ஹீரோ .. ஹீரோ ..

By Staff

மன்மதன் பெற்ற வெற்றியால் கோலிவுட்டில் மிகவும் கவனிக்கப்படும் இளவட்டங்களில் ஒருவராகிவிட்டார் சிம்பு.

இப்போது தொட்டி ஜெயா படத்தில் நடிக்கும் சிம்பு அடுத்து எஸ்.ஜே. சூர்யாவின் படத்தில் நடிக்கிறார். இதைத் தொடர்ந்து மலே மலே என்றஒரு படத்திலும் நடிக்கிறார். மேலும் பல தயாரிப்பாளர்கள் வீட்டுக்கு போன் போட்டபடி இருந்தாலும் எல்லோரையும் பொறுக்கச்சொல்லிவிட்டாராம் சிம்பு.

சின்னப் பையன், விரல் வித்தை காட்டி பிழைப்பவர் என்று பேசப்பட்ட சிம்புவின் பெயர் மன்மதன் மூலம் விஸ்வரூபமெடுத்துவிட்டது.தன்னை விமர்சித்தவர்களுக்கு இந்த மெகா வெற்றியால் சரியான பதிலடி கொடுத்துள்ளார்.

மன்மதனில் நெகட்டிவ் ரோலில் தன்னுடன் நடித்த சிந்து துலானிக்கு அன்புப் பரிசு ஒன்றை அளித்து அசத்தியுள்ளாராம் சிம்பு.

சுள்ளானில் தனுஷுடன் ஜோடி சேர்ந்து ஆடிக் கலக்கிய சிந்து துலானி, மன்மதனில் மொட்டை சிம்புவின் ஜோடியாக நடித்தார். இப்போதுமொட்டை சிம்புவின் பாத்திரம்தான் படத்தில் அதிகம் பேசப்படுகிறது. அத்தோடு சிம்புவோடு படத்தில் சிந்து காட்டிய தாராளமும்,நெருக்கமும் கூட ரொம்பவே பேசப்படுகிறது.

இதற்கு தனது ஸ்பெஷல் நன்றிகளைத் தெரிவித்த சிம்பு, அத்தோடு நிற்காமல் ஒரு அழகிய வைர மோதிரம் ஒன்றையும் சிந்துவின் விரலில்அணிவித்து அசத்தினாராம்.

சிந்து ரொம்பவே நெகிழ்ந்து போய் விட்டதாய் சொல்கிறார்கள். அத்தோடு தனது அடுத்த படத்தில் ஒரு நல்ல கேரக்டரில் உள்ளே இழுத்துக்கொள்வதாகவும் சிந்துவுக்கு உறுதி தந்திருக்கிறாராம் சிம்பு.

(மன்மதனை இயக்கிய முருஹனுக்கு ஒரு காஸ்ட்லியான செல்போன் வாங்கிக் கொடுத்தாராம் சிம்பு.. ஆனாலும் வைரத்தின் விலைக்குஅருகில் கூட அது வரமுடியாதாம்)


இப்போது கோபிகாவுடன் நடிக்கும் தொட்டி ஜெயா படத்தில் மிக மும்ரமாக இறங்கியுள்ளார் சிம்பு.

சும்மாவே டைரக்டரின் வேலைகளில் தலையிடும் சிம்பு இப்போது இந்தப் படத்தின் கதையிலும் கூட சில மாற்றங்கள் செய்யச்சொன்னாராம்.

ஆனால், படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு என்பதால் ஓவராக தலையீடு செய்யாமல் அவரது அனுமதியுடன் தான் எந்தயோசனைகளையும் சொல்கிறாராம். சிம்பு சொல்லும் சேஞ்சஸ் கதைக்கு உரம் சேர்ப்பதாக இருப்பதால், தாணுவும் அதற்குபச்சைக் கொடி காட்டிவிட்டாராம்.

இந்தப் படமும் மிகப் பெரிய ஹிட் ஆகும் என்று சிம்பு நம்பிக்கையுடன் சொல்கிறார். இப்போது தான் என்னையும் மற்றவர்கள் கவனிக்கஆரம்பித்திருக்கிறார்கள். மன்மதனை விட மிகச் சிறந்த வெற்றியைப் பெறும் தொட்டி ஜெயா.

தொட்டி ஜெயாவின் கதை அப்படி. சிறு வயது முதல் கேடியாக, ரெளடியாக வளரும் அழுக்குப் பிடித்த ஒரு மனிதனின் வாழ்க்கைதான்தொட்டி ஜெயாவின். மிகவும் இன்டரஸ்டிங்கான, விறுவிறுப்பான கதை. இந்தப் படமும் நிச்சயம் எனக்கு இன்னொரு பிரேக் தரும் என்கிறார்.

இந்தப் படத்தை முடித்துவிட்டு எஸ்.ஜே. சூர்யா இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார் சிம்பு.

இதைத் தொடர்ந்து மலே மலே என்ற படத்தில் நடிக்கவுள்ளார்.

இந்தப் படத்தை இயக்கப் போவது ஸ்ரீநாத். மன்மதன் படத்தில் உதவி இயக்குனராகப் பணியாற்றியவர் தான் இந்த ஸ்ரீநாத். மன்மதன்படத்தின்போதே தனது கதையை சிம்புவிடம் சொல்லி அவரை அசத்தி விட்டாராம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X