சித்தார்த் சுக்லா மரணத்திற்கான காரணம் என்ன? ஆய்வுக்கு அனுப்பப்பட்ட உடல் உறுப்புகள்!

சென்னை: சித்தார்த் சுக்லாவின் திடீர் மரணம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தயுள்ள நிலையில் அவரது உடல் உறுப்புகள் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளன.

பிக்பாஸ் 13 டைட்டில் வின்னரான சித்தார்த் சுக்லா நேற்று முன்தினம் காலமானார். ஏராளமான டிவி நிகழ்ச்சிகளில் பங்கேற்றார் சித்தார்த் சுக்லா.

40 வயதான சித்தார்த் சுக்லா, சினிமா நடிகர், சின்னத்திரை நடிகர், தொகுப்பாளர், மாடல் என பல முகங்களை கொண்டிருந்தார்.

உடல்நிலை சரியில்லை

உடல்நிலை சரியில்லை

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு தற்போதுதான் சித்தார்த் சுக்லாவுக்கு பாலிவுட் படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்து வந்தது. இந்நிலையில் கடந்த 2ஆம் தேதி இரவு 9.30 மணிக்கு வீட்டிற்கு வந்த சித்தார்த் சுக்லா தனக்கு உடல் நிலை சரியில்லை என கூறியுள்ளார்.

ஓய்வெடுக்கும்படி கூறிய குடும்பத்தினர்..

ஓய்வெடுக்கும்படி கூறிய குடும்பத்தினர்..

இதனை தொடர்ந்து அவரது அம்மாவும் அவரது காதலியுமான ஷெனாஸ் சித்தார்த் சுக்லாவுக்கு நிம்பு பாணியும் ஐஸ்க்ரீமும் கொடுத்துள்ளனர். அதன் பிறகும் சித்தார்த் சுக்லாவின் உடல்நிலை சீராகவில்லை. இதனை தொடர்ந்து அம்மாவும் காதலியும் அவரை ஓய்வெடுக்கும்படி கூறியுள்ளனர்.

காதலியை தட்டி கொடுக்கக்கூறிய சித்தார்த்

காதலியை தட்டி கொடுக்கக்கூறிய சித்தார்த்

அப்போது தனது காதலியான ஷெனாஸை தன்னுடன் இருக்குமாறு கூறிய சித்தார்த் சுக்லா அவரது மடியில் படுத்து தன்னை தட்டிக் கொடுக்குறுமாறு கூறியுள்ளார். இதனை தொடர்ந்து காதலி தட்டி கொடுக்க அவரது மடியில் தூங்கியுள்ளார் சித்தார்த். நள்ளிரவு 1.30 மணியளவில் சித்தார்த் சுக்லாவை தனது மடியில் இருந்து மெதுவாக கீழே படுக்க வைத்துள்ளார் ஷெனாஸ்.

அசைவின்றி கிடந்த சித்தார்த்

அசைவின்றி கிடந்த சித்தார்த்

தானும் அருகிலேயே படுத்துள்ளார் ஷெனாஸ். காலையில் எழுந்து பார்த்த போது அதே பொஸிஷனில் சித்தார்த் இருப்பதை பார்த்து அவரை எழுப்பியுள்ளார். ஆனால் சித்தார்த் சுக்லா எந்த அசைவும் இல்லாமல் இருந்ததால் அதிர்ச்சியடைந்த ஷெனாஸ் குடும்பத்தினரை அழைத்துள்ளார்.

மரணத்தை உறுதி செய்த மருத்துவர்

மரணத்தை உறுதி செய்த மருத்துவர்

குடும்பத்தினர் வந்து எழுப்பியும் சித்தார்த் எழுந்திரிக்காததால் மருத்துவரை அழைத்துள்ளனர். வீட்டிற்கு வந்த மருத்துவர் சித்தார்த்தை பரிசோதித்ததில் அவர் ஏற்கனவே மரணமடைந்ததாக தெரிவித்தார். இதனை தொடர்ந்து மும்பை கூப்பர் மருத்துவமனையில் அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு நேற்று குடும்பத்தினரிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது.

உடல் நேற்று தகனம்

உடல் நேற்று தகனம்

சித்தார்த் சுக்லாவின் உடல் மும்பை ஓஷிவாரா பகுதியில் உள்ள சுடுகாட்டில் நேற்று தகனம் செய்யப்பட்டது. அவரது இறுதிச்சடங்கில் அவரது குடும்பத்தினர் காதலி ஷெனாஸ், காதலியின் குடும்பத்தினர், பாலிவுட் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

இயற்கைக்கு மாறான மரணம் அல்ல

இயற்கைக்கு மாறான மரணம் அல்ல

சித்தார்த் சுக்லாவின் இறுதிச்சடங்கில் அவரது காதலியும் அம்மாவும் கதறி அழுத போட்டோக்கள் இணையத்தில் வெளியாகி கலங்க வைத்து வருகிறது. இந்நிலையில் சித்தார்த் சுக்லாவின் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியாகியுள்ளது. அதில் சித்தார்த் சுக்லாவின் மரணத்தில் இயற்கைக்கு மாறான மரணத்திற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆய்வுக்கு அனுப்பப்பட்ட உறுப்புகள்

ஆய்வுக்கு அனுப்பப்பட்ட உறுப்புகள்

மேலும் மாரடைப்பே அவரது மரணத்துக்கு வழிவகுத்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே நடிகர் சித்தார்த் சுக்லாவின் உடல் உள் உறுப்பு மாதிரிகள் மும்பையில் உள்ள கலினா தடய அறிவியல் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன. மேலும் சில உறுப்பு மாதிரிகள் மருத்துவ கல்லூரியின் நோயியல் ஆய்வகத்திற்கு பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது.

பரிசோதனை அறிக்கை வந்த பின்பே

பரிசோதனை அறிக்கை வந்த பின்பே

அந்த பரிசோதனை அறிக்கை வந்த பின்பே அவரின் மரணத்திற்கான முழுமையான காரணம் தெரியவரும் என அதிகாரிகள் தெரிவித்தனர். சித்தார்த் சுக்லாவின் இந்த திடீர் மரணம் ரசிகர்களையும் பிரபலங்களையும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X