»   »  துள்ளி வரும் காள!

துள்ளி வரும் காள!

Subscribe to Oneindia Tamil

முரட்டுக்காளை ரீமேக்கில் விஜய் நடிக்க முயற்சிப்பதால், அவருக்குப் போட்டியாகவோ, என்னவோ, சிம்பு, காள என்ற பெயரில் அடுத்த படத்தைஅமர்க்களமாக தொடங்குகிறார்.

சிம்பு சிரிச்சாலும் நியூஸ், சிலிர்த்தாலும் நியூஸ் என்றாகி விட்டது. அந்த வகையில் வல்லவனுக்குப் பிறகு சிம்புவின் அடுத்த படம் குறித்த செய்திகள்வரிசையாக காதில் விழ ஆரம்பித்துள்ளன.

நயனதாரா இஷ்யூ, பத்திரிக்கை நிருபருடன் டிஷ்யூம் ஆகிய சர்ச்சைகளுக்கு இடையே தனது அடுத்த படம் குறித்த வேலையில் பிசியாகி விட்டார்சிம்பு.

திமிரு தருண்கோபி இயக்கத்தில் சிம்பு நடிக்கப் போகும் அடுத்த படத்தின் பெயர் காள. அந்தக் கால கனவுக் கன்னியும், காதல் மன்னன் ஜெமினிகணேசனின் மகளுமான, ரேகா முக்கிய வேடத்தில், அதாவது சிம்புவின் அம்மாவாக நடிக்கவுள்ளார். ரேகா நடிக்கும் முதல் தமிழ் படம் இதுதான்என்பது சிந்திக்க வேண்டிய ஒன்று!

படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடிக்க ஒரு ஹீரோயினும் கிடைக்கவில்லையாம். இதனால் தனது ஸ்கூல் மேட் திரிஷாவை அணுகியுள்ளார் சிம்பு.அவர் ஓ.கே. சொல்லி விட்டதாக இடையில் ஒரு செய்தி வந்தது. ஆனால் அது உண்மை இல்லை என்கிறார்கள். சிம்புவே இந்த செய்தியை கிளப்பிவிட்டுள்ளதாகவும் கூறுகிறார்கள்.

காள ஹீரோயின் யார் என்பதை சிம்பு வாயாலேயே உறுதி செய்து கொள்ள அவரை போனில் பிடித்தோம். ஏதாவது நல்லதாக சொல்வார் என்றுபார்த்தால், ஹீரோயின் குறித்து வாயே திறக்கவில்லை மனிதர்.

சார், எனது தனிப்பட்ட வாழ்க்கை பற்றி எதுவும் கேட்காதீர்கள், அதுகுறித்து நானும் எதுவும் சொல்வதாக இல்லை. அது முற்றிலும் நான்சம்பந்தப்பட்ட விஷயம்.

எனது அடுத்த படங்கள் குறித்து ஏதாவது கேட்க விரும்பினாலும், அதற்கு இது சரியான நேரம் அல்ல. சில நாட்கள் காத்திருங்கள், நானேபத்திரிக்கையாளர்களைக் கூப்பிட்டு அனைத்தையும் சொல்லப் போகிறேன். அது வரை உங்களுக்குத் தோன்றியதை, உங்களது பாணியில் எழுதிக்கொண்டிருங்கள்.

காள படம் டிஸ்கஷன் அளவில்தான் உள்ளது. ஆனால் இந்தப் படம் ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக அமையும் என்பதை மட்டும் உறுதியாகசொல்லிக் கொள்கிறேன். எனது நடிப்பிலும், ஆக்ஷனிலும் நிறைய வித்தியாசங்களை ரசிகர்கள் பார்க்கப் போகிறார்கள் என்றார்.

காள பட டிஸ்கஷன் ஒரு பக்கம் ஓடிக் கொண்டிருக்க லிங்குச்சாமி, குஷ்பு ஆகியோருடனும் அடுத்த படங்கள் குறித்து சைடில் பேசிக்கொண்டிருக்கிறாராம் சிம்பு.

துள்ளி வாப்பா சிம்பு!

Read more about: simbu again in the limelight

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil