அதிரடியாக நடித்த நம்"ஷ்ரூவ்"கரண் எங்கே?.. ட்ரெண்டான மீம்ஸ்!

சென்னை : தமிழ் சினிமாவில் ஒரு நடிகர் டேக் போட்டு தேடும் அளவுக்கு ட்ரெண்டானார் கரண்.

மீம் கிரியேட்டர்களுக்கு இந்த நூற்றாண்டின் தலைசிறந்த சொல் என்றால் அது"ஷ்ரூவ்"தான்.என்ன ஆயிற்று என்பது என ஆராய்வதற்குள் பட படவென ட்ரெண்ட் ஆகிவிட்டார் கரண். யார் இந்த மனிதன் என்பதை தாண்டி அவரின் டெம்ப்லேட் தான் யாரென காட்டியது.

shroov karan now trending memes

ரஜினி,கமல்,விஜய்,அஜித் போன்ற அனைத்து முன்னணி நடிகர்களுடன் நடித்தவர் கரண். ஆரம்ப காலத்தில் குழந்தை கதாபாத்திரத்தில் நடித்த இவர் தமிழ் சினிமாவில் அண்ணாமலை படத்தில் முதன் முறையாக நடித்தார்.

அதன் பின் தமிழ் சினிமாவிலும் மலையாளத்திலும் தொடர்ந்து நடித்து வந்தார். ரஜினியுடன் நடித்த இவர் கமலுடன் நம்மவர் படத்தில் மாஸான ஒரு மாணவனாக வந்திருப்பார். அதன் பின்னர் தமிழ் சினிமாவில் பிரபலமான ஒருவராக வலம் வந்தார்.

shroov karan now trending memes

பின்னர் விஜய், அஜித் போன்ற இப்போதைய முன்னணி நடிகர்களுடன் நடித்தார். விஜயின் கோயம்புத்தூர் மாப்பிள்ளை படத்தில் வந்த "ஷ்ரூவ்"என்ற சத்தம் இப்போதைய மீம் க்ரியேட்டர்களை தூங்க விடவில்லை. அந்த டெம்ப்ளெட்டில் மீம்ஸ்களை அடித்து நொறுக்கினார்கள்.

shroov karan now trending memes

இப்படி பல படங்களில் நடித்து பிரபலமாக வலம் வந்த கரண் இப்பொழுது காணாமல் போய்விட்டார் என்றுதான் சொல்ல வேண்டும்.சொந்த காசில் சூனியம் வைப்பது போல பண்ணாரி அம்மன் போன்ற சாமி படங்களில் நடித்த பின்னர் பட வாய்ப்புகள் கம்மியானது. சில வருடங்களுக்கு முன்னர் கருப்பசாமி மற்றும் காத்தவராயன் போன்ற படங்களில் ஹீரோவாக நடித்தாலும் பெரிதாக பேசப்படவில்லை. நீண்ட காலமாக தமிழ் சினிமாவில் தலை காட்டாத இவர் இனிமேல் திரைப்படங்களில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Read more about: karan trending கரண்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X