»   »  இலியனா வருவாரா?

இலியனா வருவாரா?

Subscribe to Oneindia Tamil

தமிழ் பக்கமே தலையை வைத்துப் படுப்பதில்லை என்ற வீம்பில் இருக்கும் இலியானாவை சிம்பு படத்தில் நடிக்க வைக்க கடும் முயற்சிகள் நடந்துவருகிறதாம்.

தனது ஒல்லி இடுப்பழகால், தெலுங்கில் படு வேகமாக முன்னுக்கு வந்து கொண்டிருக்கிறார் இலியானா. திரிஷாவைத் தூக்கிச் சாப்பிட்டு விட்டஇலியானாவுக்கு தெலுங்கில் ஏக கிராக்கி.

ஆள்தான் ஒல்லியாக இருக்கிறார், ஆனால் சம்பளம் வாங்குவதில் படு கில்லியாக இருக்கிறார். பாப்பாவின் ஸ்கேல் ஆப் பே 75 லட்சமாம்.ஆனாலும் துட்டைத் தூக்கிக் கொடுக்க மணவாடுகள் மல்லுக்கட்டிக் கொண்டிருப்பதால், இலியானா காட்டில் கன மழை கொட்டோ கொட்டென்றுகொட்டித் தீர்த்துக் கொண்டிருக்கிறது.

தெலுங்கில் படு பிசியாக இருப்பதாலும், டப்பு ஜாஸ்தி என்பதாலும் தமிழ் படங்களில் ஆர்வம் காட்டாமல் இருக்கிறார் இலியானா. அவரதுகால்ஷீட்டை வாங்க தமிழ்ப் படத் தயாரிப்பாளர்களும், சில நடிகர்களும் கடுமையாக முயன்றும் முடியவில்லை.

இந்த நிலையில் சிம்புவுக்காக இலியானாவை நோக்கி வலையை வீசியுள்ளார் நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி. அஜீத்தை விட்டு பிரிந்து வந்த பின்னர்அவர் தயாரிக்கும் முதல் படத்தில் சிம்புதான் ஹீரோ. கேமராமேன் சரவணன்தான் படத்தை இயக்கப் போகிறார்.

இப்படத்துக்கு இலியானாவை ஹீரோவாகப் போடலாமா என்று சிம்பு சரவணன் மற்றும் சக்கரவர்த்தியிடம் கோடு போட்டுள்ளார். அட, இது நல்லஐடியாவா இருக்கே, அப்படியே படத்தை தெலுங்கில் டப் செய்து வெளியிட்டால் நல்ல டப்பு கிடைக்குமே என்று சந்தோஷமாகிப் போனசக்கரவர்த்தி, இலியானாவை அணுகியுள்ளாராம்.

தெலுங்கில் வாங்கும் அதே சம்பளத்தைக் கொடுக்கத் தயார் என்று கூறி பிட்டைப் போட்டுள்ளனர். இலியானா இதுவரை பதில்கொடுக்கவில்லையாம். ஆனால் உரிய முறையில் அணுகியுள்ளதால் நிச்சயம் பாசிட்டிவான பதில் வரும் என்ற எதிர்பார்ப்பில் இருக்கிறார்கள் சிம்புஅண்ட் கோவினர்.

குத்துப் பாட்டுக்கு நயனதாராவை கூப்பிடலியா?, சிம்பு..

Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil