ஒருவரையொருவர் இப்படி பார்த்துக்கொள்ளுங்கள்.. திருமணமானவர்களுக்கு சிம்பு சொன்ன அட்வைஸ்

சென்னை: நடிகர் சிம்பு தற்போது தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் தனது 48ஆவது படத்தில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார். இதனை கமல் ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் பிரமாண்டமாக தயாரிக்கிறது. இரண்டாவது இன்னிங்ஸில் சிம்பு தரமான கம்பேக் கொடுத்திருப்பதால் இந்தப் படத்தின் மீது எக்கச்சக்க எதிர்பார்ப்பு இருக்கிறது. இது தவிர்த்து கமல் ஹாசன் நடிக்கும் தக் லைஃப் படத்திலும் நடிக்கிறார் சிம்பு. சூழல் இப்படி இருக்க திருமணமானவர்களுக்கு சிம்பு ஒரு அட்வைஸ் செய்திருக்கிறார்.

எஸ்டிஆர் என ரசிகர்களால் அழைக்கப்படும் சிம்பு சில காரணங்களால் சினிமாவிலிருந்து ஒதுங்கியிருந்தார். பிறகு உடல் எடையை குறைத்து எண்ணங்களை ஒருநிலைப்படுத்தி ஈஸ்வரன் படத்தின் மூலம் ரீ எண்ட்ரி கொடுத்தார். ஆனால் படம் சரியாக போகவில்லை. அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடித்தார். அந்தப் படம் மெகா ப்ளாக்பஸ்டர் ஆனது. சிம்புவின் நடிப்பும், வெங்கட் பிரபுவின் மேக்கிங்கும் ரசிகர்களுக்கு ரொம்பவே பிடித்துப்போக படமானது நூறு கோடி ரூபாய் வசூலித்து கெத்து காட்டியது.

Simbu STR 48 48

அடுத்தடுத்த ஹிட்: மாநாடு வெற்றிக்கு பிறகு சிம்பு வெந்து தணிந்தது காடு, பத்து தல ஆகிய படங்களில் நடித்தார். இவற்றில் வெந்து தணிந்தது காடு படம் சூப்பர் ஹிட்டானது. அதில் சிம்புவின் நடிப்பு பெரிதளவு பேசப்பட்டது. அடுத்து நடித்த பத்து தல திரைப்படம் சரியாக போகவில்லை. சூழல் இப்படி இருக்க கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் இயக்குநர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் தனது 48ஆவது படத்தில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார் சிலம்பரசன்.

எஸ்டிஆர் 48: இந்தப் படத்தை கமல் ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கிறது. தேசிங்கு பெரியசாமி இயக்கம் என்பதால் கண்டிப்பாக இந்தப் படம் ஹிட்டாகும் என்ற நம்பிக்கை எஸ்டிஆர் ரசிகர்களிடம் இருக்கிறது. இப்படத்துக்காக சிம்பு செம ஃபிட்னெஸ்ஸோடு இருக்கிறார். அதுமட்டுமின்றி மார்ஷியல் ஆர்ட்ஸ் உள்ளிட்ட கலைகளையும் அவர் கற்றுக்கொண்டதாக தெரிகிறது. இதற்காக அவர் தாய்லாந்து, லண்டன் உள்ளிட்ட நாடுகளுக்கு சென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

படம் ட்ராப்?: படத்தின் அறிவிப்பு வெளியானதோடு அதற்கு பிறகு எந்தவிதமான மூவ்மெண்ட்டும் தெரியவில்லை. இதன் காரணமாக ஒருவேளை படத்தை ட்ராப் செய்துவிட்டார்களோ என்ற சந்தேகம் ரசிகர்களிடையே எழுந்தது. அதற்கும் படக்குழு எந்த பதிலையும் அளிக்காமல் மௌனம் காத்துவந்தது. அதனையும் கவனித்த ரசிகர்கள், அவ்ளோதான் எஸ்டிஆர் 48 முடிந்துவிட்டதுபோல என்று உறுதியாகவே சமூகவலைதளங்களில் ஓபனாக பேச ஆரம்பித்தனர். ஆனால் சிம்பு ரசிகர்களுக்கு மகிழ்ச்சி தரும் விதமாக படத்தின் க்ளிம்ப்ஸ் மற்றும் போஸ்டர்கள் வெளியாகின.

தக் லைஃப்: எஸ்டிஆர் 48 படம் தவிர்த்து கமல் ஹாசன் நடிக்கும் தக் லைஃப் படத்திலும் சிம்பு நடித்துவருகிறார். முதன்முறையாக சிம்பு கமல் ஹாசனுடன் இணைந்து நடிப்பதால் அந்த காம்போவை திரையில் பார்ப்பதற்கு ரசிகர்கள் ஆவலோடு இருக்கிறார்கள். இதற்கிடையே சிம்புவுக்கு இன்னமும் திருமணம் நடக்காமல் இருக்கிறது. அவருக்கு எப்போது திருமணம் நடக்கும் என்றும் அவரது ரசிகர்கள் கேள்விகளை தொடர்ந்து கேட்டுவருகிறார்கள்.

சிம்பு அட்வைஸ்: இந்நிலையில் மெட்ரோ படத்தில் நடித்த கிரிஷ் திருமணத்தில் சிம்பு கலந்துகொண்டார். அப்போது அவர் பேசுகையில், "திருமணமான பிறகு பெண்களை அவரது தந்தையை போல் ஒரு ஆண் பார்த்துக்கொள்ள வேண்டும். அதேபோல் தங்களின் தந்தையை பார்த்துக்கொள்வதுபோல் ஆணை பெண்கள் பார்த்துக்கொள்ள வேண்டும்" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X