சிம்பு, அருண் விஜய் மீண்டும் இணையும் புதிய திரைப்படம்!

சென்னை : ஈஸ்வரன் வெற்றிக்குப் பிறகு சிம்பு அடுத்தடுத்த படங்களில் புயல் வேகத்தில் நடித்து முடித்துக் கொடுத்து வருகிறார்.

அந்த வகையில் இப்பொழுது கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகி வரும் வெந்து தணிந்தது காடு படத்திற்காக உடலை வருத்திக் கொண்டு நடித்து வருகிறார்.

இந்த நிலையில் சிம்பு மற்றும் அருண் விஜய் செக்கச் சிவந்த வானம் படத்திற்கு பிறகு புதிய திரைப்படத்தில் மீண்டும் இணைந்து நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

நீண்ட காலமாக கிடப்பில் கிடந்த மாநாடு

நீண்ட காலமாக கிடப்பில் கிடந்த மாநாடு

ஈஸ்வரன் படத்தின் மூலம் சினிமாவிற்கு மீண்டும் அதிரடி என்ட்ரி கொடுத்தது மட்டுமல்லாமல் வெய்ட்டிங்கள் இருந்த அனைத்து படங்களையும் ஒவ்வொன்றாக நடித்து முடித்துக் கொடுத்து வருகிறார் நடிகர் சிம்பு. அந்த வகையில் நீண்ட காலமாக கிடப்பில் கிடந்த மாநாடு திரைப்படம் முழுவீச்சில் படப்பிடிப்பு நடத்தி முடிக்கப்பட்டு இப்பொழுது இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று கொண்டுள்ளது.

நவம்பர் 25ஆம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது

நவம்பர் 25ஆம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் முற்றிலும் வித்தியாசமான கதைக்களத்தில் உருவாக்கியுள்ள இந்த படம் தீபாவளிக்கு ரிலீசாக இருந்தது ஆனால் கடும் போட்டி காரணமாக ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டு நவம்பர் 25ஆம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. மாநாடு படத்தைத் தொடர்ந்து கௌதம் மேனன் இயக்கத்தில் வெந்து தனிந்தது காடு என்ற படத்தில் நடித்து வருகிறார். வெந்து தனிந்தது காடு படத்திற்காக சிம்பு உடலை வருத்திக் கொண்டு பயங்கரமாக எடையை குறைத்து நடித்து வருகிறார்.

பக்கா வில்லேஜ் கதாபாத்திரத்தில்

பக்கா வில்லேஜ் கதாபாத்திரத்தில்

அக்னி சிறகுகள், சினம்,பார்டர் ஆகிய படங்களை தொடர்ந்து அருண்விஜய் இப்பொழுது இயக்குனர் ஹரி இயக்கத்தில் யானை என்ற படத்தில் பக்கா வில்லேஜ் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இதில் அருண் விஜய்க்கு ஜோடியாக நடிகை பிரியா பவானி சங்கர் நடிக்க சமுத்திரக்கனி அருண் விஜய்யின் அண்ணனாக நடிக்கிறார். இறுதி கட்ட படப்பிடிப்பு காரைக்குடியில் தற்போது தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டுள்ளது.

சிம்பு, அருண் விஜய் மீண்டும் இணையும்

சிம்பு, அருண் விஜய் மீண்டும் இணையும்

சிறுவயது முதலே மிகவும் நெருங்கிய நண்பர்களாக பழகி வரும் சிம்பு மற்றும் அருண் விஜய் செக்கச் சிவந்த வானம் திரைப்படத்தில் ஒன்றாக இணைந்து நடித்திருந்தனர். இந்நிலையில் சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு அடுத்து நடிக்க உள்ள புதிய திரைப்படத்தில் அருண் விஜய்யும் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. அருண் விஜய் மற்றும் சிம்பு இணைந்து நடித்த செக்கச் சிவந்த வானம் மிகப்பெரிய வெற்றிபெற்ற சூழலில் இப்பொழுது இந்த மெகா கூட்டணி மீண்டும் இணைய உள்ளது தமிழ் ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X