»   »  சிம்பு கேட்கும் மல்லிகை

சிம்பு கேட்கும் மல்லிகை

Posted By:
Subscribe to Oneindia Tamil
வல்லவன் முடியப் போகிறது என்ற செய்தி ஒருபக்கம் வந்து கொண்டிருந்தாலும்அவ்வளவு சீக்கிரம் படத்தை முடிக்க சிம்பு விட மாட்டார் போலத் தெரிகிறது.

வல்லவனை ஆரம்பித்த நேரம் சரியில்லையோ என்னவோ, தொடர்ந்து அடுத்தடுத்துசிக்கலில் சிக்கி தவிக்கிறார் வல்லவன் படத் தயாரிப்பாளர் தேனப்பன்.

முதலில் சிம்பு வைத்த செலவுகளால் தடுமாறிப் போனார் தேனப்பன். அடுத்து ரீமாசென்னால் பஞ்சாயத்து ஏற்பட்டது. ரீமா பிரச்சினை சரியாகி அவர் மறுபடியும் நடித்துக்கொடுத்து வருகிறார்.

படம் முடியும தருவாயை நெருங்கி விட்டதால், ஒரு வழியாக முடியப் போகிறதுஎன்று கொஞ்சம் நிம்மதிப் பெருமூச்சு விட ஆரம்பித்தார் தேனப்பன். ஆனால் சிம்புபோட்ட ஒரு புது குண்டால் பீதியடைந்துள்ளாராம் தேனப்பன்.

படத்தில் ஒரு கிளாமர் டீச்சர் ரோல் இருக்கிறது. அதற்கு கிரணைப் போடலாம் என்றுதேனப்பனிடம் கூறியுள்ளார் சிம்பு. இதைக் கேட்டதும் அதிர்ந்துள்ளார் தேனப்பன்.ஏற்கனவே 3 ஹீரோயின்கள் உள்ளனர்.

இப்போது படம் முடியப் போகிறது. இந்த நேரம் பார்த்து மேலும் ஒரு நடிகையைப்போட்டால் செலவு தாங்க முடியாதேப்பா என்று கூறியுள்ளார் தேனப்பன். இருந்தாலும்தனது நிலையில் விடாப்பிடியாக இருந்ததால் சரி என்று அரை மனதுடன் ஒத்துக்கொண்டார் தேனப்பன். இது கொஞ்ச நாளைக்கு முன்பு நடந்த கதை.

நாமும் இதைச் சொல்லியிருந்தோம். ஆனால் இப்போது சிம்பு இன்னொருவெடிகுண்டைத் தூக்கி தேனப்பன் தலையிைல் போட்டுள்ளார்.

கிரண் வேண்டாம், மல்லிகா ஷெராவத்தைப் போடுவோம், ரொம்ப நல்லாருக்கும்என்று சிம்பு தேனப்பனிடம் சொல்ல, அவர் ஷாக் அடித்தவர் போல ஆகி விட்டாராம்.

அந்தப் பொண்ணு, சும்மா வந்து போனாலே 50 லட்சம் கேக்குமேய்யா, என்னாலஅவ்வளவு கொடுக்க முடியாது என்று புலம்பியுள்ளார் தேன்.

ஆனால் சிம்பு விடாப்பிடியாக இருக்கிறாராம். ஆனால் இந்த தேனப்பன் இறங்கிவரவில்லையாம். வேண்டுமானால் ஆட்டோகிராப்பில் நடத்தி மல்லிகாவைவேண்டுமானால் புக் பண்ணித் தருகிறேன். அவ்வளவுதான் என்னால் முடியும்,ஷெராவத்துக்கு எல்லாம் பணத்தைக் கரியாக்க முடியாது. யோசிச்சு சொல்லுங்க என்றுசிம்புவிடம் கட் அண்ட் ரைட்டாக கூறியுள்ளாராம்.

ஹீரோக்களின் நொங்கெடுப்புக்கு ஒரு அளவே இல்லையா?

Read more about: simbu wants mallika

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil