»   »  கட்சி-கொடி வேண்டாம்: சிம்பு எனக்கு அரசியலே வேண்டாம், என்னை விட்டு விடுங்கள் என்று நடிகர் சிம்பு கூறியுள்ளார். மன்மதன் சிம்புவுக்கு 22வது பிறந்த நாளாகும். இதையடுத்து வியாழக்கிழமை நள்ளிரவு ஆஞ்சநேயர் கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டார். பின்னர் நேற்று காலை தனது தந்தை விஜய டி.ராஜேந்தர், தாயார் உஷா ஆகியோரிடம் ஆசி பெற்ற பின் தனது வீட்டில் கூடியிருந்த ரசிகர்களை சிம்பு சந்தித்தார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சிம்பு சரமாரிக் கேள்விகளுக்கு படு சகஜமாக பதிலளித்தார்.சமீப காலமாக என்னைக் குறி வைத்து சில பத்திரிக்கைகள் செயல்படுகின்றன. நடக்காத ஒரு (அடி வாங்கியது) சம்பவத்தைநடந்ததாக ஒரு பத்திரிக்கை செய்தி வெளியிட்டது. பச்சைப் பொய்யை எப்படி இப்படி எழுதினார்கள் என்பது புரியவில்லை.அதற்கு எதிராக போராட்டம் நடத்தலாம் என ரசிகர்கள் விரும்பினார்கள். ஆனால் அதை நான் தடுத்து விட்டேன். எனக்கு யார்மீதும் காழ்ப்புணர்ச்சி கிடையாது. நடுநிலையான நடிகனாக நான் இருந்து வருகிறேன். எனக்கு எல்லோருடைய அன்பும்,ஆதரவும் தேவை.ஒரு நடிகனாக, கலைஞனாக மட்டும் இருக்க விரும்பகிறேன். எனக்கு அரசியலில் ஈடுபாடு கிடையாது, அங்கு போகவும்மாட்டேன். வல்லவன், 60 சதவீதம் முடிந்து விட்டது. இப்படத்தில் மொத்தம் 7 பாடல்கள் வருகின்றன. அதில் 3 பாடல்களைமுடித்துவிட்டோம், நான்கு பாடல்கள் பாக்கி உள்ளது. தூங்கக் கூட நேரம் இல்லாமல் தீவிரமாக உழைத்து வருகிறேன். மே மாதம் படம்ரிலீஸ் ஆகி விடும்.வல்லவனுக்குப் பிறகு சிறிது காலம் டைரக்ஷனுக்கு இடைவெளி விடலாம் என்றிருக்கிறேன். நடிப்பில் தீவிர கவனம் செலுத்தப்போகிறேன். இடையில் நேரம் கிடைத்தால் டைரக்ஷன் செய்வேன். எனது கதை, வசனம், இயக்கத்தில் அப்பாவையும்இயக்குவேன் என்றார் சிம்பு.பேட்டியின்போது உடனிருந்த விஜய.டி.ராஜேந்தர் தலையை கோதியபடி, முடியை சிலுப்பியபடி கூறுகையில், தமிழர்கள் கேக்வெட்டி பிறந்த நாள் கொண்டாடுவதில்லை. அதனால் சிம்புவும் கேக் வெட்டவில்லை என்றார்.

கட்சி-கொடி வேண்டாம்: சிம்பு எனக்கு அரசியலே வேண்டாம், என்னை விட்டு விடுங்கள் என்று நடிகர் சிம்பு கூறியுள்ளார். மன்மதன் சிம்புவுக்கு 22வது பிறந்த நாளாகும். இதையடுத்து வியாழக்கிழமை நள்ளிரவு ஆஞ்சநேயர் கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டார். பின்னர் நேற்று காலை தனது தந்தை விஜய டி.ராஜேந்தர், தாயார் உஷா ஆகியோரிடம் ஆசி பெற்ற பின் தனது வீட்டில் கூடியிருந்த ரசிகர்களை சிம்பு சந்தித்தார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சிம்பு சரமாரிக் கேள்விகளுக்கு படு சகஜமாக பதிலளித்தார்.சமீப காலமாக என்னைக் குறி வைத்து சில பத்திரிக்கைகள் செயல்படுகின்றன. நடக்காத ஒரு (அடி வாங்கியது) சம்பவத்தைநடந்ததாக ஒரு பத்திரிக்கை செய்தி வெளியிட்டது. பச்சைப் பொய்யை எப்படி இப்படி எழுதினார்கள் என்பது புரியவில்லை.அதற்கு எதிராக போராட்டம் நடத்தலாம் என ரசிகர்கள் விரும்பினார்கள். ஆனால் அதை நான் தடுத்து விட்டேன். எனக்கு யார்மீதும் காழ்ப்புணர்ச்சி கிடையாது. நடுநிலையான நடிகனாக நான் இருந்து வருகிறேன். எனக்கு எல்லோருடைய அன்பும்,ஆதரவும் தேவை.ஒரு நடிகனாக, கலைஞனாக மட்டும் இருக்க விரும்பகிறேன். எனக்கு அரசியலில் ஈடுபாடு கிடையாது, அங்கு போகவும்மாட்டேன். வல்லவன், 60 சதவீதம் முடிந்து விட்டது. இப்படத்தில் மொத்தம் 7 பாடல்கள் வருகின்றன. அதில் 3 பாடல்களைமுடித்துவிட்டோம், நான்கு பாடல்கள் பாக்கி உள்ளது. தூங்கக் கூட நேரம் இல்லாமல் தீவிரமாக உழைத்து வருகிறேன். மே மாதம் படம்ரிலீஸ் ஆகி விடும்.வல்லவனுக்குப் பிறகு சிறிது காலம் டைரக்ஷனுக்கு இடைவெளி விடலாம் என்றிருக்கிறேன். நடிப்பில் தீவிர கவனம் செலுத்தப்போகிறேன். இடையில் நேரம் கிடைத்தால் டைரக்ஷன் செய்வேன். எனது கதை, வசனம், இயக்கத்தில் அப்பாவையும்இயக்குவேன் என்றார் சிம்பு.பேட்டியின்போது உடனிருந்த விஜய.டி.ராஜேந்தர் தலையை கோதியபடி, முடியை சிலுப்பியபடி கூறுகையில், தமிழர்கள் கேக்வெட்டி பிறந்த நாள் கொண்டாடுவதில்லை. அதனால் சிம்புவும் கேக் வெட்டவில்லை என்றார்.

Posted By:
Subscribe to Oneindia Tamil

எனக்கு அரசியலே வேண்டாம், என்னை விட்டு விடுங்கள் என்று நடிகர் சிம்பு கூறியுள்ளார்.

மன்மதன் சிம்புவுக்கு 22வது பிறந்த நாளாகும். இதையடுத்து வியாழக்கிழமை நள்ளிரவு ஆஞ்சநேயர் கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டார். பின்னர் நேற்று காலை தனது தந்தை விஜய டி.ராஜேந்தர், தாயார் உஷா ஆகியோரிடம் ஆசி பெற்ற பின் தனது வீட்டில் கூடியிருந்த ரசிகர்களை சிம்பு சந்தித்தார்.

அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சிம்பு சரமாரிக் கேள்விகளுக்கு படு சகஜமாக பதிலளித்தார்.

சமீப காலமாக என்னைக் குறி வைத்து சில பத்திரிக்கைகள் செயல்படுகின்றன. நடக்காத ஒரு (அடி வாங்கியது) சம்பவத்தைநடந்ததாக ஒரு பத்திரிக்கை செய்தி வெளியிட்டது. பச்சைப் பொய்யை எப்படி இப்படி எழுதினார்கள் என்பது புரியவில்லை.

அதற்கு எதிராக போராட்டம் நடத்தலாம் என ரசிகர்கள் விரும்பினார்கள். ஆனால் அதை நான் தடுத்து விட்டேன். எனக்கு யார்மீதும் காழ்ப்புணர்ச்சி கிடையாது. நடுநிலையான நடிகனாக நான் இருந்து வருகிறேன். எனக்கு எல்லோருடைய அன்பும்,ஆதரவும் தேவை.

ஒரு நடிகனாக, கலைஞனாக மட்டும் இருக்க விரும்பகிறேன். எனக்கு அரசியலில் ஈடுபாடு கிடையாது, அங்கு போகவும்மாட்டேன்.


வல்லவன், 60 சதவீதம் முடிந்து விட்டது. இப்படத்தில் மொத்தம் 7 பாடல்கள் வருகின்றன. அதில் 3 பாடல்களைமுடித்துவிட்டோம், நான்கு பாடல்கள் பாக்கி உள்ளது. தூங்கக் கூட நேரம் இல்லாமல் தீவிரமாக உழைத்து வருகிறேன். மே மாதம் படம்ரிலீஸ் ஆகி விடும்.

வல்லவனுக்குப் பிறகு சிறிது காலம் டைரக்ஷனுக்கு இடைவெளி விடலாம் என்றிருக்கிறேன். நடிப்பில் தீவிர கவனம் செலுத்தப்போகிறேன். இடையில் நேரம் கிடைத்தால் டைரக்ஷன் செய்வேன். எனது கதை, வசனம், இயக்கத்தில் அப்பாவையும்இயக்குவேன் என்றார் சிம்பு.

பேட்டியின்போது உடனிருந்த விஜய.டி.ராஜேந்தர் தலையை கோதியபடி, முடியை சிலுப்பியபடி கூறுகையில், தமிழர்கள் கேக்வெட்டி பிறந்த நாள் கொண்டாடுவதில்லை. அதனால் சிம்புவும் கேக் வெட்டவில்லை என்றார்.


சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil