அரசன் படத்துக்காக களமிறங்கிய படை.. வெற்றிமாறன் படத்தில் இத்தனை பேரா?.. சம்பவம் லோடிங்

சென்னை: வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்கவிருக்கும் படத்தை கலைப்புலி எஸ். தாணு தயாரிக்கிறார்.படத்தின் பெயர் 'அரசன்' என்று வைக்கப்பட்டிருக்கிறது. இப்படமானது வடசென்னை யுனிவர்ஸில் உருவாகவிருப்பது குறிப்பிடத்தக்கது. இதில் சிம்புவுடன் விஜய் சேதுபதி உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். அனிருத் இசையமைக்கிறார். இந்நிலையில் படம் பற்றிய புதிய தகவல் ஒன்று தற்போது வெளியாகி எஸ்டிஆர் ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்தியிருக்கிறது.

வெற்றிமாறன் சூர்யாவை வைத்து வாடிவாசல் திரைப்படத்தை இயக்குவதாக இருந்தார். அதில் அவருடன் அமீர் உள்ளிட்டோர் எல்லாம் நடிப்பதாக இருந்தது. படத்தின் டெஸ்ட் ஷூட்டும் நடத்தப்பட்டது. கிராஃபிக்ஸ் பணிகள் எல்லாம் லண்டனில் நடந்துவந்தன. பெரிய எதிர்பார்ப்பை சந்தித்திருந்த இந்தப் படம்; மேற்கொண்டு அடுத்தக்கட்டத்துக்கு செல்லவில்லை. அதற்கு யூகங்களாக ஏகப்பட்ட காரணங்கள் சொல்லப்படுகின்றன. விரைவில் அந்தப் படத்தின் ஷூட்டிங் ஆரம்பிக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது.

Silambarasan Vetrimaaran Arasan Moves to Chennai Priyanka Mohan Yogi Babu Join Shoot
Photo Credit:

சிம்புவுடன் கூட்டணி: இதற்கிடையே கலைப்புலி தாணுவுக்கு படம் செய்வது என்பதில் வெற்றிமாறன் உறுதியாக இருந்தார். எனவே வாடிவாசல் படத்துக்கான ஸ்லாட்டில் இன்னொரு கதையை கையில் எடுத்தார். அதில் ஹீரோவாக சிம்பு கமிட்டாகியிருக்கிறார். இந்தக் கதையை 2003ஆம் ஆண்டு வெற்றி எழுதியது கவனிக்கத்தக்கது. சிம்புவும் தனது இரண்டாவது இன்னிங்ஸில் கதை தேர்விலும், இயக்குநர் தேர்விலும் ரொம்பவே கவனமாக இருக்கிறார் எஸ்டிஆர். அனுபவம், இளமை என இரண்டு தரப்பு இயக்குநர்களுடனும் வேலை செய்துவருகிறார்.

பெரிய சர்ப்ரைஸ்: வெற்றிமாறனுடன் சிம்பு இணையப்போகிறார் என்ற அறிவிப்பு வந்தது ரசிகர்களுக்கு மிகப்பெரிய சர்ப்ரைஸாக இருந்தது. இத்தனை வருடங்கள் கழித்து இப்போதாவது இவர்கள் இணைகிறார்களே என கொண்டாடுகிறார்கள். படத்திலிருந்து சின்னதாக வெளியான க்ளிம்ப்ஸே அவ்வளவு பெரிய ரெஸ்பான்ஸ்டை பெற்றது. படத்துக்கு அனிருத் இசையமைத்துவருகிறார். அவர் கமிட்டானதை நினைத்து கொஞ்சம் ரசிகர்கள் பயந்தாலும்; வெற்றி அதெல்லாம் சிறந்த இசையை வாங்கிவிடுவார் என்பது நம்பிக்கையாக இருக்கிறது.

Also Read
48 நாள் நான் பட்ட வேதனை.. கணவரை பறிகொடுத்த சீரியல் நடிகை கண்ணீர் பேட்டி!
48 நாள் நான் பட்ட வேதனை.. கணவரை பறிகொடுத்த சீரியல் நடிகை கண்ணீர் பேட்டி!

விஜய் சேதுபதியுடன் சிம்பு: இப்படத்தில் சிம்புவுடன் விஜய் சேதுபதி முக்கியமான ரோலை ஏற்றிருக்கிறார். முதலில் அவர் இப்படத்திலிருந்து வெளியேறிவிட்டார் என்றெல்லாம் தகவல்கள் வந்தன. ஆனால் ஒரு பேட்டியின்போது அதையெல்லாம் திட்டவட்டமாக மறுத்துவிட்டார். எனவே சிம்புவும் சேதுவும் ஸ்க்ரீனில் என்ன மாதிரியான ஒரு மேஜிக்கை நிகழ்த்தப்போகிறார்கள் என்பதை பார்ப்பதற்கும் ஆவலோடு காத்திருக்கிறார்கள் இரண்டு பேரின் ரசிகர்களும்.

பட ஷூட்டிங் அப்டேட்: படத்தின் முதற்கட்ட ஷூட்டிங் மதுரை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நடந்தது. அதனையடுத்து படத்தின் இரண்டாவது ஷெட்யூல் ஷூட்டிங் சென்னையில் நடந்தது. போலீஸ் ஸ்டேஷன் செட் போட்டு எடுத்துவருகிறார்கள் என தெரிகிறது. இந்நிலையில் இந்த ஷெட்யூல் ஷூட்டிங்கில் பிரியங்கா மோகன், யோகிபாபு, ஜான் விஜய் உள்ளிட்டோர் கலந்துகொண்டு நடிப்பதாக கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X