டி. ராஜேந்தர் போட்ட பரபரப்பு ஆடியோ.. சிம்பு பிரச்னையை முடித்து வைத்த ஐசரி கணேஷ்.. எத்தனை கோடி?
சென்னை: வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு, விஜய் சேதுபதி, பிரியங்கா மோகன் நடித்து வரும் 'அரசன்' படத்தின் படப்பிடிப்பை ஐசரி கணேஷ் நிறுத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சிம்புவின் படங்கள் தொடர்ந்து தாமதமாகி வந்த நிலையில், அவர் துபாயில் இருப்பது தான் காரணம் என கலாய்க்கப்பட்டது.
ஆனால், ஐசரி கணேஷிடம் வாங்கிய அட்வான்ஸ் பணத்தை திருப்பித் தராமலும் படத்தில் நடித்துக் கொடுக்காமலும் சிம்பு கால தாமதம் செய்தது தான் இந்த பிரச்னைக்கு காரணம் எனக் கூறுகின்றனர்.

கெளதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு 2 படத்தில் நடிப்பதற்காக அட்வான்ஸ் வாங்கிய சிம்பு முதல் பாகமே சரியாக ஓடாத நிலையில், 2வது பாகத்தில் நடிப்பது வீண் முயற்சி என ஒதுங்கிவிட்டதாக கூறப்படுகிறது.
அரசன் நிறுத்தம்: கலைப்புலி எஸ். தாணு வெற்றிமாறன் மற்றும் சூர்யாவை வைத்து வாடிவாசல் படத்தை பண்ண வேண்டும் என பல வருடங்களாக முயற்சித்து வருகிறார். ஆனால், அந்த படம் ஆரம்பமாகவே இல்லை. இந்நிலையில், சிம்புவை வைத்து அரசன் படத்தை வெற்றிமாறன் இயக்கத்தில் பண்ண முடிவெடுத்தார். சிம்புவும் உடனடியாக மற்ற படங்களை நிறுத்தி வைத்துவிட்டு வெற்றிமாறன் மற்றும் தாணு படத்துக்கு கால்ஷீட் கொடுத்தார். ஆனால், ஒரு சில ஷெட்யூல் மட்டுமே முடிந்த நிலையில், அரசன் படத்தின் படப்பிடிப்பை ஐசரி கணேஷ் நிறுத்திவிட்டார்.
ஆறரை கோடி பஞ்சாயத்து: தனது மகன் சிம்புவின் படத்தை ஐசரி கணேஷ் நிறுத்திய நிலையில், சில தினங்களுக்கு முன் டி. ராஜேந்தர் கொந்தளித்து ஆடியோ ஒன்றை வெளியிட்டார். இந்நிலையில், இதுதொடர்பாக சுமூக உடன்பாட்டிற்கு தாணு ஏற்பாடு செய்த நிலையில், சிம்பு 4 கோடி ரூபாயும் தாணு 2.50 கோடி ரூபாயும் கொடுத்து ஐசரி கணேஷின் 6.50 கோடி பஞ்சாயத்தை பேசி தீர்த்துள்ளதாக பத்திரிகையாளர் பிஸ்மி தகவல் தெரிவித்துள்ளார்.
ராஜன் வகையறா வேற: இதற்கிடையே வெற்றிமாறன் தனது நேரத்தை வீணடிக்கக் கூடாது என கென் கருணாஸை வைத்து 'ராஜன் வகையறா' எனும் படத்தையும் இயக்க ஆரம்பித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. அரசன் பட பிரச்னை முடிந்துள்ள நிலையில், கூடிய விரைவில் அரசன் படத்தின் ஷூட்டிங்கை தொடங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











