சித்தார்த்துக்கு மீண்டும் திருமணம்.. ஏன் தெரியுமா?.. ரசிகர்கள் உச்சக்கட்ட ஆச்சரியம்
சென்னை: மணிரத்னத்திடம் உதவி இயக்குநராக இருந்து நடிகராக மாறியவர் சித்தார்த். தமிழில் குறிப்பிடத்தக்க நடிகர்களில் ஒருவராக இருக்கும் அவர் கடைசியாக சித்தா படத்தில் நடித்தார். அடுத்ததாக மிஸ் யூ படம் வரவிருக்கிறது. சூழல் இப்படி இருக்க சில மாதங்களுக்கு முன்பு அவர் நடிகை அதிதியை திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு பலரும் தங்களது வாழ்த்தினை தெரிவித்தார்கள். இப்போது மீண்டும் ராஜஸ்தானில் திருமணம் நடந்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்திய அளவில் முக்கியமான இயக்குநர்களில் ஒருவர் மணிரத்னம். அவரிடம் உதவி இயக்குநராக தனது சினிமா பயணத்தை ஆரம்பித்தவர் சித்தார்த். கன்னத்தில் முத்தமிட்டால் உள்ளிட்ட படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றிய சித்தார்த்தை; இயக்குநர் ஷங்கர் தனது பாய்ஸ் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகப்படுத்தினார். அந்தப் படம் வெளியானபோது மோசமான விமர்சனங்களை பெற்றாலும் இன்றளவும் பலரது ஃபேவரைட்டாக இருக்கிறது அந்தப் படம்.

தொடர்ந்து ஹீரோதான்: பாய்ஸ் படம் சித்தார்த்துக்கும் நல்ல பெயரை பெற்றுக்கொடுத்ததை அடுத்து தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்தினார். அந்தவகையில் அவர் ஆய்த எழுத்து படத்தில் நடித்தார். பிறகு தமிழில் அவருக்கு மார்க்கெட் ஒழுங்காக இல்லாததால் தெலுங்கு பக்கம் கவனம் செலுத்திய அவர் தொடர்ந்து அங்கு நடித்துக்கொண்டிருந்தார். அதேபோல் ஹிந்தியிலும் சில படங்களில் நடித்த அவர்; நீண்ட நாட்களுக்கு பிறகு தமிழில் 180 படத்தின் மூலம் ரீ எண்ட்ரி கொடுத்தார்.
தமிழில் பிஸி: அதனையடுத்து தீயாய் வேலை செய்யணும் குமாரு, உதயம் NH4, காவியத் தலைவன், காதலில் சொதப்புவது எப்படி என்று வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து பிஸியாக நடித்தாலும் அவர் எதிர்பார்த்த திருப்புமுனை எதிலுமே கிடைக்கவில்லை. அதேசமயம் தெலுங்கு, ஹிந்தியில் அவருக்கென்று நல்ல வரவேற்பு கிடைத்தது. இதற்கிடையே நடிகராக மட்டுமின்றி பாடகராகவும் சில பாடல்களை பாடியிருக்கிறார் அவர்.
இந்தியன் 2: தமிழில் தனக்கு எப்போது பெரும் வெற்றி கிடைக்கும் என்று எதிர்பார்த்திருந்த அவருக்கு சித்தா படம் அதனை கொடுத்தது. படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்த சூழலில் அடுத்ததாக கமல் ஹாசனுடன் இந்தியன் 2 படத்தில் நடித்தார். ஆனால் அந்தப் படம் படுதோல்வியை சந்தித்தது. அதுமட்டுமின்றி சித்தார்த் ஏற்றிருந்த கதாபாத்திரமும், அவரது நடிப்பும் பெரும் கிண்டலுக்கு உள்ளானது. சூழல் இப்படி இருக்க அவர் இப்போது மிஸ் யூ என்ற படத்தில் நடித்து முடித்திருக்கிறார். விரைவில் படம் வெளியாகவிருக்கிறது.
திருமணம்: இதற்கிடையே சித்தார்த்துக்கு ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து ஆனது. மேலும் சமந்தாவை சில காலம் காதலித்து பிரிந்தார். சூழல் இப்படி இருக்க மகா சமுத்திரம் படத்தில் நடித்தபோது நடிகை அதிதி ராவை காதலித்தார். அவர்களது திருமணம் கடந்த செப்டம்பர் மாதம் ஹைதராபாத்தில் இருக்கும் பழமையான கோயில் ஒன்றில் நடைபெற்றது. அதிதிக்கும் இந்தத் திருமணம் இரண்டாவது திருமணம் என்பது குறிப்பிடத்தக்கது. திருமண வாழ்க்கையை இருவரும் சுமூகமாக நகர்த்திக்கொண்டிருக்கின்றனர்.
இரண்டாவது முறை திருமணம்: இந்நிலையில் சித்தார்த்துக்கும் அதிதி ராவுக்கும் மீண்டும் ராஜஸ்தானில் வைத்து திருமணம் நடந்திருக்கிறது. ராஜஸ்தான் மாநிலம் பிஷன்கார்க்கில் இருக்கும் அலியா கோட்டையில் இந்தத் திருமணம் நடந்தது. அங்கு வைத்து திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று இரண்டு பேருமே ஆசைப்பட்டதன் பேரில் இந்தத் திருமணம் நடந்திருப்பதாக கூறப்படுகிறது. இரண்டாவது முறையாக திருமணம் செய்துகொண்ட புகைப்படங்களை அதிதி ராவ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து, 'The Best Thing To Hold on To In Life Is Each Other' என்று குறிப்பிட்டிருக்கிறார்.


Click it and Unblock the Notifications











