»   »  மோசமான சிம்பு!

மோசமான சிம்பு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

நயனதாரா பாதிப்பிலிருந்து முற்றிலும் விலகி விட்ட சிம்பு, அடுத்த படத்திற்குத்தயாராகி விட்டார். இந்தப் படத்தில் அவர் ஹீரோ மட்டும்தான். படத்திற்குப் பெயர்மோசமானவன்!

வல்லவன் படப்பிடிப்பின் தொடக்கத்தில் நயனதாராவுடன் ஏற்பட்ட காதல் படம்முடிந்ததும் முறிந்து விட்டது. இந்த அப்செட்டில் அமெரிக்காவிலேயே சில மாதங்கள்தங்கி ஓய்வெடுத்து சூட்டைக் குறைத்துக் கொண்ட சிம்பு சமீபத்தில் சென்னைதிரும்பினார்.

இனிமேல் நயன்தாரா வழியில் குறுக்கிட மாட்டேன், முன்பை விட தெம்பாகவந்துள்ளேன் என்று கூறிய சிம்பு புதுப் படத்தில் நடிக்க ஆயத்தமாகி விட்டார்.

திமிரு இயக்குநர் தருண் கோபியைக் கூப்பிட்டு நல்ல கதையாக சொல்லுங்கள் என்றுசிம்பு கூறவே, அட்டகாசமான ஒரு ஆக்ஷன் கதையைக் கூறி சிம்புவை அசத்திவிட்டார் தருண்.

அந்தக் கதை பிடித்துப் போகவே அதில் நான் நடிக்கிறேன் என்று கூறிய சிம்புகால்ஷீட்டும் ஒதுக்கி விட்டார். படத்துக்கு மோசமானவன் என்று பெயர்வைத்துள்ளனர்.

சிம்புவுக்கு ஜோடியாக ஆசினைக் கேட்டுள்ளனர். அவரும் ஒத்துக் கொண்டு விடுவார்எனத் தெரிகிறது. விரைவில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாம்.

சிம்புவின் ஆஸ்தான இசையமைப்பாளரான யுவன் ஷங்கர் ராஜாதான் இந்தப்படத்துக்கும் இசையாம். இப்படத்தின் மூலம் தனது இமேஜை தூக்கி நிறுத்த ஆர்வமாகஉள்ளார் சிம்பு.

படத்தின் பெயரே மெசேஜ் சொல்வது போல இல்லை?

Read more about: simbu ready for next film

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil