மோனிகா பெலுச்சியும், சிம்புவும்
இப்போது இன்னொருசவாலை தூக்கிப் போட்டுள்ளார்.
பெரிய பையனாக வளர்ந்து கொண்டிருந்தபோது ஜோதிகா நடித்த பூ வெல்லாம்கேட்டுப்பார் படத்தைப் பார்த்த சிம்பு, நான் ஜோதிகாவுடன் ஜோடியாக நடிப்பேன்பாருங்கள் என்று தந்தையிடமே சவால் விட்டாராம்.
சொன்னபடியே ஜோதிகாவுடன் நடித்தார். மன்மதன் மட்டுமல்லாது, சரவணாவிலும்ஜோவுடன் ஜோடிபோட்டார்.
இப்போது புதிய சவாலை விடுத்துள்ளார் சிம்பு. இந்த சவால் கொஞ்சம் பெரிதானது.அதாவது தனது அடுத்த படத்தில் ஹாலிவுட் சூப்பர் நாயகிகளான மோனிகா பெலுச்சிஅல்லது சல்மா ஹையக் ஆகியோரில் ஒருவர் தான் எனது நாயகி என்று கூற (புலம்பஎன்றும் சொல்லலாம்) ஆரம்பித்துள்ளாராம் சிம்பு.
மிகச் சிறந்த நடிகையான பெலுச்சி, நடிப்பை விட நிர்வாண போஸ்களுக்கு மிகவும் பேர் போனவர். இவரதுநிர்வாண கேலண்டர்கள் உலகெங்கும் ரொம்ப பேமஸ்.
சவால்விட்டு சாதிப்பதில்கில்லாடியான சிம்பு, இப்படித்தான் சானியா மிர்ஸா எனதுபடத்தில் நடிக்கப் போகிறார் என்று கூறி வந்தார் சிம்பு. ஆனால் சானியாவோ,சிம்புவா, அப்படின்னா என்ன என்று கேட்டு சிம்புவுக்கு பெரிதாக ஆக்கர் வைத்தார்ஆக்கர்.
இதெல்லாம் நடக்கிற காரியமா என்று பலர் சொன்னாலும், சிம்பு செய்தாலும் செய்வார்என்று சொல்பவர்களும் கோலிவுட்டில் சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள்.
வெயிட் பண்ணித்தான் பாப்போமே...


Click it and Unblock the Notifications