அட ஏங்க எப்பப் பார்த்தாலும் சமந்தா பின்னாடியே திரியறீங்க.. சித்தார்த் எரிச்சல்

By Sudha

எங்கு போனாலும், தன்னிடம் சமந்தா பற்றியே கேள்விகள் கேட்கப்படுவதால் செம கடுப்பாக இருக்கிறாராம் நடிகர் சித்தார்த்...

நடிப்பதை விட கஷ்டமானது, இந்த செய்தியாளர்களை சமாளிப்பதுதான். அதிலும் ஏதாவது கிசுகிசுவில் மாட்டி விட்டால் போதும் பிய்த்து எடுத்து விடுவார்கள் நம்மவர்கள்.

அப்படித்தான் இப்போது சிக்கித் தவிக்கிறாராம் சித்தார்த். காளஹஸ்தி கோவிலுக்கு நடிகை சமந்தா மற்றும் தனது பெற்றோருடன் சேர்ந்து போனார். அதுகுறித்து இப்போது தொடர்ந்து அவரிடம் விலாவாவரியாக விசாரித்து வருகிறார்கள் நிருபர்கள். இதனால் கடுப்பாக இருக்கிறாராம் சித்தார்த்.

அதாவது மேட்டர் என்னன்னா...

அதாவது மேட்டர் என்னன்னா...

சில மாதங்களுக்கு முன்னாடி சமந்தா, சித்தார்த், அவரோட அப்பா, அம்மா ஆகியோர் காளஹஸ்தி கோவிலுக்கு போனார்கள். போய் பரிகார பூஜை செய்தார்கள்.

அன்று முதல் இன்று வரை...

அன்று முதல் இன்று வரை...

இதையடுத்து சித்தார்த்தும், சமந்தாவும் காதலிப்பதாக செய்திகள் பரவின. இதை இருவரும் மறுக்கவும் இல்லை. ஆமாம் என்று சொல்லவும் இல்லை.

கிண்டிக் கிளரும் கேள்விகள்

கிண்டிக் கிளரும் கேள்விகள்

இந்த நிலையில் சித்தார்த்தை சந்திக்கும் செய்தியாளர்கள் வழக்கமான கேள்விகளைக் கேட்டு விட்டு கடைசியாக எப்போது சமந்தாவுடன் கல்யாணம் என்ற கேள்வியையும் முன் வைக்கிறார்களாம்.

அட ஏங்க எப்பப் பார்த்தாலும்....

அட ஏங்க எப்பப் பார்த்தாலும்....

இதனால் டென்ஷனாகி விடுகிறாராம் சித்தார்த். ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கை பற்றி கேட்பதற்கு யாருக்கும் உரிமை இல்லை. அதேநேரம் சினிமாவுலக பத்திரிகைகள் ஒரு படத்தை பற்றி விமர்சிக்கலாம். நடிகரின் தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சிக்க அவர்களுக்கு உரிமை கிடையாது.

ஏதாச்சும் லாபம் இருக்கா....

ஏதாச்சும் லாபம் இருக்கா....

சொல்லப்போனால் ஒரு நடிகரின் தனிப்பட்ட வாழ்க்கையை வெளிப்படுத்துவதன் மூலம் அது எந்த வகையிலும் உலகத்துக்கு உதவப்போவதில்லை என்றும் டென்ஷனாக கூறுகிறார் சித்தார்த்.

விடுங்கப்பா...

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X