நீங்க போடுறது மொக்கை வீடியோ.. கன்றாவியா இருக்கு.. யூடியூபர் இர்ஃபானை ரோஸ்ட் செய்த சிம்பு.. செம தக்

சென்னை: சிம்பு இப்போது வெற்றிமாறன் இயக்கத்தில் அரசன் படத்தில் கமிட்டாகியிருக்கிறார். இதனை முடித்துவிட்டு அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் நடிக்கிறார். இந்த இரண்டு படங்களையும் தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்திலும் ஒரு படத்தில் அவர் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. இதற்கிடையே வெந்து தணிந்தது காடு 2 படம் தொடர்பாக அரசன் ஷூட்டிங் நிறுத்தப்பட்டது. இப்போது மீண்டும் இன்னும் சில நாட்களில் ஷூட்டிங் தொடங்கவிருப்பதாக கூறப்படுகிரது. இந்நிலையில் யூடியூபர் இர்ஃபார்னை சிம்பு பயங்கரமாக ரோஸ்ட் செய்துவிட்டார்.

சிம்பு இப்போது திரைத்துறையில் தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியிருக்கிறார். அவர் நடித்த மாநாடு, வெந்து தணிந்தது காடு ஆகிய படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தன. கமலுடன் மணிரத்னம் இயக்கத்தில் நடித்த தக் லைஃப் படம்தான் தோல்வியை சந்தித்துவிட்டது. கண்டிப்பாக அப்படம் முரட்டு சம்பவம் செய்யும் என்று எஸ்டிஆர் ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தார்கள். அப்படி நடக்காமல் போனது அவர்களுக்கு பெரிய ஏமாற்றமாக அமைந்துவிட்டது. இருந்தாலும் அதில் சிம்பு ஹீரோவாக நடிக்காததால் கொஞ்சம் ஆசுவாசப்பட்டுக்கொண்டார்கள்.

Silambarasan TR Roasts YouTuber Irfan Viral Interview Clip Trends
Photo Credit:

வெற்றிமாறனுடன் அரசன்: சூழல் இப்படி இருக்க வெற்றிமாறனுடன் சிம்பு எப்போது இணைவார் என்று கடந்த பல வருடங்களாகவே ஒரு எதிர்பார்ப்பு நிலவிவந்தது. வடசென்னையில் அந்தக் கூட்டணி அமைந்தாலும்; பாதியிலேயே முடிந்துவிட்டது. இப்போது அவர்கள் இரண்டு பேரும் அரசன் படத்தில் இணைந்திருக்கிறார்கள். அதன் ஷூட்டிங் மதுரை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நடந்தது. இதில் விஜய் சேதுபதியும் முக்கியமான ரோலை ஏற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read
சங்கீதாவுக்கு விவாகரத்து கொடுக்க விஜய் முடிவு?.. ஜோசியர் முன்னிலையில் நடந்து முடிந்த பஞ்சாயத்து?
சங்கீதாவுக்கு விவாகரத்து கொடுக்க விஜய் முடிவு?.. ஜோசியர் முன்னிலையில் நடந்து முடிந்த பஞ்சாயத்து?

பிரச்னையால் நின்ற பட ஷூட்டிங்: விறுவிறுப்பாக படத்தின் இரண்டாவது கட்ட ஷூட்டிங்கும் தொடங்கியது. ஆனால் வெந்து தணிந்தது காடு 2 பட பிரச்னை தொடர்பாக ஷூட்டிங்கும் நிறுத்தப்பட்டது. இதை பார்த்து இயக்குநரும், நடிகரும், சிம்புவின் தந்தையுமான டி.ராஜேந்தர் கொதித்து போய்விட்டார். காட்டமாக அறிக்கையையும் வெளியிட்டிருந்தார். ஒருவழியாக அந்தப் பிரச்னைகள் எல்லாம் முடிந்துவிட்டதாகவும்; இன்னும் சில நாட்களில் ஷூட்டிங் மீண்டும் தொடங்கிவிடும் என்றும் தகவல்கள் வட்டமடிக்கின்றன.

அடுத்தடுத்த படங்கள்: அரசன் படத்தை முடித்துவிட்டு அஸ்வத் மாரிமுத்து இயக்கத்திலும், தேசிங்கு பெரியசாமி இயக்கத்திலும் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார். இவ்விரண்டு படங்களையும் முடித்துவிட்டு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கவும் கமிட்டாகியிருப்பதாக ஒரு தகவல் ஓடுகிறது. இப்படி செம பிஸியாக இருக்கும் சிம்புவை பார்த்து அவரது ரசிகர்கள் உச்சக்கட்ட மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். விஜய் அரசியலுக்கு சென்றுவிட்டார், அஜித் ரேஸில் கவனம் செலுத்துவதால் இனிமேல் தமிழ் சினிமா சிம்புவின் கன்ட்ரோல்தான் என்றும் அவர்கள் சொல்கிறார்கள்.

ட்ரெண்டாகும் வீடியோ: இந்நிலையில் சிம்பு தொடர்பான வீடியோ ஒன்று சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகியுள்ளது. அதாவது சமீபத்தில் சிம்புவை பேட்டி எடுத்தார் இர்ஃபான். அப்போது அவரிடம், "நான் வீடியோ செய்வது எல்லாம் எனக்கு பிரச்னை இல்லை. ஆனால் உங்களை மாதிரி மொக்கை வீடியோக்கள் எல்லாம் செய்ய முடியாது. வருபவர்களை அமர வைத்து, என்ன வேண்டும் என்பதை எழுத வைத்து, சிரிக்க வைப்பது, படிப்பது என ரொம்ப கன்றாவியாக இருக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X