இத்தனை கோடி சம்பளம் கேட்டாரா சிம்பு?.. வெற்றிமாறனுக்கும் டாட்டா?.. பரபரப்புக்கும் கோலிவுட்!

சென்னை: வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படத்துக்கு தனுஷ் NOC கேட்டதாக வதந்திகள் பரவிய நிலையில், அப்படியெல்லாம் இல்லை தனுஷ் எப்போதுமே என்னுடைய நல்ல நண்பர் பணமே வேண்டாம் என சொல்லி வடசென்னை யூனிவர்ஸில் சிம்பு நடிக்க சம்மதம் தெரிவித்தார் என வெற்றிமாறன் முதல் முறையாக தனது யூடியூப் சேனலில் ஒரு வீடியோ வெளியிட்டு இருந்தார்.

விரைவில், அவர் இன்னொரு வீடியோவை வெளியிட வேண்டிய நிலை வந்துவிடும் போல தெரிகிறது. அந்தளவுக்கு சிம்பு மற்றும் வெற்றிமாறன் இணைந்து உருவாகும் வடசென்னை யூனிவர்ஸ் திரைப்படம் டிராப் என்கிற தகவல் தீயாக பரவி வருகிறது.

Simbu and Vetrimaaran combo movie gets dropped rumors sparks due to salary issues

அதற்கு மிக முக்கிய காரணமே பிராஃபிட் ஷேரில் இருந்து திடீரென சிம்பு சம்பளமாக பல கோடிகளை தயாரிப்பாளர் தாணுவிடம் கேட்டுவிட்டார் என்று பேச்சுக்கள் புகையத் தொடங்கியுள்ளன.

வாடிவாசல் இழுபறி: வெற்றிமாறனுக்கும் தனுஷுக்கும் செட்டாவது போல மற்ற எந்த முன்னணி ஹீரோவுக்கும் செட்டாகாது போலத் தெரிகிறது என்கின்றனர். கடந்த பல வருடங்களாக வாடிவாசல் படத்தை அறிவித்து விட்டு இதுவரை அந்த படம் தொடங்கவே இல்லை. ஆனால், அது டிராப் என்றும் கூறாமல், கண்டிப்பாக வரும் வரும் என்று வெற்றிமாறன் தரப்பும் தாணு தரப்பும் சொல்லிக் கொண்டே இருக்கின்றனர். ஆனால், சூர்யா அடுத்தடுத்து குறுகிய காலத்தில் படங்களில் நடித்து மீண்டும் தியேட்டரிக்கல் வசூலை அள்ளும் நோக்கில் பயணித்து வருகிறார்.

சிம்பு - வெற்றிமாறன் படம் டிராப்பா?: வெற்றிமாறன் படத்துக்காக மீண்டும் 10 கிலோ வரை சிம்பு எடை குறைத்தார் என்றும் ப்ரோமோ ஷூட் எல்லாம் எடுக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியான நிலையில், தற்போது சிம்பு - வெற்றிமாறன் படத்தின் படப்பிடிப்பு தொடங்காமல் இருந்து வரும் நிலையில், படமே டிராப் என்கிற தகவல் காட்டுத் தீ போல கோடம்பாக்கம் முழுவதும் பரவி வருகிறது. ஆனால், அடுத்த மாதம் ஆகஸ்ட் 15ம் தேதிக்கு மேல் ஷூட்டிங் கண்டிப்பாக தொடங்கும் என்றும் சிம்பு தற்போது தாய்லாந்தில் தனது உடலை அந்த படத்துக்கு ஏற்றவாறு தயார் படுத்தி வருகிறார் என்கின்றனர்.

45 கோடி சம்பளம் கேட்டாரா?: இதற்கிடையே இந்த பிரச்சனைக்கு காரணமே சிம்பு தான் என்றும் பிராஃபிட் ஷேர் அடிப்படையில் இந்த படத்தில் நடிக்க ஒப்புக் கொண்ட சிம்பு, தற்போது திடீரென வெற்றிமாறன் படம் பெரிய வசூல் வரவில்லை என்றால் என்ன செய்வது என்கிற யோசனையில் 45 கோடி தனக்கு சம்பளமாக கொடுக்க வேண்டும் என கேட்டது தான் தயாரிப்பாளர் தரப்புக்கு சிக்கலை உருவாக்கியிருப்பதாகவும், இதில், சுமூக முடிவு ஏற்பட்டால் தான் சிம்பு தாய்லாந்தில் இருந்து ஷூட்டிங்கிற்கு வருவார் என்றும் பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.

பார்க்கிங் இயக்குநருக்கு டாட்டா: முன்னதாக நடிகர் சிம்பு ஆகாஷ் பாஸ்கரன் தயாரிப்பில் பார்க்கிங் பட இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணா இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்து, பூஜையெல்லாம் போட்ட பிறகு ஏற்பட்ட பிரச்சனை காரணமாக அந்த இயக்குநருக்கு டாட்டா காட்டியதையும் சுட்டிக் காட்டி வருகின்றனர். மேலும், பல ஆண்டுகளாக சிம்புவை நம்பிக் கொண்டு தனது திறமையை மொத்தமாக வீணடித்து வருகிறார் தேசிங்கு பெரியசாமி என்றும் கூறுகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X