கத்ரீனா கைஃப்.. தீபிகா படுகோன்.. நெக்ஸ்ட் இந்த பாலிவுட் ஹீரோயின் உடன் நடிக்கிறாரா விஜய் சேதுபதி?
சென்னை: அஜித் குமார், த்ரிஷா, அர்ஜுன் நடிப்பில் இந்த ஆண்டு வெளியான விடாமுயற்சி படத்தை இயக்கிய இயக்குநர் மகிழ் திருமேனி அடுத்ததாக விஜய் சேதுபதியை வைத்து புதிய படத்தை இயக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்நிலையில், அந்த படத்தில் அவருக்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை நடிக்கப் போவதாகவும் லேட்டஸ்ட் தகவல்கள் கசிந்துள்ளன.
நடிகர் தனுஷ் போல விஜய் சேதுபதியும் பான் இந்தியா நடிகராக பல்வேறு மொழிகளில் நடித்து வருகிறார். மகாராஜா, தலைவன் தலைவி என தொடர்ந்து வெற்றிகளை ருசித்து வரும் மக்கள் செல்வன் பிக் பாஸ் நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கி வருகிறார்.

ஏற்கனவே அட்லி இயக்கத்தில் ஜவான் படத்தில் ஷாருக்கான், தீபிகா படுகோன் என பாலிவுட் நடிகர்களுடன் நடித்த அவருக்கு அங்கேயும் ஏகப்பட்ட பிரபலங்களே ரசிகர்களாக மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
கத்ரீனா கைஃப் ஜோடி: ஜவான் படத்தில் தீபிகா படுகோனுக்கு வில்லனாக நடித்த விஜய் சேதுபதி, மெர்ரி கிறிஸ்துமஸ் படத்தில் கத்ரீனா கைஃப் உடன் இணைந்து ஜோடியாக நடித்திருந்தார். ஏகப்பட்ட கோலிவுட் ஹீரோக்களையும் சில பாலிவுட் ஹீரோக்களையும் கூட பொறாமை பட வைத்தார். இந்நிலையில், மகிழ் திருமேனி இயக்கும் படத்திலும் விஜய் சேதுபதிக்கு பாலிவுட் ஹீரோயின் தான் ஜோடி என தகவல்கள் வெளியாகி உள்ளன.
பிரபாஸ் ஜோடி: பாலிவுட் நடிகை ஷ்ரத்தா கபூர் தான் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிக்கப் போகிறார் என்றும் அவருடன் படக்குழு இறுதிகட்ட பேச்சுவார்த்தைகளை நடத்தி வருவதாக தகவல்கள் கசிந்துள்ளன. முன்னதாக பிரபாஸ் நடித்த சாஹோ படத்தில் ஷ்ரத்தா கபூர் ஹீரோயினாக நடித்திருந்தார். கடைசியாக அவர் நடித்த Stree 2 திரைப்படம் 800 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்திருந்தது. இந்நிலையில், விஜய் சேதுபதிக்கு ஜோடியாகவும் கோலிவுட்டில் அறிமுகமாகவும் ஸ்ரத்தா கபூர் ரெடியாகிவிட்டார் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
யார் இந்த ஷ்ரத்தா கபூர்?: பாலிவுட்டின் பிரபல வில்லன் நடிகர் சக்தி கபூரின் மகள் தான் ஸ்ரத்தா கபூர். டீன் பாட்டி எனும் படத்தின் மூலம் இந்தியில் 2010ம் ஆண்டு அறிமுகமானார். ஆஷிக் 2, ஏபிசிடி 2, பாகி, Stree, Stree 2 உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











