சிவகார்த்திகேயன் The Boss.. சிபி சக்கரவர்த்தி ஒரு முடிவோடுதான் இருக்காரு போல
சென்னை: சிவகார்த்திகேயன் நடிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் அமரன். கமல் ஹாசன் தயாரித்திருக்கும் இப்படத்தில் சாய் பல்லவி ஹீரோயினாக நடித்திருக்கிறார். அக்டோபர் மாதம் 31ஆம் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு படமானது ரிலீஸாகவிருக்கிறது. இதற்கு முன்பு அவர் நடிப்பில் வெளியான அயலான், மாவீரன் ஆகிய இரண்டு படங்களுமே ஹிட்டடித்திருக்கின்றன. இந்தச் சூழலில் அவரும் சிபி சக்கரவர்த்தியும் மீண்டும் இணையவிருப்பதாக கூறப்படுகிறது.
சின்னத்திரையில் தனது கரியரை ஆரம்பித்த சிவகார்த்திகேயன் இப்போது கோலிவுட்டின் பெரிய ஹீரோக்களில் ஒருவராக இருக்கிறார். விஜய் எப்படி தான் வளர்ந்துவந்த காலத்தில் சிறுவர்கள், சிறுமிகள், குடும்பத்தினரை கவர்ந்தாரோ அதேபோல் சிவாவும் வளர்ந்திருக்கிறார். அதனை விஜய்யும் ஒரு மேடையில் பாராட்டி பேசியிருந்தார். எஸ்கே நடிப்பில் கடைசியாக வெளியான அயலான், மாவீரன் ஆகிய இரண்டு படங்களுமே சூப்பர் டூப்பர் ஹிட்டடித்திருந்தன. வசூல் ரீதியாக மட்டுமின்றி விமர்சன ரீதியாகவும் கொண்டாடப்பட்டது.

அமரன்: இப்போது அவர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் அமரன் படத்தில் நடித்து முடித்திருக்கிறார். ரங்கூன் படத்தை இயக்கி மிகப்பெரிய கவனத்தை ஈர்த்த ராஜ்குமார் பெரியசாமி இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார். கமல் ஹாசன் தயாரிப்பில் உருவாகியிருக்கும் இதில் சாய் பல்லவி ஹீரோயின். அயலான், மாவீரன் வெற்றிகளை தொடர்ந்து இந்தப் படமும் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்து சிவா ஹாட்ரிக் வெற்றியை பெறுவார் என்று அவரது ரசிகர்கள் ரொம்பவே எதிர்பார்த்திருக்கிறார்கள்.
உண்மை சம்பவம்: இந்திய ராணுவத்தில் பணியாற்றி வீர மரணம் அடைந்த தமிழ்நாட்டை சேர்ந்த முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து இந்தப் படம் உருவாகியிருக்கிறது. இதன் க்ளிம்ப்ஸ், டீசர் உள்ளிட்டவைகள் எல்லாம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றன. மேலும் ராணுவ வீரராக சிவகார்த்திகேயன் பக்காவாக ஃபிட்டாகியிருக்கிறார். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு படமானது அக்டோபர் 31ஆம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. படம் கண்டிப்பாக ஹிட்டடிக்கும் என்ற நம்பிக்கையில் எஸ்கேவும், அவரது ரசிகர்களும் இருக்கிறார்கள்.
சிபி சக்கரவர்த்தியுடன்: அமரன் படத்தை முடித்திருக்கும் சிவகார்த்திகேயன் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ஒரு படத்தில் கமிட்டானார். படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்தது. இப்போது இறுதிக்கட்ட பணிகள் நடந்துவருவதாக கூறப்படுகிறது. இந்தப் படத்தை முடித்துவிட்டு வெங்கட் பிரபுவுடன் இணையவிருந்தார். ஆனால் அதற்கிடையே சிபி சக்கரவர்த்தி சொன்ன கதையில் சிவா நடித்துவிட்டு வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்கலாம் என்று கூறப்படுகிறது.
படத்தின் டைட்டில்: ஏற்கனவே சிபியும் சிவாவும் இணைந்த டான் படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. இதன் காரணமாக இந்தப் படத்தின் மீதும் உச்சக்கட்ட எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. இந்நிலையில் இருவரும் இணையப்போகும் படம் பற்றிய புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. அதன்படி படத்துக்கு The Boss என்று பெயர் வைக்கப்பட்டிருப்பதாகவும்; அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாகலாம் என்றும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.


Click it and Unblock the Notifications











