For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  இன்ஸ்டாவில் ஆக்டிவாக இருக்கும் சிம்பு… 10 மாதத்திலேயே 3 மில்லியன் ஃபாலோயர்ஸ்!

  |

  சென்னை : நடிகர் சிம்பு இன்ஸ்டாகிராம் கணக்கைத் தொடங்கிய சில மாதங்களிலேயே 3 மில்லியன் ஃபாலோயர்ஸ்களை பெற்று சாதனை படைத்துள்ளார்.

  நடிகர் சிம்புவின் பிரச்சனையை தீர்த்து வைத்த ஐசரி கணேஷ்... இன்றைய டாப் 5 பீட்ஸில்!

  சிம்பு தற்போது வெந்து தணிந்த காடு திரைப்படத்தில் பிஸியாக நடித்து வருகிறார்.

  ஸ்பெயினுக்கு பறக்கும் ஷாருக்கான், தீபிகா... எதற்கு தெரியுமா ஸ்பெயினுக்கு பறக்கும் ஷாருக்கான், தீபிகா... எதற்கு தெரியுமா

  சமீபகாலமாக சிம்பு வலைத்தளப் பக்கத்தில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

  சிம்பு பல திறமைகள்

  சிம்பு பல திறமைகள்

  தமிழ் சினிமா கதாநாயகர்களில் நட்சத்திர நடிகராக இருந்துகொண்டே. திரைக்கதை,வசனம் எழுதுதல், பாடல்கள் பாடுதல், இசையமைத்தல், நடிகர்களுக்குப் பின்னணிக் குரல் கொடுத்தல் என்று பல துறைகளில் தமது திறமையை நிரூபித்து வருகிறார் சிம்பு.

  அன்புடன் எஸ்.டி.ஆர்

  அன்புடன் எஸ்.டி.ஆர்

  சிம்பு என்றும் எஸ்.டி.ஆர் என்றும் ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் சிலம்பரசன். டி.ராஜேந்தர் அவர்களின் மகனாவர். டி.ஆரின் உறவைக் காத்த கிளி என்ற திரைப்படத்தில் இரண்டு வயது குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். மேலும் பல திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.

  கதாநாயகனாக

  கதாநாயகனாக

  இதையடுத்து காதல் அழிவதில்லை படத்தின் மூலம் சிம்பு கதாநாயகனாக அறிமுகமானார். இந்த திரைப்படம் சிம்புவுக்கு ஓரளவு பெயரை பெற்றுத்தந்தது. இதையடுத்து தம் படத்தில் நாயகனாக நடித்தார் சிம்பு. இந்தப் படம் வணிகரீதியாக வெற்றிபெற்று சிம்புவை ஒரு ஆக்‌ஷன் நாயகனாக ரசிகர்களிடம் கொண்டு சேர்த்தது.

  வல்லவன் படத்தை இயக்கினார்

  வல்லவன் படத்தை இயக்கினார்

  நாயகனாக 5 படங்களில் மட்டுமே நடித்திருந்த நிலையில் கதை திரைக்கதை இயக்கம் மேற்பார்வை ஆகிய பொறுப்புகளை ஏற்றுக்கொண்டு மன்மதன் படத்தில் நடித்தார். இவ்வளவு சீக்கிரம் இயக்குநருக்கு இணையான பணியைக் கையிலெடுப்பதைப் பலரும் கேலியாகவோ அவநம்பிக்கையுடனோ பார்த்தனர். ஆனால், மன்மதன் காதலை மையப்படுத்திய த்ரில்லர் திரைப்படமாக அமைந்தது இந்த படத்தை அனைவரும் கொண்டாடினர். இதையடுத்து, வல்லவன் படத்தின் மூலம் இயக்குநராகவும் களமிறங்கினார் சிம்பு. பலத்த எதிர்பார்ப்புடன் வெளியான அந்தப் படம் ரசிகர்களை வெகுவாக ஈர்த்தது.

  அன்பானவன் அசராதவன் அடங்காதவன் தோல்வி

  அன்பானவன் அசராதவன் அடங்காதவன் தோல்வி

  ஷூட்டிங்கின் போது டைமுக்கு வர மாட்டார் என்பதே இவரின் மேல் பல தயாரிப்பாளர்கள் வைக்கும் விமர்சனங்களாக இருந்தது. இந்த சூழ்நிலையில் வெளியான அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படம் படு தோல்வியை சந்தித்தது. அதே ஆண்டில் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான செக்கசிவந்த வானம் சிம்புவுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பை உருவாக்கி தந்தது.

  ஈஸ்வரன்

  ஈஸ்வரன்

  செக்க சிவந்த வானம் திரைப்படத்தின் வெற்றியை அடுத்து, அசுர வளர்ச்சியுடன் குண்டாக இருந்த சிம்பு உடலை மெலிந்து சுசீந்திரன் இயக்கத்தில் உருவான ஈஸ்வரன் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படம் பொங்கலுக்கு திரையரங்கில் வெளியாகி வணிகரீதியாக வெற்றியைப் பெற்றுத் தந்தது. சிம்புவின் இந்த திடீர் மாற்றம் அவரது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

  மாநாடு

  மாநாடு

  வெங்கட்பிரபு இயக்கத்தில் மாநாடு திரைப்படத்தை சுரேஷ் காமாட்சி பெரும் பொருட் செலவில் தயாரித்து வருகிறார். இதில் சிம்பு , அப்துல் காலிக் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நடிகை கல்யாணி பிரியதர்ஷன் சிம்புவுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிந்த நிலையில், நடிகர் சிம்பு படக்குழுவினருடன் கேக் வெட்டி கொண்டாடினார்.

  வெந்து தணிந்தது காடு

  வெந்து தணிந்தது காடு

  கெளதம் மேனன் இயக்கத்தில் சிலம்பரசன் நடித்து வரும் படம் வெந்து தணிந்தது காடு. வேல்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படத்துக்குக் கலை இயக்குநராக ராஜீவன், பாடலாசிரியராக தாமரை, இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரஹ்மான் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள். சிலம்பரசன் தொடர்பான பிரச்சினைகள் அனைத்தும் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் பேசி முடிக்கப்பட்ட நிலையில், வெந்து தணிந்தது காடு படத்தின் புதிய போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.

  3 மில்லியன் ஃபாலோயர்ஸ்

  3 மில்லியன் ஃபாலோயர்ஸ்

  சிலம்பரசன் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இன்ஸ்டாகிராம் கணக்கை தொடங்கினார். அதற்குள் 3 மில்லியன் ஃபாலோயர்ஸ்கள் சிம்புவை பின்தொடர்கிறார்கள். இதன் மூலம், குறைந்த நாட்களில் அதிக ஃபாலோயர்ஸ்களை கொண்ட தமிழ் நடிகர் என்ற பெருமையை சிம்பு பெற்றுள்ளார். சமீபகாலமாக சிம்பு இணையத்தில ஆக்டிவாக இருந்து வருகிறார்.

  English summary
  Silambarasan's Instagram account, which is barely a year old, has clocked 3 million followers.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X