலை தெய்வமாக மதிக்க வேண்டும் என்று சொன்னோம். அதேபோல் கேரக்டர் ரொம்ப ரொம்ப முக்கியம். கேரக்டரோட எப்படி வருகிறாய் என்பதைத்தான் பார்ப்பார்கள். விஜய் எனக்கு மகனாக கிடைத்தது எனக்கு லக்கிதான். அவ்வளவு அமைதியான கேரக்டர். நான் ஏதாவது சத்தமாக பேசினால்கூட அம்மா கொஞ்சம் மெதுவாக பேசுங்கள் என்பார். சாப்பாடு சரியில்லை என்றால் எதுவும் சொல்லமாட்டார். என் கணவரோ ஏகப்பட்ட குறைகள் சொல்லிவிட்டுதான் டேபிளிலிருந்து எழுந்திருப்பார்" என்றார்.


Click it and Unblock the Notifications