»   »  ஒத்துக்கிறேன், தனுஷ் நண்பன்தான்!

ஒத்துக்கிறேன், தனுஷ் நண்பன்தான்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

தனுஷ் என் நண்பன்தான் என்று சிம்புவும் மனம் விட்டு பேசியுள்ளார்.

தனுஷும், சிம்புவும் சின்ன வயசுத் தோழர்கள். ஒரே பள்ளியில் படித்தவர்கள். தனுஷுடன் மட்டுமல்லாது,அவரது மனைவியான ஐஸ்வர்யாவுக்கும் சிம்பு நெருங்கிய தோழனாக இருந்தவர்.

காலத்தின் கோலத்தால் சிம்புவும், தனுஷும் பிரிந்தனர். நேருக்கு நேர் பார்த்தும் கூட கண்டுகொள்ளாமல்விருட்டெனப் போகும் அளவுக்கு அவர்களுக்குள் பூசல் இருந்தது.

சமீபத்தில் சென்னையில் நடந்த பட விழாவில் பேசிய தனுஷ், சிம்பு எனது நண்பன், நானும், அவரும் மாமன்,மச்சான் என்றுதான் பேசிக் கொள்வோம் என்று நட்பைப் புதுப்பிக்கும் வகையில் பேசினார்.

இந்த நிலையில் லீ படத்தின் ஆடியோ கேசட் விழாவில் கலந்து கொண்டு பேசிய சிம்புவும், தனுஷ் எனதுநண்பன் என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

இன்று காலை சத்யம் திரையரங்க வளாகத்தில் லீ படத்தின் ஆடியோ கேசட் வெளியீட்டு விழா நடந்தது. இதில்சிம்பு கேசட்டை வெளியிட விஷால் பெற்றுக் கொண்டார்.

நிகழ்ச்சியில் சிம்பு பேசுகையில், இங்குள்ள அனைவருமே நடிகர்களாக வரவில்லை. நண்பர்களாக வந்துள்ளோம்.

ஆரம்பத்தில் நான் சில கமர்ஷியல் படங்களில் நடித்தேன். விரலை ஆட்டுகிறேன், அசைக்கிறேன் என சிலர்விமர்சித்தனர். பிறகு மன்மதனில் நடித்தபோது, எனது திறமையை நிரூபித்தேன்.

என்னால் இப்படியும் நடிக்க முடியும் என்று நிரூபித்தேன். பிறகு வந்தது வல்லவன். என்னால் இப்படியும் படம்எடுக்க முடியும் என்று காண்பித்தேன்.

திறமை இருந்தால் கூடவே தட்டிக் கொடுக்கு யாராவது வேண்டும். சிபிக்கு சத்யராஜ் இருக்கிறார். இருவரும்நண்பர்களாகத்தான் பழகுகிறார்கள். அப்பா, மகன் போலவே இருக்காது.

தனுஷுக்கும், எனக்கும் சண்டை என்று கூறப்பட்டு வந்தது. ஆனால் பிரச்சினை இப்போது இல்லை. இருவருமேநண்பர்கள்தான் என்றார் சிம்பு.

இருவரும் இப்படி மாறி மாறி நட்பு பாராட்ட ஆரம்பித்திருப்பதற்கு பின்னணிக் காரணம் ஒன்றையும்கூறுகிறார்கள். இருவரும் சண்டை போடுவதால் யாருக்கும் லாபம் இல்லை. மற்றவர்கள்தான் இதை மூட்டி விட்டுகுளிர் காய்ந்து கொண்டுள்ளனர்.

எனவே இருவரும் சண்டையை விட்டு விட்டு மீண்டும் தோழமையுடன் பழக வேண்டும் என தனுஷ், சிம்புவின்நலம் விரும்பிகள் இரு தரப்பிலும் பேசியுள்ளனர். இரு குடும்பத்தாரும் கூட இதுகுறித்து பேசியுள்ளனராம்.அதைத் தொடர்ந்தே மோதலை விட்டு விட்டு நட்பை புதுப்பித்துள்ளனராம் இருவரும்.

விரைவில் இருவரும் இணைந்து மிரட்டும் என்ற ரீதியில் புதுப் பட அறிவிப்பு வந்தாலும் வரலாமாம்!

Read more about: dhanush is my friend says simbu

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil