»   »  தியேட்டர் வாங்கிய சிம்பு!

தியேட்டர் வாங்கிய சிம்பு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

தனுஷ் வரிசையில் இப்போது சிம்புவும் தியேட்டர் உரிமையாளராகி விட்டார்.

தமிழ் ஹீரோக்கள் இப்போதெல்லாம் ரொம்பவே விவரமானவர்களாகி வருகிறார்கள் (ஹீரோயின்கள் எப்பவுமேவெவரம்தான்!). சினிமாவில் நடித்து அள்ளுவதை அப்படியே திரும்ப சினிமாவில் போடும் முட்டாள்தனத்தைமட்டும் அவர்கள் செய்வதே இல்லை.

ரியல் எஸ்டேட், சொத்து வாங்குவது, வீடுகளை வாங்கிக் குவிப்பது என படு சாமர்த்தியமாக முதலீடு செய்துவருகின்றனர். சிலர் வித்தியாசமாக கல்யாண மண்டபம் கட்டுவது, தியேட்டர்களை வாங்குவது வேறுபாதையிலும் போய் சொத்துக்களை குவிப்பது வழக்கம். (இதில் விதி விலக்கு கமல்ஹாசன் போன்றவர்கள்)

சில வருடங்களுக்கு முன்பு தனுஷ் படு பிரபலமாக இருந்தபோது சொந்த மாவட்டமான தேனியில், தியேட்டர்வளாகத்தை வளைத்துப் போட்டார். இந்த வரிசையில் இப்போது சிம்புவும் இணைந்துள்ளார்.

வேலூரில் இரு தியேட்டர்களை சமீபத்தில் அவர் விலைக்கு வாங்கியுள்ளார். முதலீடு பல கோடிகளாம்.

இந்த தியேட்டர்களை அதி நவீனமாக மாற்றியமைக்கவும் முடிவு செய்துள்ளார். இருக்கை, திரை முதல் சவுண்ட்சிஸ்டம் வரை அத்தனையையும் படு நவீனமாக மாற்றப் போகிறாராம். இதற்காக பெரும் தொகை ஒன்றையும்முதலீடு செய்யவுள்ளதாக கேள்வி.

அத்தோடு, அடுத்த படத்திற்கான வேலையிலும் மும்முரமாக இறங்கி விட்டார். பிப்ரவரி 3ம் தேதி சிம்புவின்பிறந்த நாள். வழக்கமாக தனது ரசிகர்களோடு சேர்ந்து கொண்டாடுவது சிம்புவின் வழக்கம். ஆனால் இந்த முறைநோ கொண்டாட்டமாம்.

பிறந்த நாளை கொண்டாடுவதை விட்டு புதிய படம் தொடர்பாக வெளியூருக்குப் போகிறாராம்.

அவர் இல்லாததால் இவர் கொண்டாடவில்லையோ?

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil