Simbu Net worth: கோலிவுட் இளவரசன் சிம்பு பிறந்தநாள்.. 41 வயதில் இத்தனை கோடிக்கு அதிபதியா?
சென்னை: இயக்குநரும் நடிகருமான டி. ராஜேந்தருக்கும் உஷாவுக்கும் மகனாக 1983ம் ஆண்டு பிப்ரவரி 3ம் தேதி பிறந்த சிம்பு என்கிற சிலம்பரசன் டி.ஆர். இன்று தனது 41வது பிறந்தநாளை எஸ்டிஆர் 48 படத்தின் அறிவிப்பை வெளியிட்டு ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி கொண்டாடி வருகிறார்.
நடிகர், பாடகர், சிறந்த நடனக் கலைஞர் மற்றும் இயக்குநர் என பன்முகத் தன்மை கொண்ட சிம்பு உலக நாயகன் கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிப்பில் தேசிங் பெரியசாமி இயக்கத்தில் உருவாகி வரும் பீரியட் டிராமா படத்தில் போர் வீரனாக டபுள் ஆக்ஷனில் குட் மற்றும் ஈவிலாக நடித்து வரும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியானது.

சிம்புவின் பிறந்தநாளை முன்னிட்டு சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் வாழ்த்துக்களை தெரிவித்தும் காமன் டிபியை தாறுமாறாக உருவாக்கியும் கோலிவு இளவரசன் சிம்பு என கொண்டாடி வருகின்றனர். 41 வயதில் நடிகர் சிம்பு சேர்த்து வைத்துள்ள சொத்து மதிப்பு குறித்த தகவல்களை இங்கே காணலாம்.
41வது பிறந்தநாள்: நடிகர் சிம்பு இன்று தனது 41வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். 1983ம் ஆண்டு இதே நாளில் சென்னையில் பிறந்தவர் சிம்பு. இயக்குநராகவும் நடிகராகவும் தயாரிப்பாளரகாவும் இசையமைப்பாளராகவும் பன்முகத் திறமை கொண்ட டி. ராஜேந்தரின் மகன் சிம்பு அப்பாவை மிஞ்சும் அளவுக்கு சகலகலா வல்லவனாக தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார்.
அப்பா இயக்கத்தில்: 1984ம் ஆண்டு உறவைக் காத்த கிளி படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் சிம்பு. மைதிலி என்னை காதலி, ஒரு தாயின் சபதம், என் தங்கை கல்யாணி, சம்சார சங்கீதம், மோனிஷா என் மோனாலிஷா என பல படங்களில் மாஸ்டர் சிலம்பரசனாக நடித்து அசத்தியவர் சிம்பு. சொன்னால் தான் காதலா படத்தில் இளம் நடிகராக நடித்த அவர் காதல் அழிவதில்லை படத்தில் ஹீரோவாக அறிமுகமானார்.
எல்லா கிராஃப்ட்டும் தெரியும்: தமிழ் சினிமாவில் உள்ள அனைத்து கிராஃப்ட்டுகளும் நடிகர் சிம்புவுக்கு அத்துப்படி. பாடல் வரிகளை எழுதுவது, பாடல்கள் பாடுவது, இசையமைப்பது, வல்லவன் படத்தின் மூலம் இயக்குநராக அவதாரமெடுத்தது என தமிழ் சினிமாவின் ஆல் இன் ஆல் அழகுராஜாவாகவே சிம்பு பல தளங்களில் சிக்ஸர் அடித்து வருகிறார்.
41 வயது முரட்டு சிங்கிள்: சிம்புவுக்கு 41 வயது ஆகியும் இன்னமும் திருமணம் செய்து கொள்ளாமல் உள்ளார். லேடி சூப்பர் ஸ்டார் என கொண்டாடப்படும் நடிகை நயன்தாராவுக்கும் சிம்புவுக்கும் வல்லவன் படத்தில் நடிக்கும் போது காதல் ஏற்பட்டது. ஆனால், அந்த காதல் நீடிக்கவில்லை. அதன் பின்னர், வாலு படத்தில் நடித்த ஹன்சிகாவுடன் சிம்பு காதலில் விழுந்தார். ஆனால், அந்த காதலும் பிரேக்கப் ஆனது. அதன் பின்னர், தற்போது ஒரு பெண்ணை சிம்பு காதலித்து வருவதாகவும் விரைவில் திருமண அறிவிப்பை வெளியிடுவார் என்றும் தகவல் மட்டுமே வெளியாகி வருகிறது. சிம்பு தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரவில்லை.
சொத்து மதிப்பு: குழந்தையில் இருந்தே சினிமாவில் ஊறிப் போய் கிடக்கும் சிம்பு எஸ்டிஆர் 48 படத்துக்கு 20 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்கி நடித்து வருவதாக கூறுகின்றனர். சொந்தமாக வீடு, சொகுசு கார்கள் என ராஜ வாழ்க்கை வாழ்ந்து வரும் சிம்புவிடம் ஒட்டுமொத்தமாக 128 கோடி ரூபாய் சொத்துக்கள் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் எஸ்டிஆர் 48 திரைப்படம் 300 கோடிக்கும் மேல் வசூல் ஈட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து சிம்புவின் சம்பளம் 30 கோடிக்கும் அதிகமாக உயரும் என்கின்றனர்.


Click it and Unblock the Notifications











