நிறைய தப்பு... காலையிலேயே அழுவேன்.. அதை பார்த்து சந்தோஷப்படுவார்.. அதிதி பற்றி சித்தார்த் ஓபனாக டாக்

சென்னை: நடிகர் சித்தார்த் ஹீரோவாக கடைசியாக சித்தா படத்தில் நடித்திருந்தார். படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. அவரது நடிப்பும் பெரும் வரவேற்பை பெற்றது. அடுத்ததாக அவர் முக்கியமான ரோல் ஏற்ற இந்தியன் 2 படம் வெளியானது. ஆனால் அந்தப் படம் நெகட்டிவ் விமர்சனங்களை பெற்றது. இந்தச் சூழலில் அவர் நடிகை அதிதியை காதலித்துவந்த நிலையில் இருவரது திருமணம் சில நாட்களுக்கு முன்பு ஹைதராபாத்தில் சிம்பிளாக நடந்து முடிந்தது.

தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வருபவர் சித்தார்த். இயக்குநர் ஆக வேண்டும் என்ற ஆசையோடு இருந்தவர் பாய்ஸ் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். இந்தியாவின் முக்கிய இயக்குநர்களில் ஒருவரான மணிரத்னத்திடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர். ஆனால் படம் எதுவும் இதுவரை இயக்கவில்லை. தென்னிந்திய மொழிகள் மட்டுமின்றி ஹிந்தியிலும் நடித்திருக்கிறார் அவர்.

siddharth aditi

ஓபன் டாக்: சித்தார்த்தை பொறுத்தவரை தனக்கு மனதில் இருப்பதை அப்படியே பேசக்கூடியவர். குறிப்பாக அரசாங்கம் ஏதேனும் தவறு செய்தால் யாருக்கும் அஞ்சாமல் ட்வீட்டும் போடுவார்.அப்படி அவர் பதிவு செய்திருந்த பல ட்வீட்கள் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியிருக்கின்றன. ஆனால் சமீப காலமாக சமூக வலைதளங்களில் அமைதியாக இருந்துவருகிறார் சித்தார்த்.

சித்தா: சூழல் இப்படி இருக்க அவர் ஹீரோவாக சித்தா என்ற படத்தில் கடைசியாக நடித்திருந்தார். படத்தை அருண்குமார் இயக்கியிருந்தார். நல்ல எதிர்பார்ப்புக்கிடையே வெளியான படத்துக்கு ரசிகர்கள் தங்களது பெரும் ஆதரவை கொடுத்தனர். குறிப்பாக சித்தார்த்தின் கரியரிலேயே இந்தப் படம்தான் பெஸ்ட் படமாக அமைந்துவிட்டது எனவும் ரசிகர்கள் கூறினர். இதனால் சித்தார்த் உச்சக்கட்ட மகிழ்ச்சியில் இருந்தார்.

இந்தியன் 2: சித்தா படத்தின் வெற்றிக்கு பிறகு உற்சாகமாகவே காணப்பட்டார் சித்தார்த். இதனையடுத்து அவரது நடிப்பில் ஷங்கரின் இயக்கத்தில் இந்தியன் 2 படம் வெளியானது. அந்தப் படத்தில் முக்கியமான ரோலை ஏற்றிருந்தார் சித்தார்த். மேலும் இந்தப் படத்தை ரொம்பவே எதிர்பார்த்திருந்தார். ஆனால் அவர் எதிர்பார்த்ததற்கு மாறாக நடந்து படம் நெகட்டிவ்வான விமர்சனங்களை சந்தித்தது. முக்கியமாக சித்தார்த் ஏற்றிருந்த கதாபாத்திரமும் பெரும் ட்ரோல்களை சந்தித்தது.

அதிதியுடன் திருமணம்: இதற்கிடையே நடிகை அதிதியை காதலித்துவந்தார் சித்தார்த். இருவரது திருமணத்துக்கும் இரு வீட்டாரின் சம்மதம் கிடைத்ததையடுத்து சில நாட்களுக்கு முன்பு ஹைதராபாத்தில் இருக்கும் பழமையான கோயில் ஒன்றில் திருமணம் செய்துகொண்டார்கள். அவர்களுக்கு பலரும் தங்களது வாழ்த்தினை தெரிவித்துவரும் சூழலில் சித்தார்த் அதிதி பற்றி பேசிய விஷயம் ஒன்று ட்ரெண்டாகியுள்ளது.

சித்தார்த் பேட்டி: அவர் அளித்திருந்த ஒரு பேட்டியில், “நான் ஐந்து நிமிடங்களுக்குள் நிறைய தவறுகளை செய்வேன். எனவே அதிதியிடம் ஐ லவ் யூ என்ற வார்த்தையைவிடவும் மன்னித்துக்கொள் என்ற வார்த்தையைத்தான் அதிகம் யூஸ் செய்வேன். 90 சதவீதம் நான் மன்னிப்புதான் கேட்பேன். அவர் காலையில் எழுந்தவுடனேயே என்னுடைய விருப்பமே இல்லாமல் என்னை எழுப்பிவிடுவார். ஐயோ எனது நாள் தொடங்கிவிட்டதே என்று அழுதபடியேதான் எழுவேன். அதிதியோ ஒரு குழந்தையிடமிருந்து மிட்டாயை பறித்துக்கொண்டதுபோல் என்னை பார்த்து சந்தோஷப்படுவார்” என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X