பிள்ளைகள் எவ்வளவு வருத்தப்படுவார்கள்?.. சங்கீதாவுக்காக விஜய் அதை செய்திருக்க வேண்டும்.. அமீர் ஓபன்
சென்னை: விஜய்யின் மனைவி சங்கீதா கடந்த மாதம் விவாகரத்து மனுவை தாக்கல் செய்தார். அந்த மனுவில், தனது கணவருக்கு நடிகையுடன் திருமணத்தை தாண்டிய உறவு இருக்கிறது என்பது உட்பட பல குற்றச்சாட்டுக்களை சுமத்தியிருந்தார். அது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதனைத் தொடர்ந்து சங்கீதாவையே தவெகவினரும், விஜய்யின் ரசிகர்களும் தரக்குறைவாக பேசியது மேற்கொண்டு பரபரப்பை ஏற்படுத்தியது. அத்தனைக்கும் விஜய் அமைதியாகவே இருந்தார்.
விஜய்யின் மனைவி சங்கீதா கடந்த மாத இறுதியில் செங்கல்பட்டு குடும்பநல நீதிமன்றத்தில் விவாகரத்து மனுவை தாக்கல் செய்தார். அந்த மனுவில் அவர், "விஜய் திருமணத்தை மீறிய உறவில் இருந்தார். அதனை நான் தட்டிக்கேட்டேன். எனவே அவர் என்னை சுதந்திரமாக நடமாட விடாமல் தடுத்தார். அதேபோல் எனக்கான நிதி ஆதாரத்தையும் தடுத்து கட்டுப்பாடுகள் விதித்தார். செலவுக்குகூட பணம் தரவில்லை. நடிகையுடனான உறவை கண்டிப்பாக முறித்துக்கொள்வேன் என்றும் உறுதியளித்தார். ஆனால் அவரது நடவடிக்கையில் எந்தவிதமான மாற்றமும் இல்லை.

நடிகையையும் சேர்ப்பேன்: அதன் காரணமாக பெரிய மன உளைச்சலில் நான் இருந்தேன். சம்பந்தப்பட்ட நடிகையுடன் விஜய் வெளிநாடுகளுக்கும் சென்றிருந்தார். அதனை நடிகையே பகிரவும் செய்திருந்தார். விஜய்யுடன் இருந்த புகைப்படங்களை பகிர்ந்ததால் குடும்பத்துக்கு அவமானம் ஏற்பட்டது. பொதுவெளியில் நன்மதிப்பை கெடுக்கக்கூடாது என்பதற்காக அந்த நடிகையின் பெயரை குறிப்பிடவில்லை.
நெருக்கடி ஏற்பட்டால் அந்த நடிகைக்கும், எனது கணவருக்கும் இருக்கும் உறவை வெளிப்படுத்தும் ஆதாரங்களை நீதிமன்றத்தில் வழங்குவேன். தேவைப்பட்டால் எனது கணவருடன் திருமணத்தை மீறிய உறவில் இருக்கும் நடிகையை வழக்கின் இரண்டாவது எதிர் மனுதாரராக சேர்ப்பேன்" என குறிப்பிட்டிருந்தார். அவரது இந்த குற்றச்சாட்டுக்களை பார்த்த ரசிகர்கள் யார் அந்த நடிகை என்று தீவிரமான தேடுதலில் ஏற்பட்டதும்; அந்த சமயம் பார்த்து நடிகை திரிஷாவுடன் ஜோடி போட்டு விஜய் வந்ததும் அனைவரும் அறிந்த கதைதான்.
விர்ச்சுவல் வாரியர்ஸின் வன்மம்: இவ்விவகாரத்தில் அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இன்னொரு விஷயம் என்னவென்றால்; தவெகவினரும், விஜய் ரசிகர்களும் சங்கீதாவையே தரக்குறைவாக பேசினார். ஆனால் அதற்கெல்லாம் விஜய் மௌனமாகவே இருந்தார். தன்னுடன் வாழ்ந்து இரண்டு குழந்தைகளை பெற்ற ஒருவரை இப்படி பேசுவதை விஜய் தடுக்க வேண்டும் என பலர் வலியுறுத்தியும் கண்டுகொள்ளவே இல்லை. இந்நிலையில் அதுகுறித்து இயக்குநரும், நடிகருமான அமீர் ஓபனாக பேசியிருக்கிறார்.
அமீர் பேச்சு: அவர் பேசுகையில், "சங்கீதாவின் ஃபோட்டோவை போட்டு அதற்கு கீழே கீழ்த்தரமாக ஒருவர் எழுதியிருந்தார். அதை பார்த்தபோது எனக்கு ரொம்பவே சங்கடமாக இருந்தது. மக்கள் எப்படி இவ்வளவு கீழே இறங்கி பேசுகிறார்கள் என்று நினைத்தேன். நான் பார்த்த அந்தப் பதிவு விஜய் கண்ணில் பட்டதா இல்லையா என்பது தெரியாது. ஆனால் இப்படி நடக்கும்போது அவர் ஒரு குரல் கொடுத்திருக்க வேண்டாமா?.. ஏனென்றால் இதே பதிவை விஜய்யின் மகளும், மகனும் பார்க்கும்போது நம் அம்மாவை இப்படி எல்லாம் விமர்சிக்கிறார்களே என்று எவ்வளவு வருத்தப்படுவார்கள்" என்றார்.


Click it and Unblock the Notifications















