இந்துத்துவா தீவிரவாதி: ஹெச். ராஜாவை விளாசிய சித்தார்த்
சென்னை: நீதிமன்றத்தை அசிங்கமாக பேசிய பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜாவை இந்துத்துவா தீவிரவாதி என்று விளாசியுள்ளார் நடிகர் சித்தார்த்.
புதுக்கோட்டை மாவட்டம் மெய்யபுரம் அருகே பள்ளிவாசல் இருக்கும் பகுதியில் விநாயகர் சிலை ஊர்வலத்திற்கான மேடை அமைக்க பாஜகவினருக்கு போலீசார் அனுமதி மறுத்தனர்.
இதையடுத்து பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜா ஹைகோர்ட்டாவது ம......வது என்று திட்டிய வீடியோ வெளியாகி வைரலானது.
வைரல்
உயர் நீதிமன்றத்தை தகாத வார்த்தையால் திட்டிய ராஜா மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசியல் தலைவர்களும், பொது மக்களும் கோரிக்கை விடுத்து வருகிறார்கள். உயர் நீதிமன்றத்தை நான் திட்டவில்லை. அது என் குரலே இல்லை யாரோ டப்பிங் பேசியுள்ளார்கள் என்று விளக்கம் அளித்துள்ளார் ராஜா. முதலில் அட்மின், தற்போது டப்பிங்கா என்று அவரை சமூக வலைதளங்களில் விளாசிக் கொண்டிருக்கிறார்கள்.
சித்தார்த்
ஹெச். ராஜாவின் வீடியோவை பார்த்த நடிகர் சித்தார்த் காட்டமாக ட்வீட்டியுள்ளார். அதில் அவர் ராஜாவை இடியட் என்றும், இந்துத்துவா தீவிரவாதி என்றும் விமர்சித்துள்ளார்.
போலீஸ்
சித்தார்த் சொல்வதை ஏற்கிறேன். ஒரு போலீஸ் அதிகாரியை அவரின் கடமையை செய்யாமல் இருக்க லஞ்சம் தருகிறேன் என்ற ஹெச். ராஜாவை கைது செய்ய வேண்டும் என ஒருவர் கமெண்ட் போட்டுள்ளார்.
பாராட்டு
ஹெச். ராஜாவை தில்லாக கண்டித்துள்ள சித்தார்த்தை சிலர் பாராட்டியுள்ளனர். சிலர் போய் நடிங்க சித்தார்த். இது எல்லாம் உங்களுக்கு தேவையில்லாத வேலை என்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











