ஹீரோ .. ஹீரோ ..

By Staff
மகா நடிகனைத் தொடர்ந்து, ஷக்தி சிதம்பரத்தின் கூட்டணியில் அடுத்து லொள்ளுக்கு தயாராகி விட்டார் சத்யராஜ்.

மகா நடிகன் படத்தின் மூலம் ரஜினியில் ஆரம்பித்து விஜய்காந்த், அஜீத்தில் ஆரம்பித்து தனுஷ் வரை பலரையும் வகையாக வாரினார் சத்யராஜ்.

சத்யராஜ் மூலம் சினிமா ஹீரோக்கள் மீதான தனது நீண்ட நாள் கடுப்பை மொத்தமாய் வெளிக் காட்டினார் இயக்குனர் ஷக்தி சிதம்பரம். சத்யராஜும் படு தில்லாக சக நடிகர்களை போட்டு வாங்கினார்.

ஒத்துழைப்பு தரும் ஹீரோயினுக்காக சம்பளத்தையே விட்டுத் தரும் ஹீரோ, கேமராவுக்கு முன் தமிழில் பேசிவிட்டு பின்னால் திரும்பி தெலுங்கில் பேசும் ஹீரோக்கள் என அனைத்து ஹீரோக்களையும் சுரண்டிப் பார்த்தார் சத்யராஜ்.

இதனால், சத்யராஜ் மல்லாக்கப் படுத்துக் கொண்டு எச்சில் துப்புகிறார் என்று விஜயகாந்த் உள்ளிட்டவர்கள் வெளிப்படையாகவே விமர்சித்தார். மற்ற நடிகர்களும் விஜயகாந்த்திடம் சத்யராஜை அடக்கி வைக்குமாறு வேண்டினர்.

ஆனால், நான் ஒரு நடிகன் எந்த ரோலும் செய்வேன் என்ற சத்யராஜ், நான் ஒரு பச்சைத் தமிழன் என்றும் சேர்த்தே சொன்னதால் அவரை சீண்டினால் தங்களது உண்மை முகங்கள் வெளிப்பட்டுவிடும் என்பதால் அவரை அப்படியே விட்டுவிட்டார்கள்.

அடுத்தும் மகா நடிகனைப் போலவே இன்னொரு லொள்ளு சப்ஜெக்ட்டுடன் சத்யராஜும், ஷக்தி சிதம்பரம் கூட்டணி சேருகின்றனர்.

படத்துக்கு இங்கிலீஷ்காரன் என்று பெயர் வைத்துள்ளார் ஷக்தி. ஆங்கில மோகம் பிடித்து அலைகிறவர்களை இந்தப் படத்தில் போட்டுப் பார்க்கிறார்களாம். படத்திற்கு ஆங்கிலத்தில் பெயர் வைத்துவிட்டு படத்தின் தலைப்பின் கீழ் பஞ்ச் லைனாக, தமிழ் வாழ்க என்று குறிப்பிட்டுள்ளார்கள்.

மகா நடிகன் போலவே இந்தப் படம் சர்ச்சையை கிளப்பும் என்கிறார்கள்.

இங்கீலீஷ்காரன். ஆமா, இந்தப் படத் தலைப்புக்கு ராமதாஸ் எதிர்ப்பு தெரிவிக்கலாமா கூடாதா?

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X