சிம்பு ஒரு முடிவோடுதான் இருக்காரு போல.. வின்டேஜ் எஸ்டிஆர்.. ரசிகர்கள் உற்சாகம்
சென்னை: எஸ்டிஆர் என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் சிம்பு தற்போது கமல் ஹாசனுடன் தக் லைஃப் படத்தில் நடித்து முடித்திருக்கிறார். முதன்முறையாக கமலுடன் அவர் இணைந்து நடித்திருப்பதால் உச்சக்கட்ட எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. ஜூன் ஐந்தாம் தேதி இந்தப் படம் ரிலீஸாகவிருக்கும் சூழலில்; அவரது புதிய படம் குறித்த தகவல் ஒன்று வெளியாகி அவர் ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
சிறு வயதிலிருந்தே சினிமாவில் நடித்துவரும் சிம்பு இதுவரை 40க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். இடையில் இரண்டு காதல் தோல்விகளை சந்தித்தார் அவர். இரண்டாவது காதல் தோல்விக்கு பிறகு ஆன்மீக வழியில் சென்ற அவர் சில காலங்கள் சினிமாவில் நடிக்காமல் இருந்தார். அதேசமயம் அவர் எப்போது மீண்டும் சினிமாவில் நடிப்பார் என்று ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்திருந்தார்கள். அந்தவகையில் அவர் வந்தா ராஜாவாதான் வருவேன், செக்கச்சிவந்த வானம் படங்களில் நடித்தார். அந்தப் படங்களில் அவர் ரொம்பவே பருமனாக காணப்பட்டார்.
இடையில் எடுத்த பிரேக்: ஃபுல் ஃபார்மில் சென்றுகொண்டிருந்த சிம்புவுக்கு இடையில் இரண்டு காதல் தோல்விகள் அரங்கேறின.நயனுடனான பிரேக்கப்புக்கு பிறகு அவர் நடித்துக்கொண்டுதான் இருந்தார். ஆனால் ஹன்சிகாவுடனான காதல் முறிவுக்கு பிறகு அவரது சிந்தனைகள் எல்லாம் ஆன்மீகம் பக்கம் சென்றது. மேலும் தயாரிப்பாளர் சங்கத்தில் சில பிரச்னைகள், உடல் எடை அதிகரித்தல் என சிம்புவால் ஒருமித்த கவனத்தோடு சினிமாவை அணுக முடியவில்லை. இதன் காரணமாக இடையில் கொஞ்சம் பிரேக் எடுத்தார்.

சிம்புவின் இரண்டாவது இன்னிங்ஸ்: இப்படிப்பட்ட நிலைமையில்தான் எண்ணங்களை ஒருமுகப்படுத்தி, உடல் எடையை குறைத்து தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கினார். அதில் அவர் நடித்த மாநாடு, வெந்து தணிந்தது காடு ஆகிய படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தன. அந்த வெற்றிகள் கொடுத்த உற்சாகத்தின் காரணமாக மீண்டும் பழைய சிம்புவாக மாறி தொடர்ந்து படங்களில் கமிட்டாகியிருக்கிறார் அவர். எனவே அவரது ரசிகர்கள் உச்சக்கட்ட வைபில் இருக்கிறார்கள்.
செம லைன் அப் வைத்திருக்கும் சிம்பு: சிம்பு அடுத்ததாக தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில், ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில், அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார். இப்போதைய தமிழ் சினிமாவின் பல்ஸை தெரிந்துகொண்டு சரியாக இளம் இயக்குநர்களுடன் அவர் கைகோர்த்திருப்பது ஆரோக்கியமான ஒன்றே. எனவே வின்டேஜ் சிம்புவை இனி பார்க்கலாம் என்கிற நம்பிக்கை திரைத்துறையில் பிறந்திருக்கிறது.
தக் லைஃப் சிம்பு: இதற்கிடையே ஒருபக்கம் இளம் இயக்குநர்களுடன் கைகோர்த்த அவர்; மறுபக்கம் சீனியர் இயக்குநர் மணிரத்னத்துடனும் இணைந்திருக்கிறார். அதன்படி கமல் ஹாசனுடன் தக் லைஃப் படத்தில் நடித்து முடித்திருக்கிறார். முதன்முறையாக கமலும், சிம்புவும் இணைந்து நடிப்பதால் இருவரும் ஸ்க்ரீனில் எந்த மாதிரியான எனர்ஜியை கொடுக்கப்போகிறார்கள் என்ற ஆவல் அதிகரித்திருக்கிறது. இந்தப் படம் வரும் ஜூன் மாதம் ரிலீஸாகவிருக்கிறது.
அடுத்த படம்: இந்நிலையில் சிம்புவின் புதிய படம் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி மீண்டும் அவர் மணிரத்னம் இயக்கத்தில் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே இரண்டு பேரும் செக்க சிவந்த வானம், தக் லைஃப் படங்களில் பணியாற்றியிருக்கிறார்கள். சிம்புவுக்கும் மணிக்கும் இடையே புரிதல் ஆழமாகியிருப்பதால்தான் மீண்டும் அவர்கள் இணைகிறார்கள் என்றே கருதப்படுகிறது. இந்தத் தகவல் அவரது ரசிகர்களிடையே உச்சக்கட்ட மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.


Click it and Unblock the Notifications











