நாளுக்கு நாள் அதிகரிக்கும் ரசிகர் பட்டாளம்... இது சிம்பு க்ரேஸ்!

சென்னை : மாநாடு என்ற பிளாக் பஸ்டர் ஹிட் திரைப்படத்தை கொடுத்து மிகப்பெரிய கம்பேக்கை கொடுத்து இருக்கிறார் சிம்பு.

மாநாடு திரைப்படத்திற்கு பின் இவரின் ரசிகர் பட்டாளம் மிகப்பெரிய அளவில் விரிவடைந்துள்ளது.

சிம்புவை இன்ஸ்டாகிராமில் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை 6 மில்லியன் எட்டியுள்ளது.

சிலம்பரசன்

சிலம்பரசன்

வல்லவன், மன்மதன் போன்ற மாஸ் ஹிட் திரைப்படங்களை கொடுத்த சிம்பு, இளம் ரசிகைகளின் கனவு நாயகனாக வலம் வந்தார். இவர் எந்த அளவுக்கு பிரபலமானாரோ அதற்கு மேல் பல விமர்சனங்களில் சிக்கினார் சிம்பு. எத்தனை விமர்சனங்கள் வந்தாலும், தன்னை எப்போதும் சிறந்த நடிகனாகவே நிலைநிறுத்திக் கொண்டார்.

தோல்வி

தோல்வி

அன்பானவன் அடங்காதவன் அசராதவன் திரைப்பட தோல்விக்குப்பிறகு நான்கு ஆண்டுகளாக, சிம்புவுக்கு பெரிதாக வேலை இல்லை, இதனால் வெளியில் தலைகாட்டாமல் வீட்டிலேயே இருந்தார், அவரது தொழில் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையின் சொல்லும்படி எந்த வெற்றிகளும் இல்லை.

குண்டான சிம்பு

குண்டான சிம்பு

அச்சம் என்பது மடமையடாவில், அவர் உடல் எடை கூடியது, அவருடைய தோற்றம், நடிப்பு எல்லாமே அடியோடு மாறிவிட்டது. அதேபோல செக்கசிவந்த வானம், வந்தா ராஜாவாத்தான் வருவேன் போன்ற திரைப்படத்திலும் உடல் எடை கூடியே காணப்பட்டார். இதனால், சிம்பு இனி இவ்வளவுதான் என்ற பேச்சு சினிமா வட்டாரத்தில் பரவலாகப் பேசப்பட்டது.

சிக்ஸ் பேக்குடன்

சிக்ஸ் பேக்குடன்

உடல்எடையை குறைத்து ஈஸ்வரன் திரைப்படத்தில் கலக்கலாக வந்திருந்தார் சிம்பு. ஆனால், இந்த திரைப்படம் சிம்பு ரசிகர்களுக்கு திருப்தியை தரவில்லை. இதையடுத்து, கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகி வரும் வெந்து தணிந்தது காடு திரைப்படத்தில் சிக்ஸ் பேக்குடன் மாஸான புகைப்படத்தை வெளியிட்டு கோலிவுட்டை வாய்பிளக்க வைத்தார்.

மீண்டும் மாஸ்

மீண்டும் மாஸ்

இதையடுத்து வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவான மாநாடு திரைப்படம் சிம்புக்கு ஒரு கம்பேக் கொடுக்கும் திரைப்படமாக அமைந்து சிம்புவை புகழின் உச்சிக்கே கொண்டு சென்றது. தற்போது பத்துதல, கொரோனாகுமார் போன்ற திரைப்படங்களில் பிஸியாக நடித்து மீண்டும் ஒரு மாஸ் காட்டிவருகிறார்.

6 மில்லியன்

6 மில்லியன்

சோஷியல் மீடியாவில் ஈடுபாடு இல்லாமல் இருந்த சிம்பு தற்போது ட்விட்டர்,இன்ஸ்டாகிராம் பக்கங்களில் மிகவும் சுறுசுறுப்பாக இருக்கிறார். ரசிகர்களை மகிழ்விப்பதற்காக புது புது படங்களையும் பகிர்ந்து வருகிறார். இதையடுத்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவரை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை 6 மில்லியனை எட்டியுள்ளது. இதனை சிம்புவின் ரசிகர்கள் இணையத்தில் கொண்டாடி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X