ஒரே நாளில் மோதும் பிரபுதேவா, சிம்பு படங்கள்!
சென்னை : நடிகர் சிம்புவின் நடிப்பில் இயக்குனர் வெங்கட்பிரபுவின் இயக்கத்தில் உருவாகியுள்ள மாநாடு திரைப்படம் இன்சப்ஷன் ஸ்டைலில் மிகவும் வித்தியாசமான கதை களத்தில் உருவாகி உள்ளது.
Recommended Video
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் பிரபுதேவா பஹீரா படத்தில் கொடூரமான சைக்கோ கொலைகாரனாக நடித்துள்ளார்.
தீபாவளிக்கு ரிலீசாகும் என எதிர்பார்க்கப் பட்ட மாநாடு இப்பொழுது தீபாவளி ரேஸில் இருந்து விலகியிருக்க அடுத்த மாதம் பஹீரா மற்றும் மாநாடு ஒரே நாளில் ரிலீஸ் ஆக உள்ளதாக தகவல்கள் தெரியவந்துள்ளது.

இன்ஷப்ஷன் ஸ்டைலில்
நடிகர் சிம்பு இப்போது சினிமாவில் தனது செகண்ட் இன்னிங்சை தொடங்கி டாப் கியரில் போய்க்கொண்டிருக்கிறார். அடுத்தடுத்த படங்களில் நடித்து முடித்து கொடுத்து வரும் இவர் நீண்ட காலமாக இழுபறியில் இருந்த மாநாடு படத்தையும் முடித்துக் கொடுத்துள்ளார். இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ள இந்த திரைப்படத்தில் எஸ் ஜே சூரியா, எஸ்ஏ சந்திரசேகர், என பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தின் டீசர் மற்றும் டிரைலரை பார்த்த அனைவரும் இன்ஷப்ஷன் ஸ்டைலில் படம் வேற லெவல்ல இருக்கும் போலயே என கூறிவருகின்றனர்.

தீபாவளிக்கு வெளியாவதாக
மாநாடு படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடிகை கல்யாணி பிரியதர்ஷன் நடித்துள்ளார். பெரும் எதிர்பார்ப்பில் உருவாகி வரும் இந்த திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் தீபாவளி ரேஸில் பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் வெளியாவதால் தீபாவளி ரேஸில் இருந்து மாநாடு விலகுவதாக அறிவிக்கப்பட்டது.

பெண்களை காதலித்து கொலை செய்யும்
திரிஷா இல்லன்னா நயன்தாரா, அன்பானவன் அசராதவன் அடங்காதவன் உள்ளிட்ட படங்களை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் தற்போது பிரபுதேவா நடித்துள்ள திரைப்படம் பஹீரா . 8 கதாநாயகிகள் இந்தப் படத்தில் நடித்திருக்க வித்தியாச வித்தியாசமான கெட்டப்பில் பிரபுதேவா மிரட்டியுள்ளார். இதில் அழகான பெண்களை காதலித்து ஒவ்வொருவராக கொலை செய்யும் சைக்கோ கொலைகாரன் கதாபாத்திரத்தில் பிரபுதேவா நடித்துள்ளார்.

ஒரே நாளில் மோதுகின்றன
இவ்வாறு ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் மாநாடு மற்றும் பஹீரா திரைப்படங்கள் இப்பொழுது ஒரே நாளில் மோதுகின்றன என்ற தகவல் கிடைத்துள்ளது. அதன்படி நவம்பர் 25ஆம் தேதி பஹீரா மற்றும் மாநாடு ரிலீஸ் எனவும் கூறப்படுகிறது. இரண்டும் வேறு வேறு கதை களத்தில் வேறு வேறு இயக்குனர்கள் என தயாராகி இருந்தாலும் வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகியுள்ளதால் இந்த இரண்டு திரைப்படங்களின் மீதும் ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்பில் உள்ளனர்.


Click it and Unblock the Notifications











