இந்த சிம்புவும், தனுஷும் ஓவர் பாசக்கார பய புள்ளைகளாகிட்டாங்களே!
சென்னை: சிம்பு தனது நண்பன் தனுஷ் தயாரித்த காக்கா முட்டை என்ற குறும்படத்தில் நடித்துள்ளார்.
சிம்புவும், தனுஷும் ஒரு காலத்தில் எதிரிகளாக இருந்ததும் அப்படி தான். தற்போது நண்பேன்டாவாகி பாச மழை பொழிவதும் அப்படி தான். ட்விட்டர் துவங்கி பொது இடங்கள் வரை இருவருக்கு இடையேயும் பாசமோ, பாசமாக உள்ளது.
இந்நிலையில் இந்த நட்பு அடுத்த கட்டத்திற்கு சென்றுள்ளது.

காக்கா முட்டை
தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரித்த காக்கா முட்டை குறும்படம் திரைப்பட விழாக்களில் சக்கை போடு போடுகிறது.

சிம்பு
தனுஷ் தயாரித்த காக்கா முட்டையில் சிம்பு நடித்திருக்கிறார். அதுவும் சிம்புவாகவே வந்துள்ளார். இந்த நடிப்பு நண்பனுக்காக... நட்புக்காக...

சேர்ந்து
தனுஷும், சிம்புவும் சேர்ந்து ஒரு படத்தில் நடிப்பார்களா என்று ரசிகர்கள் கேட்டு வருகின்றனர். அதுவும் விரைவில் நடந்தாலும் நடக்கலாம்.

நல்லது
திரை உலகின் இரண்டு ஹீரோக்கள் பகையை எல்லாம் மறந்து நட்பு பாராட்டுவது பாராட்டுக்குரிய விஷயமாகும்.


Click it and Unblock the Notifications











