எல்லாருக்கும் டைவர்ஸ் டைவர்ஸ்னு போக.. எனக்கு கல்யாணம் கல்யாணம்னு போயிட்டு இருக்கு.. சித்தார்த் செம!
சென்னை: நடிகர் சித்தார்த் நடித்த மிஸ் யூ திரைப்படம் ஃபெஞ்சல் புயல் காரணமாக தியேட்டர் ரிலீஸை போன வாரம் மிஸ் செய்த நிலையில், அடுத்த வாரம் தியேட்டரில் அந்த படம் வெளியாகப் போகிறது. புயல், மழை பாதிப்பெல்லாம் இல்லாமல் வரப்போகிறது என நேற்று நடைபெற்ற பிரஸ்மீட்டில் பேசினார். அப்போது சித்தார்த் இப்போதெல்லாம் படங்களில் நடிப்பதில்லையா என்கிற கேள்வியை பத்திரிகையாளர் ஒருவர் எழுப்ப டென்ஷன் ஆகிவிட்டார்.
மேலும், தனது திருமண வாழ்க்கை குறித்தும் சில நாட்களுக்கு பேப்பரை திறக்காமல் இருப்பதே நல்லது என்றும் பேசிய சித்தார்த் பாப் கார்னையும் தான் வாங்கித் தருவதாக பேசியது எல்லாம் அல்டிமேட்டாக ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது.

நடிகர்களின் விவாகரத்து தொடர்பாக கருத்து தெரிவித்த சித்தார்த் இந்த படத்தில் ரிலேஷன்ஷிப் பிரச்சனைகள் தொடர்பான காட்சிகள் எல்லாம் இருப்பதாகவும் கூறினார்.
இந்தியன் 2 நல்ல படம் கிடையாதா?: நடிகர் சித்தார்த் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான சித்தா திரைப்படம் மிகச் சிறந்த படமாக மாறியது. தயாரித்து நடித்த சித்தார்த்துக்கு நல்ல லாபத்தை அந்த படம் பெற்றுத் தந்தது. அதன் பின்னர் இந்த ஆண்டு சித்தார்த் நடிப்பில் வெளியான இந்தியன் 2 திரைப்படம் அதிகளவிலான ட்ரோல்களை சந்தித்த நிலையில், இந்தியன் 2 படத்தை மோசமான படம் என்பது போல பத்திரிகையாளர் பேச, இந்தியன் 2 நல்ல படம் இல்லையா? அது உங்களோட கருத்து. எங்க வீட்டில் எல்லோருக்கும் அந்த படம் பிடிச்சிருக்கு. ஷங்கர் சார் இயக்கத்தில் கமல் சாரோட நடிச்சதை அனைவரும் பாராட்டினார்கள் என்றார்.
கல்யாணம் கல்யாணம்னு போயிட்டு இருக்கு: செலிபிரிட்டிகளின் வாழ்க்கையில் தொடர்ந்து டைவர்ஸ் பிரச்சனை வருதே அது பற்றி உங்களோட மிஸ் யூ படத்தில் ஏதாவது சீன் இருக்கா எனக் கேட்க, நிறைய டைவர்ஸ் டைவர்ஸ்னு போகுது. ஆனால், என்னோட வாழ்க்கையில் கல்யாணம் கல்யாணம்னு போகுது என பேசிய சித்தார்த் உங்களுக்கு எல்லாம் ரொம்பவே நன்றிக் கடன் பட்டிருக்கேன். எப்போதுமே எனக்கு சப்போர்ட்டாக இருந்திருக்கீங்க, கொஞ்ச நாள் பேப்பரை மட்டும் திறக்காமல் இருந்தால் நல்லா இருப்பேன்னு நினைக்கிறேன்னு கலகலப்பாக பேசினார்.
பாப்கார்ன் நான் வாங்கித் தரேன்: குடும்பத்தோடு தியேட்டருக்கு வந்தால், பார்க்கிங் கட்டணம் முதல் பாப்கார்ன் வரை நிறைய செலவாகுது என பத்திரிகையாளர் ஒருவர் கேள்வி எழுப்ப, 22 வருஷமா இந்த பிரச்சனை ஓடுது. அதுக்கு நான் மட்டும் என்ன தீர்வு சொல்லிவிட முடியும். உங்களுக்கு வேண்டுமானால் நான் ஸ்பான்சர் பண்ணி பாப்கார்ன் வாங்கித் தரேன். மக்களுக்கு நல்ல படத்தை கொடுக்க வேண்டும் என்று தான் நினைக்கிறேன். படத்தை பிடித்திருந்தால் பாருங்கள். பிடிக்கவில்லை என்றால் உங்க ஸ்டைலிலேயே விமர்சனம் செய்யுங்கள். அதற்கு எல்லாம் நான் வருத்தப்படவோ தடை சொல்லவோ மாட்டேன். யூடியூப் விமர்சனங்களுக்கு அதிகாரத்தில் இருப்பவர்கள் தடை விதித்துள்ளனர். அது அவர்களின் விருப்பம். என் படத்தை பார்த்துவிட்டு உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால் எப்படி வேண்டுமானால் கழுவி ஊற்றுங்கள். ஒரு 4 நாள் முன்பாகவே உங்களுக்கு பத்திரிகையாளர் காட்சி திரையிடுகிறேன். நீங்க எல்லாம் பார்த்துட்டு படத்தை பற்றி நாலு நல்ல வார்த்தை எழுதினால் தான் ஆடியன்ஸ் தியேட்டருக்கு வருவார்கள் என சித்தார்த் யதார்த்தத்துடன் பேசியுள்ளார்.


Click it and Unblock the Notifications











