சிம்பு மருமகப் புள்ள, குஷ்பு மாமியார்: சூப்பர் ஹிட் பட ரீமேக்கை இயக்கும் சுந்தர் சி.?
சென்னை: தெலுங்கில் சூப்பர் ஹிட்டான அத்தாரின்டிகி தாரேதி படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்க சிம்புவை அணுகியுள்ளார்களாம்.
சிம்பு சமத்துப் பிள்ளையாக மாறிய பிறகு கோலிவுட்டின் பிசியான ஹீரோக்களில் ஒருவராகிவிட்டார். மணிரத்னத்தின் செக்கச் சிவந்த வானம் படத்தில் நடித்து முடித்துள்ளார். வெங்கட் பிரபுவின் மாநாடு படத்தில் நடிக்க உள்ளார்.

இந்நிலையில் தெலுங்கில் பவன் கல்யாண், நதியா, சமந்தா நடிப்பில் வெளியாகி சூப்பர், டூப்பர் ஹிட்டான அத்தாரின்டிகி தாரேதியின் தமிழ் ரீமேக்கில் நடிக்கும் வாய்ப்பு சிம்புவுக்கு கிடைத்துள்ளது.
அத்தாரின்டிகி தாரேதி படத்தை சுந்தர் சி. தமிழில் ரீமேக் செய்வதாகவும், அதில் சிம்புவின் அத்தையாக குஷ்பு நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது.
சிம்பு வெங்கட் பிரபுவின் படத்தில் நடித்துக் கொண்டே சுந்தர் சி. படத்திலும் நடிப்பார் என்று கூறப்படுகிறது. எது எப்படியோ, கால்ஷீட் பிரச்சனை வராமல் இருந்தால் சரி.


Click it and Unblock the Notifications











