”வட சென்னை போன்ற ஒரு படத்தில் நடித்துவிட்டேன், வெற்றிமாறன் வேற லெவல்”: சித்தார்த்
Recommended Video

சென்னை: தனுஷின் வட சென்னை படத்தின் கதையை ஒத்த ஒரு படத்தில் நடித்திருப்பதாக நடிகர் சித்தார்த் தெரிவித்துள்ளார்.
வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், ஐஸ்வர்யா ராஜேஷ், ஆண்ட்ரியா, சமுத்திரக்கனி, கிஷோர் மற்றும் பலர் நடித்துள்ள படம் வட சென்னை.

மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இப்படம் நாளை வெளியாக உள்ளது. இப்படத்தின் கதையைப் போலவே உள்ள ஒரு படத்தில் நான் நடித்துள்ளேன் என நடிகர் சித்தார்த் தெரிவித்துள்ளார்.
கேரம் போர்டில் சாதிக்கத் துடிக்கும் இளைஞர் எப்படி பெரிய டானாக மாறுகிறார் என்பது தான் வட சென்னை திரைப்படத்தின் கதை. இதேபோல் ஸ்ட்ரைக்கர் என்ற படத்தில் நான் நடித்துள்ளேன். அதுவும் கேரம் பிளேயராக இருக்கும் ஒருவர் டானாக மாறும் கதைதான் என ட்வீட் செய்துள்ளார்.
மேலும் வெற்றிமாறன் வடசென்னை படத்தை வேற லெவலுக்கு எடுத்துச் சென்றிருப்பார் என நம்பிக்கையுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சித்தார்த் வெற்றிமாறன் மீது வைத்திருக்கும் அதே நம்பிக்கையைத்தான் ரசிகர்களும் வைத்திருக்கின்றனர். அவர்களின் நம்பிக்கை வீண்போகாமல் காப்பாற்றப்படும் என்று நம்புவோம்.


Click it and Unblock the Notifications











