»   »  சிம்புவா? அலறும் நடிகைகள்!

சிம்புவா? அலறும் நடிகைகள்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

எஸ்.ஜே.சூர்யா நிலைக்கு சிம்புவும் தள்ளப்பட்டுள்ளார். அவருடன் ஜோடி போடும் வாய்ப்பு வந்தால் காததூரம் ஓடிப் போய் விடுகிறார்களாம்.

சில்மிஷ திலகம் சிம்புவின் ஆரம்பம் படு அமர்க்களமாக இருந்தது. மன்மதன் ஹிட் ஆக, அடுத்தடுத்து வந்தசரவணா, தொட்டி ஜெயா என மற்ற படங்களும் சூப்பர் ஹிட் ஆக, வல்லவன் பெரும் எதிர்பார்ப்பைஏற்படுத்தியது.

வல்லவனும் சகலகலா வசூல் மன்னனாகிப் போக, சிம்புவின் மார்க்கெட் படு சூடாகிக் கிடக்கிறது. இருந்தாலும்சூடாகிக் கிடக்கும் தோசைச் சட்டி மீது தண்ணியை அள்ளித் தெளித்து ஆஃப் செய்வது போல நயனதாராமேட்டர் வந்து சிம்புவை டல் ஆக்கி விட்டது.

அவரும், நயனதாராவும் தனி அறையில் கொடுத்துக் கொண்ட லிப் லாக் படங்கள் வெளியாகி சிம்புவுக்குகெட்ட பெயரைக் கொடுத்து விட்டது. அவரேதான் படத்தை வெளியிட்டதாக நயனதாரா கூறியுள்ளார்.அத்தோடு நில்லாமல், வக்கிரப் புத்திக்காரர் என்றும் பட்டமும் கொடுத்துள்ளார்.

ஆமா, படத்தை நான்தான் வெளியிட்டேன் என்று இதுதொடர்பாக கேள்வி கேட்ட ஒரு பத்திரிக்கை நிருபரிடம்கடுப்பாக சிம்புவும் ஒத்துக் கொண்டுள்ளார்.

இந் நிலையில் சிம்புவுடன் ஜோடி போட ஹீரோயின்கள் பயந்து அலறுகிறார்களாம்.

இதனால்தான் சிம்புவுக்கு ஜோடியாக நடிக்கக் கூப்பிட்டால் ஓட ஆரம்பித்துள்ளனராம் ஹீரோயின்கள்.சமீபத்தில் சிம்புவுடன் நடிக்க பாவனாவிடம் கால்ஷீட் கேட்டுள்ளனர்.

நயனதாராவின் உதடுகள் பாவனாவின் முகம் முன் வந்துவிட்டுப் போக கால்ஷீட் புக்கைப் பார்த்துட்டுச்சொல்றேன் என்று கூறி கழன்று கொண்டு விட்டாராம் பாவனா. இதே கதை தான் இன்னொரு இளம்ஹீரோயினிடம் நடந்தது.

இத விடுங்க, சிம்புவின் வெந்த புண்ணில் விரலைப் பாய்ச்ச நினைப்பவர்களுக்கு நடிகர் சங்கம் லேசாக ஒருஆப்பு வைத்துள்ளது. அதாவது, சிம்புவுக்கு நடிகர் சங்கம் முழு ஆதரவைத் தெரிவித்துள்ளது.

நயனதாராவை மிரட்டியது, பத்திரிக்கை நிருபரை மிரட்டியது என பல சர்ச்சைகளில் தொடர்ந்து சிம்பு சிக்கிவந்தாலும் அவருக்கு நடிகர் சங்கம் பக்க பலமாக, முழு ஆதரவோடு இருக்கும் என்று மூத்த நடிகர் சத்யராஜ்வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

நடிகர் சங்க வளாகத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் சத்யராஜ் பேசுகையில், சிம்பு திறமையான ஒரு மனிதர்.சங்கத்தின் வளர்ச்சிக்காக அவர் அரும்பாடு பட்டு வருகிறார். சங்க நடவடிக்கைகளில் தவறாமல் கலந்துகொள்கிறார்.

ஆனால் சில முன்னணி நடிகர்கள் சங்கத்தின் பக்கமே திரும்பிக் கூடப் பார்ப்பதில்லை. சங்கநடவடிக்கைகளிலும் கலந்து கொள்வதில்லை.

அவர்களுக்குப் பிரச்சினை ஏற்படுகிற போது மட்டுமே சங்கத்தின் நினைப்பு அவர்களுக்கு வரும். உடனேஓடோடி வந்து சங்க நிர்வாகிகளை கட்டிப் பிடித்து கதறி அழுது காரியம் சாதித்துக் கொள்வார்கள்.

ஆனால் சங்கத் தேர்தலின்போது கூட இவர்கள் இந்தப் பக்கம் வரவே இல்லை. ஆனால் சிம்புவைப் பாருங்கள்இந்த இளம் வயதிலேயே சங்க நடவடிக்கைகளில் ஆர்வமாக பங்கேற்கிறார். அவரை நாம் யாருக்காகவும்விட்டுக் கொடுத்து விடக் கூடாது. அதேசமயம், அவரது தனிப்பட்ட சொந்த விஷயங்களிலும் யாரும்தலையிடக் கூடாது என்றார் சத்யராஜ்.

பெரியவர்ள் ஆதரவு கிடைச்சாச்சு, அப்ப இன்னும் நிறையப் படங்களை எதிர்பார்க்கலாமா?

Read more about: actress afraid of simbu

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil