»   »  நயனதாராவால் கலங்கவில்லை-சிம்பு

நயனதாராவால் கலங்கவில்லை-சிம்பு

Subscribe to Oneindia Tamil

எதற்கும், எப்போதும் கலங்க மாட்டான் சிம்பு, வந்து விட்டது புது தெம்பு.நயனதாராவை நான் இனிமேல் தொந்தரவு செய்ய மாட்டேன், அவரைப் பற்றிப்தவறாகப் பேசவும் மாட்டேன் என்று நடிகர் சிம்பு கூறியுள்ளார்.

சிம்புவுக்கும், எனக்கும் இடையிலான காதல் முறிந்து விட்டது. இனி அவருடன்இணைந்து நடிக்க மாட்டேன் என்று கடந்த நவம்பர் 17ம் தேதி தடாலடியாக நயனதாராஅறிவித்தபோது அகில உலக தமிழ் சினிமா ரசிகர்களும் குழம்பிப் போனார்கள்.

காரணம், இருவரும் அப்படி ஒரு பிணைப்பான நட்பில் இருந்தவர்கள். இருவருக்கும்எப்போது கல்யாணம் என்று எல்லோரும் கேட்டுக் கொண்டிருந்த நிலையில், காதலேகிடையாது என நயனதாரா அறிவித்ததால் என்னாச்சு என்று எல்லோரும் உச்சு கொட்டஆரம்பித்தனர்.

நயனதாரா இந்த ஸ்டேட்மென்ட் விடும்போது சிம்பு இந்தியாவிலேயே இல்லை.அமெரிக்காவுக்குச் சென்றிருந்தார். நயனதாரா சூடு பட்டையைக் கிளப்பிஇப்போதுதான் ஓய்ந்துள்ளது.

இந்த நிலையில் அமெரிக்க பயணத்தை முடித்துக் கொண்டு சிம்பு சென்னைக்குத்திரும்பியுள்ளார்.அவரிடம் என்ன நடந்தது என்று கேட்டபோது, வல்லவன் முடிந்தபிறகு ஓய்வுக்காக நான் அமெரிக்கா போய் விட்டேன். நயனதாரவுடன் உள்ள காதல்கல்யாணத்தில் முடியுமா என்று ஒரு நிருபர் கேட்டபோது, இருவரும் நன்கு புரிந்துவைத்திருக்கிறோம்.

வல்லவன் முடிந்து விட்டது. நான் அமெரிக்கா செல்கிறேன், நயனதாராஹைதராபாத்துக்கு ஷூட்டிங் செல்கிறார். இருவரும் இணைவோமா என்பதைகாலம்தான் சொல்ல வேண்டும் என்று பதிலளித்தேன்.

ஆனால் திடீரென நயனதாரா காதல் முறிந்து விட்டதாக அறிக்கை விட்டதை அறிந்துஅதிர்ச்சி அடைந்தேன். இணையதளம் ஒன்றில்தான் இந்த செய்தியைப் பார்த்தேன்.ஏன் இப்படிச் சொன்னார் என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் இதுகுறித்து நான்அவரிடம் பேசவில்லை.

இருவரும் பேசி 2 மாதங்களாகி விட்டது. இப்போதும் கூட அவர் எனது நல்லதோழிதான். அவரைப் பற்றி நான் யாரிடமும் தவறாகப் பேசியதில்லை, பேசவும்மாட்டேன். அதேபோல அவரும் இருப்பார் என நினைக்கிறேன்.

நடந்து விட்டது. இனிமேல் அவரை நான் தொந்தரவு செய்ய மாட்டேன். அவரைப்பற்றிப் பேசவே மாட்டேன். மனம் புண்படும்படி நடந்து கொள்ள மாட்டேன்.

சிம்பு நல்லவன் என்பதை காலம் உணர்த்தும். அவர் எங்கிருந்தாலும் சந்தோஷமாகஇருக்க வேண்டும். அதுதான் எனக்கும் சந்தோஷம்.

அமெரிக்க பயணத்தால் எனக்கு புத்துணர்ச்சி கிடைத்துள்ளது. புது மனிதனாகமாறியிருக்கிறேன். இனிமேல் நீங்கள் பார்க்கப் போவது புது சிம்பு. அடுத்தடுத்துநான்கைந்து படங்களில் நடிக்கப் போகிறேன்.

எதற்கும் கலங்க மாட்டான் இந்த சிம்பு. அவனுக்கு வந்திருக்கிறது புது தெம்பு என்றார்படு தெம்பாக சிம்பு.

Read more about: im a new man, says simbu
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil