அவங்க வீட்ல ரவி மோகன் அப்படித்தான்.. எப்போதுமே நல்லாருக்கணும்.. சித்தார்த் போட்டு உடைச்சிட்டாரே!

சென்னை: மணிரத்னத்திடம் உதவி இயக்குநராக இருந்து நடிகராக மாறியவர் சித்தார்த். தமிழில் குறிப்பிடத்தக்க நடிகர்களில் ஒருவராக இருக்கும் அவர் இந்தியன் 2 படத்தில் நடித்திருந்தார். அடுத்தாக ஸ்ரீகணேஷ் இயக்கத்தில் 3 BHK படத்தில் நடித்திருக்கிறார். படமானது ஜூலை 4ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. இந்நிலையில் அவர் ரவி மோகன் குறித்து பேசியிருக்கும் விஷயம் ட்ரெண்டாகியிருக்கிறது.

மணிரத்னத்திடம் கன்னத்தில் முத்தமிட்டால் உள்ளிட்ட படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றிய சித்தார்த்தை; இயக்குநர் ஷங்கர் தனது பாய்ஸ் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகப்படுத்தினார். அந்தப் படம் வெளியானபோது மோசமான விமர்சனங்களை பெற்றாலும் இன்றளவும் பலரது ஃபேவரைட்டாக இருக்கிறது அந்தப் படம்.

Siddharth Open Talks about Ravi Mohan in 3 BHK Movie Trailer Launch
Photo Credit:

நடித்தால் ஹீரோதான்: பாய்ஸ் படம் சித்தார்த்துக்கும் நல்ல பெயரை பெற்றுக்கொடுத்ததை அடுத்து தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்தினார். அந்தவகையில் அவர் ஆய்த எழுத்து படத்தில் நடித்தார். பிறகு தமிழில் அவருக்கு மார்க்கெட் ஒழுங்காக இல்லாததால் தெலுங்கு பக்கம் கவனம் செலுத்திய அவர் தொடர்ந்து அங்கு நடித்துக்கொண்டிருந்தார். அதேபோல் ஹிந்தியிலும் சில படங்களில் நடித்த அவர்; நீண்ட நாட்களுக்கு பிறகு தமிழில் 180 படத்தின் மூலம் ரீ எண்ட்ரி கொடுத்தார்.

தமிழில் பிஸி நடிகர்: அதனையடுத்து தீயாய் வேலை செய்யணும் குமாரு, உதயம் NH4, காவியத் தலைவன், காதலில் சொதப்புவது எப்படி என்று வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து பிஸியாக நடித்தாலும் அவர் எதிர்பார்த்த திருப்புமுனை எதிலுமே கிடைக்கவில்லை. அதேசமயம் தெலுங்கு, ஹிந்தியில் அவருக்கென்று நல்ல வரவேற்பு கிடைத்தது. இதற்கிடையே நடிகராக மட்டுமின்றி பாடகராகவும் சில பாடல்களை பாடியிருக்கிறார் அவர்.

இந்தியன் 2: தமிழில் தனக்கு எப்போது பெரும் வெற்றி கிடைக்கும் என்று எதிர்பார்த்திருந்த அவருக்கு சித்தா படம் அதனை கொடுத்தது. படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்த சூழலில் அடுத்ததாக கமல் ஹாசனுடன் இந்தியன் 2 படத்தில் நடித்தார். ஆனால் அந்தப் படம் படுதோல்வியை சந்தித்தது. அதுமட்டுமின்றி சித்தார்த் ஏற்றிருந்த கதாபாத்திரமும் கடுமையான ட்ரோலை சந்தித்தது. இப்போது அவர் ஸ்ரீகணேஷ் இயக்கத்தில் 3 BHK படத்தில் நடித்திருக்கிறார்.

சித்தார்த் பேச்சு: படமானது ஜூலை 4ஆம் தேதி ரிலீஸாகவிருக்கிறது.சரத்குமார், தேவயானி உள்ளிட்டோரும் நடித்திருக்கிறார்கள். படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் ரவி மோகன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். அப்போது ரவி குறித்து பேசிய சித்தார்த், 'எடிட்டர் மோகன் வீட்டில் ரவி எப்படியோ அப்படித்தான் நானும் அவர்கள் வீட்டில். என்னுடைய வீட்டிலும் ரவி இன்னொரு மகன்தான்.

நல்லாருக்கணும்: தெலுங்கில் நான் நடித்த பொம்மரிலு திரைப்படத்தின் ரீமேக்கான சந்தோஷ் சுப்ரமணியம் படத்தில் ரவி நடித்தார். உண்மையில் சொல்ல வேண்டுமென்றால் அந்தப் படத்தில் நடப்பதுபோன்றுதான் ரவியின் வீட்டிலும் நடக்கும். நான்தான் ரவியின் கேரக்டரில் நடித்தேன். நானும் ரவியும் ரொம்பவே நெருக்கமான நண்பர்கள். ஒருவரின் வளர்ச்சியில் ஒருவர் உறுதுணையாக இருக்கிறோம். ரவி எப்போதுமே நன்றாக இருக்க வேண்டும்" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X