சோலோவாக சக்சஸ் மீட் நடத்தும் சிம்பு... ஜனவரி 6ம் தேதி ரசிகர்களுடன் சந்திப்பு

சென்னை : கடந்த மாதத்தில் வெளியான மாநாடு படம் ஒரு மாதத்தை கடந்து வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடி வருகிறது.

இரு தினங்களுக்கு முன்பு இந்தப் படத்தின் சக்சஸ் மீட் சென்னையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் சூட்டிங் காரணமாக நடிகர் சிம்பு பங்கேற்கவில்லை. இது விமர்சனங்களை ஏற்படுத்தியது.

மாநாடு படம்

மாநாடு படம்

நடிகர் சிம்பு, எஸ்ஜே சூர்யா, கல்யாணி பிரியதர்ஷன் நடிப்பில் கடந்த மாதம் 25ம் தேதி ரிலீசானது மாநாடு. வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தை தயாரித்திருந்தார் சுரேஷ் காமாட்சி. தீபாவளி பந்தயத்தில் இருந்த விலகி தனியாக ரசிகர்களை சந்தித்து வெற்றியும் பெற்றுள்ளது மாநாடு.

நல்ல லாபம்

நல்ல லாபம்

இந்தப் படம் வெளியாகி தற்போது ஒரு மாதத்தை கடந்துள்ளது. வெளியான அனைத்து திரையரங்குகளிலும் வெற்றிகரமாக ஓடி விநியோகஸ்தர்களுக்கு நல்ல லாபத்தை பெற்றுத் தந்துள்ளது இந்தப் படம். 100 கோடி க்ளப்பில் இணைந்துள்ள சிம்புவின் முதல் படம் என்ற பெருமையையும் இந்தப் படம் பெற்றுத் தந்துள்ளது.

வெற்றிக் கொண்டாட்டம்

வெற்றிக் கொண்டாட்டம்

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு படம் வெற்றிக் கொண்டாட்டத்தை மேற்கொண்டது. இரு தினங்களுக்கு முன்பு சென்னையில் படத்தின் சக்சஸ் மீட்டை படக்குழுவினர் ஏற்பாடு செய்திருந்தனர். இதில் எஸ்ஜே சூர்யா, இயக்குநர் வெங்கட் பிரபு, தயாரிப்பாளர் சுரேஷ காமாட்சி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

சிம்பு பங்கேற்காத சக்சஸ் மீட்

சிம்பு பங்கேற்காத சக்சஸ் மீட்

படத்தின் முக்கியமானவர்களுக்கு ஆளுயர மாலை அணிவிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டது. மேலும் யுவனின் 25 ஆண்டுகால திரையுலக பயணத்தை போற்றும்வகையில் அவருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. மிகவும் சிறப்பாக நடைபெற்ற இந்த நிகழ்வில் நடிகர் சிம்பு பங்கேற்கவில்லை.

எஸ்ஏசி கேள்வி

எஸ்ஏசி கேள்வி

இந்நிலையில் கூட்டத்தில் பேசிய படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த எஸ்ஏசி இதுகுறித்து கேள்விகளை எழுப்பியிருந்தார். மிகவும் சிறப்பான வெற்றியை சிம்புவிற்கு இந்தப் படம் ஏற்படுத்திக் கொடுத்துள்ள நிலையில் அதை கொண்டாடும் வகையில், சக்சஸ் மீட்டில் அவர் பங்கேற்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.

சிம்புவிற்கு கண்டனம்

சிம்புவிற்கு கண்டனம்

ஆனால் சக்சஸ் மீட்டிற்கு வரமுடியாத வகையில் அப்படி என்ன சூட்டிங் என்றும் வெற்றி வரும்போது அதை சிறப்பான வகையில் எதிர்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார். படத்தின் நாயகன் சிம்புவின் இந்த செயலுக்கு அவர் கண்டனம் தெரிவித்திருந்தார்.

சிம்பு சக்சஸ் மீட்

சிம்பு சக்சஸ் மீட்

அவரின் இந்த பேச்சு திரையுலகில் சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது. சிம்பு சக்சஸ் மீட்டில் பங்கேற்காதது குறித்து விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில் தற்போது வரும் ஜனவரி 6ம் தேதி மாநாடு படத்தின் சக்சஸ் மீட்டை தனியாக நடத்தவுள்ளதாக சிம்பு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சோலோ பர்பார்மன்ஸ்

சோலோ பர்பார்மன்ஸ்

சென்னையில் இந்த நிகழ்வு நடைபெறவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. படக்குழு மொத்தமாக வந்திருந்து படத்தின் வெற்றியை கொண்டாடிய நிலையில், அதில் பங்கேற்காத சிம்பு தற்போது தனியாக சக்சஸ் மீட் நடத்தவுள்ளது தற்போது விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது. சோலோ பர்பார்மன்ஸ் போல என்று ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X